Tamil govt jobs   »   Megalithic in Tamil Nadu Part 2...   »   Megalithic in Tamil Nadu Part 2...

Megalithic in Tamil Nadu Part 2 in Adda247 Tamil | தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் பகுதி – 2 Adda247 தமிழில்

கீழடி – சிவகங்கை மாவட்டம்:

  • இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திருப்புவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. 
  • செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. 
    • தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள்
    • கண்ணாடியிலான மணிகள்
    • செம்மணிகள், 
    • வெண்கல் படிகம், 
    • முத்துக்கள், 
    • தங்க ஆபரணங்கள், 
    • இரும்புப் பொருட்கள், 
    • சங்கு வளையல்கள், 
    • தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 
  • 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. 
  • இப்பொருள்கள் கி.மு (பொ.ஆ.மு) 200ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. 
  • இங்கு ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. 
  • இவை இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்பிற்கு மேலும் சில சான்றுகளாகும்.
தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் தெரிவுகள் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம் கிடைத்துள்ள பொருட்கள்:

  • புதைகுழிப் பொருட்கள், 
  • கண்ணாடி மணிகள் (வெள்ளை, சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில்) 
  • இரும்பு வாள்கள், 
  • தமிழ் – பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், 
  • அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள், 
  • ஓரளவு அரிதான கற்களான படிகக்கல், 
  • சிவப்பு நிற மணிக்கற்கள், 
  • சங்கு மற்றும் கண்ணாடி வளையல்கள்.
  • இரும்பினாலான கதிர் அறுக்கும் அரிவாள், 
  • ஈட்டி, 
  • கொழுமுனைகள் ஆகியவை தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கு சான்றுகளாய் உள்ளன. 
  • இங்கு கிடைத்துள்ள அரிசி நிரம்பிய பானை, மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.

TNUSRB CONSTABLE 2023

பையம்பள்ளி – வேலூர் மாவட்டம்:

  • இரும்பினால் செய்யப்பட்ட தொல் பொருட்களோடு பெருங்கற்காலத்து கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. 
  • பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 
  • ரேடியோ கார்பன் முறையில் இப்பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல்-ஈரோடு மாவட்டம்:

  • பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள கொடுமணல் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது
  • இங்கு தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 
  • மேலும் நூல் சுற்றி வைக்கப்பயன்படும் சுழல் அச்சுக்கள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மணிகள் முக்கியமாக சிவப்பு நிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். 
  • புதைகுழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுக் கல் (Menhir) பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.

வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1, பகுதி – 2, பகுதி – 3, பகுதி – 4 மற்றும் பகுதி – 5 ண்டை இங்கு படியுங்கள்.

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

Vedic Culture Part 4

Vedic Culture Part 5

Megalithic Culture Part 1

இது பகுதி 01 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil