Tamil govt jobs   »   Latest Post   »   Top 30 Geography MCQs for TNPSC,TN...

Top 30 Geography MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 02 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் புவியியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம். உங்கள் புவியியல் அறிவை மேம்படுத்துவதற்கும், வரவிருக்கும் தேர்வுகளுக்கு உங்களை சிறப்பாக தயார்படுத்துவதற்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் உள்ளது.

 

Q1. கரிமப் பொருட்களால் உருவான மண்ணின் அடுக்கு எது? 

 

  1. a) O அடுக்கு
  2. b) A அடுக்கு
  3. c) B அடுக்கு
  4. d) தாய்ப்பாறை அடுக்கு

 

Q2. பருத்திப் பயிர் வளர ஏற்ற மண் எது? 

 

  1. a) செம்மண் 
  2. b) கரிசல் மண்
  3. c) வண்டல் மண் 
  4. d) மலை மண்

 

Q3. சுனாமி என்ற சொல் _________மொழியிலிருந்து பெறப்பட்டது.

 

  1. a) பிரெஞ்சு
  2. b) லத்தீன்
  3. c) ஜப்பானிய
  4. d) கிரீக்

 

Q4. செர்னோபில் (அப்போதைய சோவியத் யூனியன்) அணு உலை விபத்து நிகழ்ந்த வருடம் எது? 

 

  1. a) 1984
  2. b) 1986
  3. c) 1994
  4. d) 1996

 

Q5. இந்திய பொருளாதாரத்தின் எந்தத் துறை சேவைகளை அளிக்கிறது

 

  1. a) முதன்மைத் துறை
  2. b) இரண்டாம் நிலை துறை
  3. c) மூன்றாம் நிலை துறை
  4. d) வேளாண்மை துறை

 

Q6. புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு _______ எனப்படும்.

 

  1. a) வாயுக்கோளம்
  2. b) பாறைக்கோளம்
  3. c) நீர்க்கோளம்
  4. d) உயிர்கோளம்

 

Q7. தீப்பாறைகளின் வேறு பெயர் என்ன? 

 

  1. a) முதன்மை பாறை
  2. b) தாய் பாறை
  3. c) படிவு பாறை
  4. d) a மற்றும் b இரண்டும்

 

Q8. புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி __________ எனப்படுகிறது. 

 

  1. a) ஃபோகஸ்
  2. b) ஹைபோசென்டர்
  3. c) எபிசென்டர்
  4. d) a மற்றும் b இரண்டும்

 

Q9. புவி அதிர்வுகளை பதிவு செய்யும் கருவிக்கு __________ என்று பெயர். 

 

  1. a) சீஸ்மோகிராப்
  2. b) அழுத்தமானி
  3. c) நீரியல்மானி
  4. d) வெப்பமானி

 

Q10. எரிமலை மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை __________ என்று அழைக்கின்றோம்.

 

  1. a) எரிமலை வாய்
  2. b) துவாரம்
  3. c) பாறைக்குழம்புத் தேக்கம்
  4. d) எரிமலைக் கூம்பு

 

Q11. உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி எது? 

 

  1. a) நயாகரா நீர்வீழ்ச்சி 
  2. b) ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
  3. c) சராவதி நீர்வீழ்ச்சி
  4. d) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

 

Q12. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் __________ என்று அழைக்கப்படுகிறது.

 

  1. a) வானிலைச் சிதைவு 
  2. b) அரித்தல்
  3. c) கடத்துதல் 
  4. d) படியவைத்தல்

 

Q13. வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் ஓசோன் படலம் உள்ளது? 

 

  1. a) கீழடுக்கு
  2. b) இடையடுக்கு
  3. c) மீள் அடுக்கு
  4. d) வெளியடுக்கு

 

Q14. வெப்பச் சூறாவளிகள் ஆஸ்திரேலியாவில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

 

  1. a) வில்லி வில்லி
  2. b) டைபூன்
  3. c) ஹரிக்கேன்
  4. d) மேற்கண்ட எதுவும் இல்லை

 

Q15. தேசிய கடல் சார் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? 

