Tamil govt jobs   »   Latest Post   »   Top 30 Geography MCQs for TNPSC,TN...

Top 30 Geography MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 01 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் புவியியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம். உங்கள் புவியியல் அறிவை மேம்படுத்துவதற்கும், வரவிருக்கும் தேர்வுகளுக்கு உங்களை சிறப்பாக தயார்படுத்துவதற்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் உள்ளது.

Q1. முத்தமிழ்க்காப்பியம்  காப்பியம் எனப்படுவது ?

(a)மணிமேகலை 

(b)சிலப்பதிகாரம் 

(c)இராமாயணம் 

(d)சீவக சிந்தாமணி 

 

Q2. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும்ஆளுமை யார் ? 

(a)இளங்கோவடிகள் 

(b) ம.பொ.சிவஞானம்

(c)தேவநேயப்பாவாணர் 

(d)சீத்தலைச்சாத்தனார் 

 

Q3. “குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

        றுண்டாகச் செய்வான் வினை. “

 இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

 

(a)உவமை அணி 

(b)உருவக அணி 

(c)இல்பொருள் உவமையணி 

(d)ஏகதேசஉருவக அணி 

 

Q4. தேன்மழை நூலின் ஆசிரியர் ?

(a)பாரதிதாசன் 

(b)பாரதியார் 

(c)சுரதா 

(d) கவிக்கோ அப்துல் ரகுமான் 

 

Q5. பொருத்துக :

A.தட்டை :  1.கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

B.கழி          : 2.மூங்கிலின் அடி

C.கழை      : 3 . கரும்பின் அடி

D.அடி          : 4.புளி, வேம்பு முதலியவற்றின் அடி.

 

(a) A-1, B-2,C-3,D,4

(b) A-1, B-2,C-4,D,3

(c) A-4, B-2,C-3,D,1

(d) A-1, B-3,C-2,D,4

 

Q6.தவறான இணையை கண்டறி :

(a) நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை 

(b) கன்று: மா , புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

(c) குருத்து: புல்லின் இளநிலை

(d) பிள்ளை: தென்னையின் இளநிலை.

 

Q7.  இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தவர் ?

(a)எல்லிசு 

(b)சந்தாசாகிப்

(c)அதிவீரராமபாண்டியர்

(d)நானா சாகேப் 

 

Q8.கோப்பரகேசரி என்ற பட்டம்  கொண்டவர் யார் ?

(a)முதலாம் இராசராச சோழன் .

(b)இரண்டாம்  இராசராச சோழன் .

(c)இராஜேந்திரசோழன் 

(d)குலோத்துங்கசோழன் 

 

Q9.தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ?

 

(a) பெருஞ்சித்திரனார்

(b)தேவநேயப்பாவாணர்

(c)இலக்குவனார் 

(d)ம.பொ.சிவஞானம் 

 

Q10.சிலேடை அணி என்றும் அழைக்கப்படுவது ?

 

(a)இரட்டுற மொழிதல் அணி

(b)உருவக அணி 

(c)இல்பொருள் உவமையணி 

(d)ஏகதேசஉருவக அணி 

 

Q11.  “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ்க் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு ?

 

(a)1999

(b)1983

(c)1989

(d)1988

 

Q12.மா.இராமலிங்கம் எனும் இயற்பெயர் கொண்டவர் ?

 

(a) புதுமைப்பித்தன் 

(b)தேவநேயப்பாவாணர்

(c)இலக்குவனார் 

(d)எழில்முதல்வன்

 

Q13.கண்ணன் வந்தான் -இது ?

 

(a)தனிமொழி 

(b)தொடர்மொழி 

(c)பொதுமொழி 

(d)சொல்லணி

 

Q14. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது எனும் சிற்றிலக்கியம் யாரால் படைக்கப்பட்டது ? 

