Tamil govt jobs   »   யூனியன் கவர்மெண்ட் என்றால் மத்திய அரசா? ஒன்றிய...

யூனியன் கவர்மெண்ட் என்றால் மத்திய அரசா? ஒன்றிய அரசா ?

யூனியன் கவர்மெண்ட் என்றால் மத்திய அரசா? ஒன்றிய அரசா ?_2.1

வணக்கம் தேர்வர்களே
நாம் இன்று தமிழகத்தில் நிலவி வரும் ஒரு முக்கிய வாதம் குறித்து பார்ப்போம்..

UNION GOVERNMENT – ஆம் சரியாக கணித்தீர்கள். சமீப காலமாக இப்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு, மத்தியில் ஆளும் அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவது சரியா? தவறா ?என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம் .

நமது அரசியல் அமைப்பில் இந்தியாவை குறிப்பிடுகையில் சட்ட வல்லுநர்கள் “India, that is Bharat. shall be a union of states ” என குறிப்பிட்டுள்ளனர். அதாவது மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா.

  1. பல்வேறு மாநிலங்களாக பிரிக்க பட்டிருந்தாலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியா செயலாற்றுகிறது. 1970 ஆம் ஆண்டு வரை பல வாதங்களும், பல மாநில அரசுகள் மத்தியில் ஆளும் அரசை ஒன்றிய அரசு என அழைப்பதும் நிகழ்ந்தது.
  2. பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நெருக்கடி நிலையை அறிவித்ததும் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என மாநில கட்சிகள் எதிர்த்தன.
  3. மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கையில் இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என்பதை தமிழக அரசு எதிர்த்தது. அது மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரானது என்று எதிர்த்தது .
  4. எண்ணிக்கையில் அடிப்படையில் ஒரு மொழியை ஆட்சி மொழியாக உருவாக்க கூடாது. அந்தந்த மாநிலத்தின் மொழியில் கலாச்சார பின்புலத்தை ஆராய வேண்டும் என்று அண்ணா கூறினார்.
  5. அந்த சமயத்தில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டமும், மத்தியில் கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி என்ற சொல் பிரபலமானது.
  6. 1935 ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை கூட்டரசு என கூறினார்கள்.
  7. நாமும் நமக்கென்று ஒரு அரசியலமைப்பை உருவாக்கிய போதும் வெளியுறவு துறை , ராணுவம், பணம் அச்சிடுதல் மட்டும் மத்தியில் வைத்துக்கொண்டு பிற அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
  8. அதன் பிறகு மத கலவரங்கள், இறையாண்மை, பாகிஸ்தான் பிரிவு என பல்வேறு காரணங்கள் கொண்டு நடுவண் அரசிடமிருந்து மாநில அரசிற்கு அதிகாரங்கள் பிரித்து அளிக்கப்பட்டன. நிறைய அதிகாரங்கள் ஒடுக்கப்பட்டன.
  9. நெருக்கடி நிலைக்கு பிறகு அது மேலும் கேள்விக்குறியானது.

ஆளும் கட்சியின் வாதம்:

அரசியியலமைப்பு, நீதி மன்ற தீர்ப்பு என அனைத்திலும் இந்தியாவை குறிப்பிடுகையில் UNION OF STATES (ஒன்றிய அரசு ) என குறிப்பிடுகிறது. எனவே நங்கள் சொல்வது சரியே. அரசியியலமைப்பின் பகுதி 1, சரத்து 1-4 இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றும் அதன் எல்லைகளை விவரிக்கிறது. இந்தியாவிற்கு எதிராக வழக்கு தொடுகையில் இந்திய ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்துமாறு சரத்து 300 கூறுகிறது.

எதிர் கட்சிகளின் வாதம்:

மாநிலங்கள் மத்தியில் ஆளும் அரசை வலிமை குன்றியது என குறிப்பதற்காக இந்த சொல்லை பயன்படுத்துகிறது. ஆந்திராவில் N.T. ராமராவ் ஆட்சி அமைத்த காலத்தில் மத்தியில் ஆளும் அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு, மக்களை உணர்ச்சி வசப்படுத்தி மாபெரும் வெற்றி பெற்றார். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தி.மு.க இந்த சொல்லை பயன்படுத்தவில்லை இப்பொது பயன்படுத்துகிறது. புதிதாக ஆட்சிக்கு வந்ததும் பிரபலமாக தி.மு.க கையாளும் யுக்தி இது என்று.

பல்வேறு மத மொழி வேறுபாடுகள் இருந்தும் நாம் இன்று வரை ஒற்றுமையாக ஒரே நாடாக இருப்பதற்கு நமது முன்னோர்கள் உருவாக்கிய அரசியலமைப்பே காரணம். நமக்குள் ஒற்றுமையாக இருந்து நாம் எதிர்கொள்ளும் கஷ்டமான சூழ் நிலையை வெல்வோம்.

இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகள் மற்றும் பொது செய்திகளுக்கு ADDA 247 தமிழ் செயலியில் இணைந்திருங்கள்

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

யூனியன் கவர்மெண்ட் என்றால் மத்திய அரசா? ஒன்றிய அரசா ?_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group