 

  1. a) மும்பை
  2. b) சென்னை
  3. c) கோவா
  4. d) புதுடெல்லி

 

Q16. உலகில் எத்தனை உயிரினப் பல்வகை வள மையங்கள் உள்ளன? 

 

  1. a) 4
  2. b) 34
  3. c) 16
  4. d) 20

 

Q17. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர் __________.

 

  1. a) உற்பத்தியாளர்கள்
  2. b) சிதைப்போர்கள்
  3. c) நுகர்வோர்கள்
  4. d) இவர்களில் யாரும் இல்லை

 

Q18. ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் _______________ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

 

  1. a) ஆகஸ்டு 11 
  2. b) செப்டம்பர் 11
  3. c) ஜுலை 11 
  4. d) ஜனவரி 11

 

Q19. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி _______________ ஆகும்.

 

  1. a) மக்கள்தொகையியல்
  2. b) புற வடிவமைப்பியல்
  3. c) சொல்பிறப்பியல்
  4. d) நிலநடுக்கவரைவியல்

 

Q20. கருப்பு மரணம் என்பது எந்த நோயுடன் தொடர்புடையது? 

 

  1. a) டெங்கு
  2. b) கொரோனா
  3. c) புற்றுநோய்
  4. d) பிளேக்

 

Q21 .பின்வருவனவற்றில் எவை இரண்டாம் நிலை மாசுபடுத்திகளாகக் கருதப்படுகின்றன?

 

  (a) ​​பனிப்புகை

  (b) சல்பர்  ஆக்சைடு 

  (c) நைட்ரஜன் ஆக்சைடு

  (d) கார்பன்  ஆக்சைடு

 

Q22 .பின்வருவனவற்றில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முக்கிய பகுதிகள் எவை? 

 

 (a) ​ அகமதாபாத் முதல் கான்பூர் வரை உள்ள வறண்ட மற்றும் அரை- வறண்ட            பகுதிகள் மற்றும்  கான்பூரிலிருந்து ஜலந்தர் வரை உள்ள பகுதிகள்  .

 (b) மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்று மறைவு  பகுதியில் அமைந்துள்ள         வறண்ட பகுதிகள்

 (c) a மற்றும் b

 (d) a அல்லது  b இல்லை

 

Q23 .பின்வரும் எந்த கிழக்குக் கடலோரப் பகுதிகள் சூறாவளிப்  புயல் அலைகளால் பாதிக்கப்படக்கூடியவை?

 

  1. a) ஒடிசாவின் வட பகுதிகள்  மற்றும் மேற்கு வங்க கடற்கரை. 
  2. b) ஓங்கோல் மற்றும் மசூலிப்பட்டினம் இடையேயான  ஆந்திரக் கடற்கரை. 
  3. c) தமிழகக்  கடற்கரை (13 கடலோர மாவட்டங்களில், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன).

 

 (a) ​​a மட்டும்

 (b) b மட்டும் 

 (c) c மட்டும் 

 (d) மேலே உள்ள அனைத்தும்

 

Q24 .இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதி புயல் தாக்குதலுக்கு உள்ளாதல் தொடர்பான கூற்றுகளில் எந்த கூற்று  உண்மை? 

  1. i) மகாராஷ்டிரா கடற்கரை, ஹர்னாயின் வட பகுதி  மற்றும் அதை ஒட்டிய தென்  குஜராத்தை ஒட்டிய  கடற்கரை பகுதி  மற்றும் காம்பே வளைகுடாவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் .
  2. ii) கட்ச் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள். 

 

 (a) a ​​மட்டும்

 (b) b மட்டும் 

 (c) a மற்றும்  b இரண்டும்

 (d) a அல்லது b இரண்டும் இல்லை.

 

Q25 .எந்த வகையான வறட்சியானது ஓடைகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் குறைவதுடன்  தொடர்புடையது? 