 

(a)கச்சியப்ப முனிவர்

(b)சுந்தரநாதர்

(c)அருணாசலக் கவிராயர்

(d)பலபட்டடைச் சொக்கநாதர்

 

Q15. வளி மிகின் வலி இல்லை- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

 

(a)புறநானூறு

(b)அகநானூறு 

(c)திருக்குறள் 

(d)நெடுநல்வாடை

 

Q16.கப்பித்தான் -இச்சொல்லின் பொருள் ?

 

(a)கடல் 

(b)கப்பல் 

(c)தலைமை மாலுமி 

(d)நங்கூரம் 

 

Q17.’வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’  எனும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது 

பெற்றவர் ?

(a)இரா.இளங்குமரனார்

(b)தேவநேயப்பாவாணர் 

(c)ம.பொ.சிவஞானம்

(d)பாரதிதாசன் 

 

Q18. சிலப்பதிகாரத்தின் காண்டங்களின் எண்ணிக்கை ?

(a)மூன்று 

(b)நான்கு 

(c)ஐந்து 

(d)ஆறு 

 

Q19.தமிழின் முதல் அகராதியை படைத்தவர் ?

(a)எல்லிசு 

(b)வீரமாமுனிவர்

(c)சீகன்பால்கு 

(d)ராபர்ட் நொபிலி 

 

Q20. பாலை நிலத்துக்கான தெய்வம் ?

 

(a)திருமால் 

(b)முருகன் 

(c)கொற்றவை 

(d)வருணன் 

 

Q21.எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் ?

(a)பாரதியார் 

(b)பாரதிதாசன் 

(c)மணக்குடவர் 

(d)வாஞ்சிநாதன் 

 

Q22. வசனகவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ?

(a)வைரமுத்து 

(b)பாரதியார் 

(c)இன்குலாப் 

(d)பாரதிதாசன்

 

Q23.காலம் கரந்த பெயரெச்சமே ________ ஆகும் ?

(a)பண்புத்தொகை 

(b)வினைத்தொகை 

(c)உவமைத்தொகை

(d)உம்மைத்தொகை

 

Q24.குலசேகராழ்வாரின் காலம்  ?

(a)எட்டாம் நூற்றாண்டு

(b)ஒன்பதாம் நூற்றாண்டு 

(c)பன்னிரண்டாம் நூற்றாண்டு 

(d)ஏழாம் நூற்றாண்டு

 

Q25.விசும்பு –இச்சொல்லின் பொருள் ?

(a)மழை

(b) வானம் 

(c)மேகம் 

(d)அழுகை 

 

Q26.வளர்வானம் – இலக்கணக் குறிப்பறிக :

(a)வேற்றுமைத்தொகை

(b) வினைத்தொகை

(c)பண்புத்தொகை

(d)உவமைத்தொகை

 

Q27.உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் ?

(a)இரண்டு 

(b)மூன்று

(c) நான்கு 

(d)ஐந்து 

 

Q28.“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது எவ்வகை வழுவமைதி ?

 

(a)திணை வழுவமைதி

(b)பால் வழுவமைதி

(c) இடவழுவமைதி

(d)மரபுவழுவமைதி

 

Q29.“கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற் படவே ணும்”- பாரதியார். – வழுவமைதி காண் :

(a)திணை வழுவமைதி

(b)பால் வழுவமைதி

(c) இடவழுவமைதி

(d)மரபுவழுவமைதி

 

Q30.Nanotechnology – இச்சொல்லுக்கு  சரியான தமிழ் வார்த்தை கண்டறி :

 

(a)நுண்தொழில்நுட்பம்

(b)உயிர்தொழில்நுட்பம் 

(c)குறுநுண்தொழில்நுட்பம்

(d)மீநுண்தொழில்நுட்பம்

Solution:

 

S1. Ans (b) சிலப்பதிகாரம் 

Sol.

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
  • இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.
  • மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன .

 

S2. Ans (b) ம.பொ.சிவஞானம்

Sol.

சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர். 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

 

S3. Ans (a) உவமை அணி

Sol.

  • “குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை. “

  • பொருள் : தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.

 

  • ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம். புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

 

S4. Ans (c) தேன்மழை – சுரதா

Sol.

