Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – The Delhi Sultanate

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – The Delhi Sultanate MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

Q1. _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

(a) முகமதுகோரி 

(b) ஜலாலுதீன்

(c) குத்புதீன் ஐபக் 

(d) இல்துமிஷ்

S1.Ans.(c)

Sol.

  • இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 
  • 1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர்,  அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். 
  • அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
  • இவ்வரச மரபு “மாம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. 
  • மாம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு ‘அடிமை’ என்று பொருள்.

 

Q2. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

(a) லாகூர் 

(b) புனே

(c) தௌலதாபாத் 

(d) ஆக்ரா

S2.Ans.(a)

Sol.

  • குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்.
  • பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார். 

 

Q3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

(a) ரஸ்ஸியா 

(b) குத்புதீன் ஐபக்

(c) இல்துமிஷ் 

(d) பால்பன்

S3.Ans.(c)

Sol.

  • குத்புதீன் ஐபக் மருமகன் அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான இல்துமிஷ் குதுப்மினாரைக் கட்டி முடித்தார்.

Q4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.

(a) முகமதுபின் துக்ளக்

(b) பிரோஷ் ஷா துக்ளக்

(c) ஜலாலுதீன்

(d) கியாசுதீன்

S4.Ans.(d)

Sol.

  • கியாசுதீன் துக்ளக் என்பவர் அதிகாரத்தைக் கைப்பற்றி துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டினார்.
  1. கோடிட்ட இடங்களை நிரப்புக:
  2. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார். (கியாசுதீன் துக்ளக்)
  3. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார். (தேவகிரி)
  4. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார். (பால்பன்)
  5. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார். (குத்புதீன் ஐபக்)
  6. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது. (இல்துமிஷ்)

III. 

Q5.பொருத்துக:

  1. துக்ரில்கான்— 1.காராவின் ஆளுநர்
  2. அலாவுதீன்– 2.ஜலாலுதீன் யாகுத்
  3. பகலூல் லோடி— 3.வங்காள ஆளுநர்
  4. ரஸ்ஸியா– 4.சிர்கந்தின் ஆளுநர்

(a) 2 1 4 3

(b) 2 3 4 1

(c) 1 3 2 4

(d) 3 1 4 2

S5.Ans(d)

Sol.

  • வங்காள மாகாண ஆளுநராக இருந்த துக்ரில்கான்.
  • இது சிர்ஹிந்த் (பஞ்சாப்) பகுதியின் ஆளுநராக இருந்த பகலூல் லோடிக்கு டெல்லியின் சுல்தானாகும் வாய்ப்பினை வழங்கியது. 
  • அவரே லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தார்.
  • அலாவுதீன் – காராவின் ஆளுநர்
  • ரஸ்ஸியா –  ஜலாலுதீன் யாகுத்

 

  1. சரியா? தவறா ?
  2. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார். (தவறு)
  3. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர். (சரி)
  4. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர். (தவறு)
  5. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார். (சரி)
  6. (a) கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. சரியான விடையை டிக் செய்யவும் .

Q6.கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.

காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.

(a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.

(b) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(c) காரணமும் கூற்றும் தவறானவை.

(d) கூற்று தவறு; காரணம் சரி.

S6.Ans.(a)

Sol.

  • இருந்தபோதிலும் மங்கோலியர்களுடன் இணக்கமான உறவைப் பராமரிப்பதில் கவனத்துடன் செயல்பட்டார். 
  • செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து “மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்” எனும் உறுதிமொழியைப் பால்பன் பெற்றார்.

 

Q7.சரியான இணையைத் தேர்வு செய்க:

(a) ஹொய்சாளர் – தேவகிரி

(b) யாதவர் – துவாரசமுத்திரம்

(c) காகதியர் – வாராங்கல்

(d) பல்லவர் – மதுரை

S7.Ans.(c)

Sol.

  • யாதவர் தேவகிரி
  • Kakகாகதியர் வாராங்கல்
  • ஹொய்சாளர் – துவாரசமுத்திரம்
  • பாண்டியர்கள் – மதுரை

Q8.தவறான கூற்றினை / கூற்றுகளைக் கண்டறியவும்

(a) 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்

(b) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்

(c) மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்

(d) இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.

S8.Ans.(b)

Sol.

  • 1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர்,  அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். 
  • அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
  • இவ்வரச மரபு “மாம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. 
  • மாம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு ‘அடிமை’ என்று பொருள்.
  • மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பால்பன் பல கோட்டைகளைக் கட்டினார்.
  • தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும், இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவினார்.
  • இப்ராகிம் லோடி பாபரால் 1526இல் பானிபட் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

 

Q9.பொருத்துக

தந்தை மகன்

  1. குத்புதீன் ஐபக்ருக்குதீன் பிரோஷ்
  2. இல்துமிஷ்கைகுபாத்
  3. பால்பன்—-அலாவுதீன்
  4. கியாசுதீன்சிக்கந்தர் லோடி
  5. பகலூல் லோடிஆரம் ஷா

(a) 5 1 2 3 4

(b) 5 3 4 1 2

(c) 1 5 2 4 3

(d) 3 1 5 2 4

S9.Ans.(a)

Sol. 5 1 2 3 4

 

**************************************************************************

TNPSC Book Back Questions Revision Tamil Medium - The Delhi Sultanate_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here