 

(a) ​​வானிலை வறட்சி

(b) நீரியல் வறட்சி 

(c) வேளாண் வறட்சி 

(d) தொழில்துறை வறட்சி

 

Q26 .வட அரைக்கோளத்தில் சூறாவளிப் புயல் எந்த திசையில் சுழலும்?

 (a) ​​கடிகார திசையில்

 (b) எதிர் கடிகார திசை

 (c) கடிகார திசையிலும் எதிர் கடிகார திசையிலும்

 (d) இது குறிப்பிட்ட புயலைச்  சார்ந்தது.

 

Q27 .தென் அரைக்கோளத்தில் சூறாவளி புயல் எந்த திசையில் சுழலும்?

 (a) ​​கடிகார திசையில்

 (b) எதிர் கடிகார திசை 

(c) கடிகார திசையிலும் எதிர் கடிகார திசையிலும் 

(d) இது குறிப்பிட்ட புயல் சார்ந்து மாறுபடும். 

 

Q28 .பின்வரும் பழங்காலத் தளங்களில் எது பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது? 

 

(a) ​​பெட்ரா, ஜோர்டான் 

(b) மச்சு பிச்சு, பெரு 

(c) அங்கோர் வாட், கம்போடியா

 (d) அஜந்தா குகைகள், இந்தியா

 

Q29 .பின்வருவனவற்றில் எது மனித தொழில்நுட்பம்  மூலம் கண்டடைந்த ஆழமான இடமாகக் கருதப்படுகிறது?

 

 (a) ​​கோலா சூப்பர் ஹோல் 

 (b) Z-44. சாவ்யோ கிணறு

 (c) மரியானா அகழி 

 (d) எவரெஸ்ட் சிகரம்

 

 Q30 .பின்வருவனவற்றில் எது இயற் சிதைவின் ஒரு வடிவம் ஆகும் ?

 

 (a) ​​ பாறை உரிதல்

 (b) ஆக்சிஜனேற்றம்

 (c) கரைதல்

 (d) கார்பனேற்றம்

 

Solution

S1.Ans (a) 

Sol. 

 

O-அடுக்கு – இந்த அடுக்கில் கரிமப் பொருட்கள் பெரும்பான்மையாக  இருக்கும்

 

A- அடுக்கு – இது மேல் மண்ணின் ஒரு பகுதி, கனிமப் பொருட்கள் மற்றும் கரிமப் பொருட்களால் ஆனது. 

 

B- அடுக்கு – இந்த அடுக்கு மூலப்பொருளின் இயற்பியல் அல்லது வேதியியல்  மாற்றத்தை பிரதிபலிக்கிறது. 

 

C- அடுக்கு – பகுதியளவு சிதைவுக்குட்பட்ட மூலப் பொருள் இந்த அடுக்கில் குவிந்திருக்கும். 

 

தாய்ப்பாறை – இந்த அடுக்கு பாறையின் சிதைவடையா பகுதியைக் கொண்டுள்ளது.

 

S2.Ans (b) 

Sol. 

 

  • எரிமலை பாறைகளின் சிதைவால்  கரிசல்  மண் உருவாகிறது. 
  • கரில் மண்  களிமண் தன்மையுடையது. 
  • இது ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தன்மையையும் கொண்டது. 
  • பருத்தி சாகுபடிக்கு ஏற்றது.

 

S3.Ans (c) 

Sol. 

 

  • ‘சுனாமி’ என்ற வார்த்தை ஜப்பானிய வார்த்தையான ‘tsu’ (துறைமுகம்) என்பதிலிருந்தும், ‘nami’ (அலை) என்பதிலிருந்தும் பெறப்பட்டது.

 

S4.Ans (b)

Sol.

 

  • செர்னோபில் (அப்போதைய சோவியத் யூனியன்) அணு விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நடந்தது. 
  • 2016 ஆம் ஆண்டில், உக்ரைன் நாட்டு எல்லைக்குள் வரும் இந்த மண்டலத்தின் ஒரு பகுதி கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் உயிர்க்கோள காப்பகமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

 

S5.Ans (c) 

Sol.

