Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Vedic...

TNPSC Book Back Questions Revision Vedic Culture in Tamil

ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Vedic Culture MCQs for all competitive exams. Here you get Multiple Choice Questions and Answers with Solutions. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these Ancient Vedic Culture MCQs and succeed in the exams.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:-

Q1. ஆரியர்கள் முதலில் __________ பகுதியில் குடியமர்ந்தனர்.

(a) பஞ்சாப் 

(b) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

(c) காஷ்மீர் 

(d) வடகிழக்கு

S1.Ans.(a)

Sol.

  • ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும். 
  • அப்போது அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டது.

 

Q2. ஆரியர்கள் __________ லிருந்து வந்தனர்.

(a) சீனா 

(b) வடக்கு ஆசியா 

(c) மத்திய ஆசியா 

(d) ஐரோப்பா

S2.Ans.(c)

Sol.

  • ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர். 
  • இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாகக் இந்துகுஷ் மலைகளிலுள்ள குடிபெயர்ந்து கைபர் கணவாய் வழியாக வந்தனர்.

 

Q3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள்வாய்மையே வெ ல்லும்” __________லிருந்து

எடுக்கப்பட்டது.

(a) பிராமணம் 

(b) ஆரண்யகம் 

(c) வேதம் 

(d) உபநிடதம்

S3.Ans.(d)

Sol.

  • இந்தியாவின் தேசிய குறிக்கோள் “சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

 

Q4. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

(a) 1/3 

(b) 1/6 

(c) 1/8 

(d) 1/9

S4.Ans.(b)

Sol.

  • பாலி – இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.

 

  1. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Q5. கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு

பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை

உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

(a) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(b) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று சரி; காரணம் தவறு

(d) கூற்று தவறு; காரணம் சரி

S5.Ans.(d)

Sol.

  • சுருதிகள் நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
  • ஸ்மிருதிகள் – தாந்திரீகங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளைக், தொடர்ந்து கொண்ட நூல்களாகும். 
  • ‘ஸ்மிருதி’ என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.

 

Q6. கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செ ய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்ப ட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

(a) கூற்று 1 தவறானது

(b) கூற்று 2 தவறானது

(c) இரண்டு கூற்றுகளும் சரியானவை

(d) இரண்டு கூற்றுகளும் தவறானவை

 

S6.Ans.(c)

Sol.

  • தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ரேடியோ கார்பன் முறையில் இப்பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.

 

Q7. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

(a) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்.

(b) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

(c) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.

(d) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

S7.Ans.(b)

Sol.

  • பெண்களின் நிலை ரிக்வேதகால சமூகத்தில், பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். 
  • மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார். 
  • குழந்தைத் திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
  • கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளத் தடைகள் இல்லை. 
  • இருந்தபோதிலும் பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெறும் சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது.

 

Q8. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

(a) கிராமா < குலா < விஷ் < ராஷ்டிரம் < ஜனா

(b) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஷ்டிரம்

(c) ராஷ்டிரம் < ஜனா < கிராமா < குலா < விஷ்

(d) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஷ்டிரம்

S8.Ans.(b)

Sol.

  • ரிக் வேத கால அரசியல் ரத்த உறவுகளை அடிப்படையாகக் (clan) கொண்டதாகும். 
  • குலம் அரசியலின் அடிப்படை அலகாகும். அதன் தலைவர் குலபதி ஆவார். 
  • பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிராமம் ஆகும். கிராமத்தின் தலைவர் கிராமணி ஆவார். 
  • பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு ‘விஸ்’ (குலம்) என்றழைக்கப்பட்டது. இதற்கு விசயபதி தலைவர் ஆவார்.
  •  ‘ஜனா’ (இனக்குழு)வின் தலைவர் ராஜன் ஆவார். இவர் ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்) எனப்பட்டார்.
  •  ரிக் வேத காலத்தில் பல இனக்குழு அரசுகள் (ராஷ்டிரம்) இருந்தன. (பரதர், மத்சயர், புரு).

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. வேதப்பண்பாடு __________ இயல்பைக் கொண்டிருந்தது. (ரத்த உறவுகள்)
  2. வேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது. (பாலி)
  3. __________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.(குருகுலக்)
  4. ஆதிச்சநல்லூர் __________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.(தூத்துக்குடி)
  5. சரியா? தவறா?
  6. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியக் தொல் பொருட்கள் இந்தியரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.(சரி)
  7. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.(சரி)
  8. படைத்தளபதிகிராமணிஎன அழைக்கப்பட்டார். (தவறு)
  9. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.(சரி)
  10. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.(சரி)
  11. பொருத்துக.

A கீழடி – 1. பகடை

B பொருந்தல் – 2. கொழு முனைகள்

C கொடுமணல் – 3. சுழல் அச்சுக்கள்

D ஆதிச்சநல்லூர் – 4. தங்க ஆபரணங்கள்

(a) 4 3 2 1

(b) 3 4 1 2

(c) 1 3 4 2

(d) 1 2 3 4

S9.Ans.(d)

Sol.

கீழடி – சிவகங்கை மாவட்டம்:

  • இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திருப்புவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த  தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல் படிகம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 

பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம்:

  • இரும்பினாலான கதிர் அறுக்கும் அரிவாள், ஈட்டி, கொழுமுனைகள் ஆகியவை தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கு சான்றுகளாய் உள்ளன. 
  • இங்கு கிடைத்துள்ள அரிசி நிரம்பிய பானை, மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.

கொடுமணல்-ஈரோடு மாவட்டம்:

  • தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • மேலும் நூல் சுற்றி வைக்கப்பயன்படும் சுழல் அச்சுக்கள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மணிகள் முக்கியமாக சிவப்பு நிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

****************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here