கச்சா எண்ணெய் விலை, எண்ணையின் சுத்திகரிப்பு செலவினங்கள், எண்ணையை சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும் VAT வரி ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமைகிறது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன.
விலை உயர்விற்கான காரணம்
கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசாங்கத்தின் வருவாய் சரிந்துள்ள நிலையில், எரி பொருள் மீதான வரி விதிப்பே, அதன் பெரும் நிதி ஆதாரமாக திகழ்கிறது. எனவே, சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளது.
எரிபொருள் மீதான வரிகள்
- கலால் வரி என்பது, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் விதிக்கும் வரி, அந்த வரியை அனைத்து நிறுவனங்கலும் செலுத்த வேண்டும்.
- VAT என்பது மதிப்பு கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி (Value added tax). இது ஒரு பொருளின் மீது, உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களில் விதிக்கப்படும் வரி. இந்த இரண்டு வரிகளும் அரசாங்கத்தின் முக்கிய நிதி மூலாதாரமாக விளங்குகின்றன.
சதம் அடித்த எரிபொருள் விலை!!!
தற்போதுள்ள பொருளாதார நிலைமையை வைத்து பார்க்கும்போது, இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால், தனிமனிதனின் அன்றாட செலவினங்கள் பெரும் பாதிப்பை அடையும், என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Download the app now, Click here
வெற்றிப்படி நமதே!!!
******************************************
Use Coupon code: JUNE77 (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube