World TB Day 2022: World Tuberculosis Day is observed every year on 24 March to create awareness among the public about the global epidemic of tuberculosis (TB) and efforts to eliminate the disease.
World TB Day 2022 | உலக காசநோய் தினம் 2022
World TB Day 2022: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலகளாவிய தொற்றுநோயான காசநோய் (TB) மற்றும் நோயை அகற்றுவதற்கான முயற்சிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1882 ஆம் ஆண்டு இதே நாளில் டாக்டர் ராபர்ட் கோச் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியத்தை கண்டுபிடித்ததார். இது இந்த கொடிய நோயை பரிசோதிக்கவும், குணப்படுத்தவும் வழிவகுத்தது.
Fill the Form and Get All The Latest Job Alerts
World TB Day 2022: Theme | உலக காசநோய் தினம் 2022 கருப்பொருள்
The theme of World TB Day 2022: இந்த ஆண்டு கடைபிடிக்கப்படும் கருப்பொருள் ‘Invest to End TB. Save Lives.’ – இது காசநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்கவும், உலகளாவிய தலைவர்களால் காசநோய்க்கு முடிவுகட்டுவதற்கான உறுதிமொழிகளை அடையவும் வளங்களை முதலீடு செய்ய வேண்டிய அவசரத் தேவையை உணர்த்துகிறது.
What is Tuberculosis? | காசநோய் என்றால் என்ன?
World TB Day 2022: காசநோய் (TB) என்பது நுரையீரலை முக்கியமாக பாதிக்கும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருமல் மற்றும் தும்மல் மூலம் காற்றில் வெளியாகும் சிறு துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
காசநோய் உங்கள் சிறுநீரகம், முதுகெலும்பு அல்லது மூளை உட்பட உங்கள் உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கலாம். உங்கள் நுரையீரலுக்கு வெளியே காசநோய் ஏற்படும் போது, சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு ஏற்ப அறிகுறிகளும் மாறுபடும். உதாரணமாக, முதுகுத்தண்டின் காசநோய் உங்களுக்கு முதுகுவலியைக் கொடுக்கலாம், உங்கள் சிறுநீரகத்தில் காசநோய் உங்கள் சிறுநீரில் இரத்தத்தை உண்டாக்கக்கூடும்.
Important takeaways for all competitive exams
- WHO இன் டைரக்டர் ஜெனரல் Tedros Adhanom Ghebreyesus
- WHO தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.