 

S5. Ans (d) 

Sol.

தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி : கரும்பின் அடி

கழை : மூங்கிலின் அடி

அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.

 

S6. Ans (c) 

Sol.

  • நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை 
  • கன்று: மா , புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
  • குருத்து: வாழையின் இளநிலை
  • பிள்ளை: தென்னையின் இளநிலை.

 

S7. Ans (b) சந்தாசாகிப்

Sol.

வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.  இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு

அளித்தார். இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்..

 

S8. Ans (b) இரண்டாம்  இராசராச சோழன் .

Sol.

கோப்பரகேசரி , திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்டவர்  இரண்டாம்  இராசராச சோழன் .

 

S9. Ans (d)ம.பொ.சிவஞானம் 

Sol.

சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர். 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

 

S10. Ans (a) இரட்டுற மொழிதல் அணி

Sol.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர்.

 

S11. Ans (b)  1983

Sol.தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்ப ரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு

மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் “திருவள்ளுவரே”!

 

S12. Ans (d) எழில்முதல்வன்

Sol.

மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர். குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்த வர். மரபுக் கவிதை , புதுக்கவிதை படைப்ப திலும் வல்லவர்.

இனிக்கும் நினைவுகள், எங்கெங் கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர். ‘புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.

 

S13. Ans (b) தொடர்மொழி: 

Sol.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிம மொழிகள் தொடர்ந்து வந்து பொருள்

தருவது தொடர்மொழி ஆகும்.

எ. கா. கண்ணன் வந்தான்.

மலர் வீட்டுக்குச் சென்றாள்.

 

S14. Ans (d) பலபட்டடைச் சொக்கநாதர்

Sol. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது எனும் சிற்றிலக்கியம் பலபட்டடைச் சொக்கநாதப் புலவரால் இயற்றப்பட்டது .

 

S15. Ans (a) புறநானூறு

Sol.வளி மிகின் வலி இல்லை (புறநானூறு ) –  ஐயூர் முடவனார் .

 

S16. Ans (c) 

Sol.கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்)

 

S17. Ans (c) ம.பொ.சிவஞானம்

Sol.

 

சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர். 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

 

S18.  Ans (a) மூன்று 

Sol.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.

மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும்அழைக்கப்பெறுகின்றன .

 

S19. Ans (b) வீரமாமுனிவர்

Sol.

17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்

 

S20.  Ans (c) கொற்றவை

Sol.பாலை நிலத்துக்கான தெய்வம் கொற்றவை.

 

S21. Ans (a) பாரதியார் 

Sol.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர். எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர். சிறுகதை ஆசிரியர். இதழாளர். சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும்,

பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர். 

குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர். இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்.

 

S22. Ans (b) பாரதியார் 

Sol.

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  •  உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

 

S23.Ans (b)வினைத்தொகை 

Sol.

காலம்  காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “வினைத்தொகை” எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே

வினைத்தொகையாகும்.

எ.கா. வீசுதென்றல், கொல்களிறு

 

S24.Ans (a) எட்டாம் நூற்றாண்டு.

Sol.

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்

ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

 

S25. Ans (b) விசும்பு – வானம்

Sol.

 

S26.Ans (b) வினைத் தொகை

Sol.

காலம்  காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “வினைத்தொகை” எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே

வினைத்தொகையாகும்.

எ.கா. வளர்வானம்

 

S27.Ans (b)  மூன்று 

Sol.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்

வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்

மகள், அரசி, தலை வி – பெண்பால்

மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்

 

S28.Ans (a) திணை வழுவமைதி.

Sol.

“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் 

கொள்ளப்பட்ட து.

 

S29.Ans (d) மரபு வழுவமைதி

Sol.

“கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற் படவே ணும்”- பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக்

கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

S30.Ans (d)  Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்

Sol.

 

**************************************************************************

Top 30 Geography MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 01 April 2024_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here