 

  • மூன்றாம் நிலை துறை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்.
  • அங்கு வணிகங்கள் சேவைகளை உற்பத்தி செய்கின்றன. 
  • சேவைகள் என்பது உருவமற்ற  பொருட்கள் ஆகும். அவை முடித்திருத்தம் அல்லது ரயில் பயணம் போன்றது.
  • அதை தொடவோ அல்லது சேமிக்கவோ முடியாது. 

 

S6.Ans (a) 

Sol.

  • பாறைக் கோளம் – பூமியின் திடமான வெளிப்புற பகுதி. 
  • வளிமண்டலம் – பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களின் மெல்லிய அடுக்கு.
  • நீர்க்கோளம் – பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராவி உள்ளிட்ட பூமியின் மேற்பரப்பில் நீர் நிறைந்த பகுதியாகும். 
  • உயிர்க்கோளம் – பூமியின் உயிர்கள் வாழும் அடுக்கு ஆகும். 

 

S7.Ans(d) 

Sol.

 

  • தீப்பாறைகள்  முதன்மை அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • ஏனெனில் மற்ற அனைத்து பாறைகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவற்றிலிருந்து உருவாகின்றன.

 

S8.Ans (d) 

Sol.

 

  • நிலநடுக்கத்தின் தோற்றப் புள்ளியானது ‘ஃபோகஸ்’ (ஹைபோசென்டர்) என அழைக்கப்படுகிறது. 
  • இது தொடர்ச்சியான மீள் அலைகளை உருவாக்குகிறது. 
  • ‘எபிசென்டர்’ (மையப்புள்ளி) என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியாகும்.
  • அது நேராக புவியின் ஹைபோ சென்டர் மையத்திற்கு மேலே உள்ளது. 
  • நிலநடுக்கத்தின் தாக்கம் மையப்பகுதியிலேயே அதிகமாக உணரப்படுகிறது.

 

S9.Ans (a) 

Sol. 

 

  • நிலநடுக்க அலைகளை பதிவு செய்யும் கருவிக்கு ‘சீஸ்மோகிராஃப்’ அல்லது ‘சீஸ்மோமீட்டர்’ என்று பெயர். 
  • நிலநடுக்கங்களைக் கையாளும் அறிவியலுக்கு ‘சீஸ்மாலஜி’ என்று பெயர்.

 

S10.Ans (d)

Sol.

 

  • துவாரங்கள்(Vents) – எரிமலை வெடிப்பின்போது வாயுக்கள், புகை, நெருப்பு மற்றும் பாறைக்குழம்பு வெளியேறுவதற்கான வழிகள் துவாரங்கள் எனப்படுகின்றன.

 

  • எரிமலை வாய் (Crater) – எரிமலை உச்சியில் காணப்படும் கிண்ணம் போன்ற வடிவமுடைய பள்ளமே ’எரிமலை வாய்’ ஆகும்.

 

S11.Ans (b) 

Sol.

 

  • உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா). 
  • இதன் உயரம் 979 மீட்டர்.

 

S12.Ans (a) 

Sol.

 

  • வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன. 
  • இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.
  • வானிலைச் சிதைவு மூன்று வகைப்படும்: இயற் சிதைவு வேதியியல் சிதைவு, உயிரினச் சிதைவு. 

 

S13.Ans (c) 

Sol.

 

  • மீள் அடுக்கில் ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது ‘ஓசோனோஸ்பியர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

S14.Ans (a) 

Sol.

 

  • இவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் சூறாவளிகள் என்றும், மேற்கு பசிபிக்பெருங்கடலில் டைஃபூன்கள் என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் என்றும், ஜப்பானில் டைஃபூன் என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி என்றும் அழைக்கப்படுகிறது. 

 

S15.Ans (c) 

Sol. 

  • தேசிய கடல் சார் நிறுவனம் (NIO) 01.01.1996-ல் நிறுவப்பட்டது. 
  • இதன் தலைமையகம் கோவாவில் உள்ள ‘டோனா பெளலா’ ஆகும். 

