செப்டம்பர் 12 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்புநிகழ்வுகள் தொகுப்பு
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்:
- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
- பாறைக்குளம் குடைவரை கோவில்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்
செப்டம்பர் 12ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் இருந்து _______ பயனாளிகளை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது
a) 25.71 லட்சம்
b) 50.32 லட்சம்
c) 76.04 லட்சம்
d) 1.06 கோடி
2) சுதந்திரப் போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டும் இடம்
a)பரமக்குடி, ராமநாதபுரம்
b)ராஜபாளையம், விருதுநகர்
c)பெரியகுளம், தேனி
d)சத்தியமங்கலம், ஈரோடு
3) பாறைக்குளம் குடைவரை கோவில் அமைந்துள்ள மாவட்டம்
a)சிவகங்கை
b)விருதுநகர்
c)மதுரை
d) திருநெல்வேலி
4) அமெரிக்க ஓபன் 2023 ஆண்கள் தனி நபர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்றவர்
a) ரஃபேல் நடால்
b) நோவாக் ஜோகோவிச்
c) டேனியல் மெட்வெடேவ்
d) கார்லோஸ் அல்கராஸ்
5 உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்படும் நாள்
a) செப்டம்பர் 8
b) செப்டம்பர் 9
c) செப்டம்பர் 10
d) செப்டம்பர் 11
6) முக்யமந்திரி காமதேனு பீமா யோஜனாவை தொடங்கியுள்ள மாநிலம்
a) மத்திய பிரதேசம்
b) உத்தரப்பிரதேசம்
c) ராஜஸ்தான்
d) ஜார்கண்ட்
7) கோராபுட் கலஜீரா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்த மாநிலம்
a) பீகார்
b) ஆந்திரப் பிரதேசம்
c) கர்நாடகா
d) ஒடிசா
8) உலகக் கோப்பை வில்வித்தை 2023 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்
a)பிரத்மேஷ் ஜவகர்
b)அதானு தாஸ்
c) தருணீப் ராய்
d) தீரஜ் பொம்மதேவரா
9) அமெரிக்க ஓபன் பெண்களுக்கான தனி நபர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்ற கோகோ காஃப் வீராங்கனை எந்த நாட்டை சார்ந்தவர் ?
a) அமெரிக்கா
b) செர்பியா
c) ஸ்பெயின்
d) பிரான்ஸ்
10 பாரத ட்ரோன் சக்தி நடைபெறும் இடம்
a) குருகிராம்
b) ஜோத்பூர்
c) காசியாபாத்
d) புனே.
விடைகள்
1) விடை d ) 1.06 கோடி
முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் நாள் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது. 1.06 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூபாய் 1000 தமிழக அரசு வழங்கும்.
2) விடை a)பரமக்குடி, ராமநாதபுரம்
சுதந்திரப் போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனுக்கு ராமநாதபுரம் அமைந்துள்ள பரமக்குடியில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கிறது .இம்மானுவேல் சேகரன் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்றார் மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடினார்.
3) விடை b)விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாறைக்குளம் என்னுமிடத்தில் முற்கால பாண்டிய கால குடவரை கோவிலை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது.இந்தக் கோயில் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
4) விடை b) நோவாக் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் 2023 ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்றார். அவர் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார்.
5 விடை b) செப்டம்பர் 9
உலக முதலுதவி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2023 இன் இரண்டாவது சனிக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது இந்த ஆண்டு செப்டம்பர் 9 ம் நாளில் கடைபிடிக்கப்படுகிறது . உலக முதலுதவி நாள் 2023 இன் கருப்பொருள் “எண்ணிம உலகில் முதலுதவி”
6)விடை c)ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநில அரசால் முக்யமந்திரி காமதேனு பீமா யோஜனா திட்டம்தொடங்கப்பட்டது .இத்திட்டத்தில் பால் கறக்கும் கால்நடைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ரூ 40000 இலவச காப்பீடு வழங்கப்படுகிறது .
7)விடை d) ஒடிசா
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ‘அரிசியின் இளவரசர்’ என்றும் அழைக்கப்படும் கோராபுட் கலஜீரா அரிசி மற்றும் கப்தகண்டா சால்வைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
8)விடை a)பிரத்மேஷ் ஜவகர்
2023 ஆம் ஆண்டு மெக்சிகோவில் உள்ள ஹெர்மோசில்லோவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை ஆடவர் தனிநபர் போட்டியில் பிரத்மேஷ் ஜவகர் தனது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
9)விடை a)அமெரிக்கா
அமெரிக்க ஓபன் 2023 பெண்கள் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் வெற்றி பெற்றார். அவர் பெலாரஷ்ய வீராங்கனை அரினா சபாலென்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார்.
- விடை c) காசியாபாத்
இந்திய விமானப்படை (IAF) மற்றும் இந்தியாவின் ட்ரோன் கூட்டமைப்பு காசியாபாத்தில் செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 26 வரை ‘பாரத் ட்ரோன் சக்தி 2023.’ கண்காட்சி நடத்த உள்ளது .
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil