Sahitya Akademi Award | சாகித்திய அகாதமி விருது_00.1
Tamil govt jobs   »   Study Materials   »   Sahitya Akademi Award

Sahitya Akademi Award | சாகித்திய அகாதமி விருது

Sahitya Akademi Award: If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topic Sahitya Akademi Award, Sahitya Akademi Award Selection Committee Members, List of Sahitya Akademi Award Winners, Sahitya Akademi Award Selection Procedures, etc. on this page.

Sahitya Akademi Award: சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. Sahitya Akademi Award பற்றி இங்கு விரிவாக காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Sahitya Akademi Award Overview

சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954-இல் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு.அது இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு தொடங்கப்பட்டது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.

இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்வது சாகித்ய அகாதமி.

Read More: How to crack TNPSC group 2 in first attempt

Sahitya Akademi Award Committee Members

சாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்:

 • நெ. து. சுந்தரவடிவேலு
 • நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்)

Read More: TNPSC Group 2/2A Syllabus

Sahitya Akademi Award Prize Money

சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் ரூபாய் 5,000 வழங்கப்பட்டது. பின்னர் 1983-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

Read More: TNPSC Re-included Subject in Group 2 Syllabus – Check Latest Updates!!!

Sahitya Akademi Award Selection Procedure

இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றித் தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.

முதற்கட்டமாகத் தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஓரிரண்டு வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுநரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்குத் தேர்வுக்குச் செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது. தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார்.

Read More: Jnanpith Award for TNPSC

List of Sahitya Akademi Award winners for Tamil

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்:

வருடம் படைப்பு ஆசிரியர் குறிப்பு
2021 சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை அம்பை சிறுகதைத் தொகுப்பு
2020 செல்லாத பணம் இமையம் புதினம்
2019 சூல் சோ. தர்மன் புதினம்
2018 சஞ்சாரம் எஸ். ராமகிருஷ்ணன் புதினம்
2017 காந்தள் நாட்கள் இன்குலாப் கவிதை நூல்
2016 ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு
2015 இலக்கியச் சுவடுகள் ஆ. மாதவன் கட்டுரைத் தொகுப்பு
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டேனியல் செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைத் தொகுப்பு
2009 கையொப்பம் புவியரசு கவிதை நூல்
2008 மின்சாரப் பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைத் தொகுப்பு
2007 இலை உதிர் காலம் நீல பத்மநாபன் புதினம்
2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை நூல்
2005 கல்மரம் கோ. திலகவதி புதினம்
2004 வணக்கம் வள்ளுவ! தமிழன்பன் கவிதை நூல்
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் இரா. வைரமுத்து புதினம்
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி பாலசுப்ரமணியம் கவிதை நூல்
2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்
1999 ஆலாபனை அப்துல் ரகுமான் வசன கவிதைகளின் தொகுப்பு
1998 விசாரணைக் கமிஷன் சா. கந்தசாமி புதினம்
1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் புதினம்
1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பு
1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்
1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) புதினம்
1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்
1992 குற்றாலக் குறிஞ்சி கோவி. மணிசேகரன் வரலாற்றுப் புதினம்
1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்
1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்
1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் தன்வரலாற்றுக் கட்டுரை
1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கியத் திறனாய்வு
1987 முதலில் இரவு வரும் ஆதவன் சுந்தரம் சிறுகதைத் தொகுப்பு
1986 இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் க. நா. சுப்ரமண்யம் இலக்கியத் திறனாய்வு
1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கியத் திறனாய்வு
1984 ஒரு காவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்
1983 பாரதி: காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கியத் திறனாய்வு
1982 மணிக்கொடி காலம் பி. எஸ். ராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடை மா. ராமலிங்கம் இலக்கியத் திறனாய்வு
1980 சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்
1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைத் தொகுப்பு
1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் இலக்கியத் திறனாய்வு
1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்
1976 விருது வழங்கப்படவில்லை.
1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கியத் திறனாய்வு
1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கியத் திறனாய்வு
1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் புதினம்
1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்
1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைத் தொகுப்பு
1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்
1968 வெள்ளைப் பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை நூல்
1967 வீரர் உலகம் கி. வா. ஜகந்நாதன் இலக்கியத் திறனாய்வு
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் வாழ்க்கை வரலாற்று நூல்
1965 ஸ்ரீ ராமானுஜர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா வாழ்க்கை வரலாற்று நூல்
1964 விருது வழங்கப்படவில்லை.
1963 வேங்கையின் மைந்தன் அகிலன் (பி. வி. அகிலாண்டம்) புதினம்
1962 அக்கரைச் சீமையில் சோமு (மீ. ப. சோமசுந்தரம்) பயண நூல்
1961 அகல் விளக்கு மு. வரதராசன் புதினம்
1960 விருது வழங்கப்படவில்லை.
1959 விருது வழங்கப்படவில்லை.
1958 சக்கரவர்த்தித் திருமகன் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி இராமாயணம் – உரைநடை
1957 விருது வழங்கப்படவில்லை.
1956 அலை ஓசை கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) புதினம்
1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரைத் தொகுப்பு

 

Sahithya Akademi Award Conclusion

2021 – 1955 வரை சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நூலின் வகைகள் ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.Sahitya Akademi Award | சாகித்திய அகாதமி விருது_50.1வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: WIN15 (15% Offer)

Sahitya Akademi Award | சாகித்திய அகாதமி விருது_60.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் டிசம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.
Was this page helpful?
Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Change PasswordJoin India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?