சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் : பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்து அவர்களை அலற விட்ட மன்னன் மாவீரன் பூலித்தேவன். அந்த மன்னனின் தலைமைத் தளபதியாக இருந்த வீரமிக்க ஒண்டிவீரன் பிறந்தநாள் ஆகஸ்ட் 20. அவரின் வீரம் செறிந்த வரலாற்றை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன்
வரிகொடுக்க மறுத்ததால், முகலாய மன்னர்களும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் 1755ம் ஆண்டு போர் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளபதியான ஒண்டிவீரனும் விரட்டியடித்தனர்பூலித்தேவனுக்கு எதிராக தென்மலையில் ஆங்கிலேயேர்கள் முகாமிட்டிருந்தனர். மன்னன் பூலித்தேவனின் படை வீரர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தி எளிதில் வெல்லலாம் என திட்டமிட்டனர். பிரிட்டிஷ் படையின் பீரங்கியையே வைத்தே, அவர்கள் கதையைப் முடித்துவிட வேண்டும் என வியூகம் வகுத்தார் மன்னர் பூலித்தேவன். ஆற்றல்மிகுந்த அச்செயலை செய்யும் வல்லமை ஒண்டிவீரனுக்கு உண்டு என கணித்து, ஒண்டி வீரனையை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்.
இரவு நேரத்தில் இருட்டில், தென் மலையில் எதிரி முகாமிற்குத் தன்னந்தனியாகச் சென்றார் ஒண்டிவீரன். பிரிட்டிஷ் படையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அருகில் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தார் ஒண்டி வீரன். தம் மேல், இலை, தழைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கிக் கிடந்தார் அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரையைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டியால் தரையில் குத்தினான். ஈட்டியைத் தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன். ஆனால், ஒண்டிவீரனின் இலக்கு வெற்றி படிகளை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார் முடியவில்லை. குதிரை கனைத்து விட்டால் இவ்வளவு பெரிய திட்டமே வீணாகி விடும் என்பதை உணர்ந்து, இடுப்பில் செருகியிருந்த வாளால், ஈட்டியால் குத்தப்பட்ட கையை தாமே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.
எதிரிகளை ஒழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் பிரிட்டிஷ் படையினர். ஆனால் பீரங்கி குண்டுகள், பிரிட்டிஷ் படைகள் மீதே வெடித்து சிதறியதை கண்டு சுதாரித்து கொள்வதற்குள் முகாமில் இருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர். பிரிட்டிஷ் படையின் பீரங்கிகள், அவர்களையே கொன்று குவிக்க, எப்படி தனி ஒரு ஆளாக ஒண்டி வீரன் செயல்பட்டது பிரிட்டிஷ் படைக்கு அச்சம் கலந்த வியப்பாகவே இருந்தது. மறுபுறம் ஒண்டி வீரனின் கை துண்டிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு கலங்கினார் பூலித்தேவன். போர்க்களத்தில் ஒண்டிவீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன் பாராட்டினார். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதில் வல்லவர். நெற்கட்டான்செவல், திருநெல்வேலி, களக்காடு, கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் என அனைத்து போர்களிலும் பகைவர்களை ஓட விரட்டினார் ஒண்டிவீரன்.
பூலித்தேவனுக்குப் பிறகு, அவரது மகன்களுக்காக போரில் வெற்றி வாகை சூடினார் இவ்வீரனைப் பற்றி வீரகாவியமே உண்டு. நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களே அவனது வீரத்திற்குச் சாட்சி. எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனாலும். வீரத்தமிழர் வரலாற்றில் அழியா புகழை பெற்று விட்டார் மாவீரன் ஒண்டி வீரன்.
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil