Tamil govt jobs   »   Medical insurance for the heirs of...   »   Medical insurance for the heirs of...

Medical insurance for the heirs of government employees | அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு

Medical insurance for the heirs of government employees: The Government of Tamil Nadu has approved to provide medical insurance scheme to the heirs of government employees.

Medical insurance for the heirs of government employees: அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் படி, அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரின் வயதை கருத்தில் கொண்டு பயன்பெறும் வகையில், ஆணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Medical Insurance Scheme of the Government of Tamil Nadu

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ரூ.4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி இருந்தது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டமானது பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

Adda247 Tamil

Medical insurance for the heirs of government employees

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், அண்மையில் முடிவடைந்த நிலையில், மீண்டும் யுனைடெட் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஜூலை 1 ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை, 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, “தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் படி, இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெறுவதற்காக, அவர்களுக்கு உதவிடும் வகையில் தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும்” என்று கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், அதனை செயல்படுத்தும் விதமாக அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Use Coupon code: WIN15 (15% Offer)

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group