Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – The Post-Mauryan India

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – The Post-Mauryan India MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Q1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர்

(a) புஷ்யமித்ரர் 

(b) அக்னிமித்ரர்

(c) வாசுதேவர் 

(d) நாராயணர்

S1.Ans.(a)

Sol.

  • மெளரியப்‌ பேரரசின்‌ கடைசி அரசர்‌ பிருகத்தா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். 
  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார். 
  • புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தலைநகராக்கினார். 

 

Q2.சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்

(a) சிமுகா 

(b) சதகர்ணி

(c) கன்கர் 

(d) சிவாஸ்வதி

S2.Ans.(a)

Sol.

  • குஷாணர்கள்‌ வட இந்தியாவில்‌ 30௦ ஆண்ருகள்‌ ஆட்சி செய்தனர்‌. தென்னிந்தியாவில்‌ சாதவாகனர்கள்‌ (ஆந்திரர்‌) 450 ஆண்டுகள்‌ கோலோச்சினர்‌. சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா இருபத்துமூன்று ஆண்டுகள்‌ ஆட்சிபுரிந்ததாகக்‌ கூறப்படுகிறது.

 

Q3.குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர்

(a) கனிஷ்கர் 

(b) முதலாம் கட்பிசஸ்

(c) இரண்டாம் கட்பிசஸ்

(d) பன்சியாங்

S3.Ans.(a)

Sol.

கனிஷ்கர்‌

 

  • குஷாணப்‌ பேரரசர்களில்‌ மாபெரும்‌ பேரரசர்‌ கனிஷ்கர்‌ ஆவார்‌. 
  • கி.பி. (பொ.ஆ) 78 ‘இல்‌ அரச பதவி ஏற்றார்‌. 
  • ஒரு புதிய சகாப்தத்தை நிறுவியதன்‌ மூலம்‌ தனது ஆட்சியைப்‌ பிரகடனப்பருத்தினார்‌. 
  • பின்னர்‌ இது சாகர்‌ சகாப்தமானது.

 

Q4.கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி

தழைத்தோங்கியது.

(a) தக்காணம் 

(b) வடமேற்கு இந்தியா

(c) பஞ்சாப் 

(d) கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

S4.Ans.(a)

Sol.

இலக்கியம்‌:

 

  • சாதவாகன அரசர்‌ ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்‌. 
  • கி.மு.(பொ.ஆ.மு) இரண்டாம்‌ நூற்றாண்டில்‌, தக்காணப்‌ பகுதிகளில்‌ கண்டரா
  • மொழிப்பள்ளியைச்‌ சார்ந்த சமஸ்கிருதம்‌ செழித்தோங்கியது. 
  • பிராகிருத மொழியில்‌ 700 பாடல்களைக்‌ கொண்ட சட்டசாய்‌ (சப்தசதி) எனும்‌ நூலை எழுதியதன்‌ மூலம்‌ அரசர்‌ ஹாலா புகழ்‌ பெற்றிருந்தார்‌.

 

5.சாகர்கள் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி

செய்தனர்.

(a) சிர்கப் 

(b) தட்சசீலம் 

(c) மதுரா 

(d) புருஷபுரம்

S5.Ans.(a)

Sol.

  • சாகர்களின்‌ ஆட்சியானது மாவோஸ்‌ அல்லது மோகா என்பவரால்‌ காந்தாரப்பகுதியில்‌ நிறுவப்பட்டது. 
  • அவருடைய தலைநகர்‌ சிர்காப்‌ ஆக இருந்தது.
  • மோரா கல்வெட்டில்‌ அவருடைய பெயர்‌ குறிப்பிடப்பட்ரிள்ளது. 
  • அவருடைய நாணயங்களில்‌ புத்தர்‌, சிவன்‌ ஆகியோரின்‌ உருவங்கள்‌ பொறிக்கப்பட்டுள்ளன.

 

II.கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Q6. கூற்று: இந்தோகிரேக்கர்களின், இந்தோபார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

காரணம்: குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்.

(a) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

(b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

S6.Ans.(a)

Sol.

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
  • இவ்வாறு குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர். 
  • இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ-கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.

Q7.கூற்று 1: இந்தோகிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

கூற்று 2: இந்தோகிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.

(a) கூற்று ‘1’ தவறு , ஆனால் கூற்று ‘2’ சரி

(b) கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி

(c) இரண்டு கூற்றுகளுமே சரி

(d) இரண்டு கூற்றுகளுமே தவறு

S7.Ans.(c)

Sol.

நாணயமுறை:

  • இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர்.
  • அவற்றில் எழுத்துக்களும் சின்னங்களும் உருவங்களும் பொறிக்கப்பட்டன. 
  • இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

 

பொருந்தாததை வட்டமிடுக

புஷ்யமித்ரர் வாசுதேவர் சிமுகா கனிஷ்கர்

ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்

  1. கடைசி சுங்க அரசர் யார்?(தேவபூதி)
  2. சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?(ருத்ரதாமன்)
  3. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?(வாசுதேவ)
  4. கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?(கிறித்துவ உபதேசியார் புனித தாமசுடன்)

III. கோடிட்ட இடங்களை நிரப்பவும்:

  1. இந்தோபார்த்திய அரசை நிறுவியவர்.(கோண்டோ பெர்னெஸ்)
  2. தெற்கே இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.(அசோகா )
  3. ஹாலா எழுதிய நூலின் பெயர்.(சட்டசாய்‌ (சப்தசதி) )
  4. கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.(சுசர்மன்)
  5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ஆகும்.(பெஷாவர்

அல்லது புருஷபுரத்துக்கு)

IV.சரியா / தவறா என எழுதுக

  1. மெளரியப்‌ பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.(சரி)
  2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்(சரி)
  3. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.(தவறு)
  4. புத்த சரிதம்அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.(சரி)

Q8.பொருத்துக:

. பதஞ்சலி – 1. கலிங்கம்

. அக்னிமித்ரர் – 2. இந்தோகிரேக்கர்

. அரசர் காரவேலர் – 3. இந்தோபார்த்தியர்

. டெமிட்ரியஸ் – 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

. கோண்டோ பெர்னெஸ் – 5. மாளவிகாக்னிமித்ரம்.

(a) 4, 3, 2, 1, 5 

(b) 3, 4, 5, 1, 2 

(c) 1, 5, 3, 4, 2 

(d) 2, 5, 3, 1, 4

S8.Ans.(b)

Sol.

Q9.பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

(a) குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை

உருவாக்கினார்.

(b) கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

(c) சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.

(d) பன்சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.

S9.Ans.(b)

Sol.

  • கனிஷ்கர் சீனத் தளபதி பன்-சியாங் என்பவரைத் தோற்கடித்து,இந்தியாவின் வட எல்லைகளைச் சீனர்களின் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்தார்.
  • பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தும் முறை சுங்கர் மரத்தைப் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.

 

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here