 

S16.Ans (b) 

Sol. 

 

  • உலகில் 34 இடங்கள் உயிரினப்பன்மை தகுதி வளமையங்களாகக் (Hotspot) கருதப்படுகிறது.
  • இந்தியாவின் இமயமலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தோ பர்மா பிரதேசம், சுந்தா நிலப்பகுதி போன்றவை வளமையங்களாகும். 

 

S17.Ans (b) 

Sol. 

  • சிதைப்போர்கள் என்பவை தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும். 
  • அவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை ஆகும். 
  • எனவே, அவை சாறுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. (உ.ம்.) பூஞ்சைகள், காளான்கள் போன்றவை.

 

S18.Ans (c) 

Sol.

 

  • உலக மக்கள்தொகைதினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 
  • இதன் மூலம் உலக மக்கள்தொகை பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட அமைப்பு இதை 1989 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

 

S19.Ans (a) 

Sol.

 

  • பழங்காலத்தில் கிரேக்க மொழியில் ‘Demos’என்றால் மக்கள் என்றும் ‘graphis’ என்றால் கணக்கிடுதல் என்றும் பொருளாகும். 
  • எனவே மக்கள்தொகையியல் (Demography) என்பது புள்ளியியல் முறையில், மக்கள்தொகையைக் கணக்கிடுவதாகும்.

 

S20.Ans (d) 

Sol.

 

  • 14  ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்றகொள்ளை நோயினால் 30–60 சதவீதம் மக்கள் இறந்தனர் எனக் கணக்கிடப்­பட்டுள்ளது.
  • இதுவே கருப்பு மரணம் என வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. 

 

S21.Ans (a) 

Sol.முதன்மை மாசுபடுத்திகள் : i) சல்பர் டை ஆக்சைடு

  1. ii) நைட்ரஜன் ஆக்சைடு

 iii) கார்பன் டை  ஆக்சைடு

  1. iv) துகள்ம பொருட்கள் 
  2. v) மற்ற  முதன்மை மாசுபடுத்திகள்.

 இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்: 

  1. i) தரைமட்ட ஓசோன்
  2. ii) பனிப்புகை

 

Q22 .Ans (c) 

Sol.

அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகள்:

அகமதாபாத் முதல் கான்பூர் வரை உள்ள 

வறண்ட மற்றும் அரை – வறண்ட பகுதிகள்,

கான்பூர் முதல் ஜலந்தர் வரை உள்ள பகுதிகள்.

 

மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மறைவு

பகுதிகளில் அமைந்துள்ள வறண்ட பகுதிகள்.

 

S23.Ans.(d)

Sol.

புயல் அலைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் 

கிழக்கு கடற்கரைப் பகுதிகள்: 

  1. i) ஒடிசாவின் வட பகுதி மற்றும் மேற்கு வங்காள 

கடற்கரை.

  1. ii) ஓங்கோல் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே 

அமைந்துள்ள ஆந்திரக் கடற்கரை.

iii) தமிழகக் கடற்கரை (13 கடலோர மாவட்டங்கள்,

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 

புயல் அலைகளின் நிகழ்வுகள் மற்றும்

பாதிப்புகள் அதிகம்.

 

S24 Ans.(c)

Sol.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை விட 

மேற்கு கடற்கரைப் பகுதியில் புயல் அலைகளின்

பாதிப்பு குறைவாகும். அப்பகுதிகளாவன :

  1. i) மகாராஷ்டிரா கடற்கரை, வட ஹர்னாயர், தென்

குஜராத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி மற்றும் காம்பே 

வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.

  1. ii) கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடலோர பகுதி

 

S25. Ans. (b)

Sol.

S26. Ans. (b)

Sol.

S27. Ans. (a)

Sol.

S28. Ans. (d)

Sol.

S29. Ans. (b)

Sol.

S30. Ans. (a)

Sol.

**************************************************************************

Top 30 Geography MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 02 April 2024_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here