Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – The Age of Empires: Guptas and Vardhanas

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – The Age of Empires: Guptas and Vardhanas in Tamil MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Q1. குப்த வம்சத்தை நிறுவியவர் ஆவார்.

(a) முதலாம் சந்திரகுப்தர் 

(b) ஸ்ரீ குப்தர்

(c) விஷ்ணுகோபர் 

(d) விஷ்ணுகுப்தர்

S1.Ans.(b)

Sol.

  • குப்த அரச வம்சத்தை நிறுவியவர்‌ ஸ்ரீ குப்தர் எனக்‌ கருதப்படுகிறார்‌. 
  • அவர்‌ தற்போதைய வங்காளம்‌, பீகார்‌ பகுதிகளை ஆண்டதாகக்‌ கருதப்படுகிறது. 
  • நாணயங்களில்‌ முதன்முதலாக இடம்‌ பெற்ற குப்த அரசரின்‌ வடிவம்‌ இவருடையதே.
  • இவருக்குப்பின்னர்‌ இவருடைய மகன்‌ கடோத்கஜர்‌ அரசப்‌ பதவியேற்றார்‌.
  • கல்வெட்டுகளில்‌ இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்ருள்ளனர்‌.

Source: 6th Term III Social Science Page no 33

 

Q2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ஆவார்.

(a) காளிதாசர் 

(b) அமரசிம்மர்

(c) ஹரிசேனர் 

(d) தன்வந்திரி

S2.Ans.(c)

Sol.

  • முதலாம்‌ சந்திரகுப்தரின்‌ மகனான சமுத்திரகுப்தர்‌ குப்த அரச வம்சத்தின்‌ தலைசிறந்த அரசர்‌ ஆவார்‌. 
  • சமுத்திரகுப்தரின்‌ அவைக்களப்‌ புலவரான ஹரிசேனர்‌ இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத்‌ தூணில்‌ பொறிக்கப்பட்டுள்ளது.
  • சமுத்திரகுப்தரின்‌ ஆட்சிக்கான மிக முக்கியச்‌ சான்று அலகாபாத்‌ தூண்‌ கல்வெட்டாகும்‌.

 

Q3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் என்ற இடத்தில் உள்ளது.

(a) மெக்ராலி 

(b) பிதாரி 

(c) கத்வா 

(d) மதுரா

S3.Ans.(a)

Sol.

  • உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூணாகும். 
  • டெல்லியிலுள்ள இவ்வொற்றை இரும்புத்தூண் இன்றளவும் துருப் பிடிக்காமல் உள்ளது.
  • குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள்: இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணி வெண்கலம், மைக்கா,மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.

 

Q4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர்

(a) சரகர் 

(b) சுஸ்ருதர் 

(c) தன்வந்திரி 

(d) அக்னிவாசர்

S4.Ans.(b)

Sol.

  • மருத்துவத்‌ துறையில்‌ புகழ்‌ பெற்ற அறிஞர்‌ தன்வந்திரி ஆவார்‌. 
  • அவர்‌ ஆயுர்வேத மருத்துவத்தில்‌ நிபுணராகத்‌ திகழ்ந்தார்‌. 
  • சாரக்கர்‌ ஒரு மருத்துவ அறிவியல்‌ அறிஞராவார்‌. 
  • சுஸ்ருதர்‌ அறுவைச்‌ சிகிச்சை செய்முறையைப்‌ பற்றி விளக்கிய முதல்‌ இந்தியர்‌ ஆவார்‌.

 

Q5. வங்காளத்தின் கௌட அரசர்

(a) சசாங்கர் 

(b) மைத்திரகர்

(c) ராஜவர்த்தனர் 

(d) இரண்டாம் புலிகேசி.

S5.Ans.(a)

Sol.

  • ராஜ்யஸ்ரீயின் கணவர் கன்னோசியின் அரசராவார்.
  • அவர் வங்காளத்தைச் சேர்ந்த கௌடா வம்ச அரசர் சசாங்கரால் கொல்லப்பட்டார்.
  • சசாங்கர் ராஜ்யஸ்ரீயைச் சிறையிலடைத்தான்.
  • தன்னுடையசகோதரியை மீட்கும் முயற்சியின்போது ராஜவர்த்தனன்
  • சசாங்கரால் வஞ்சமாகக் கொல்லப்பட்டார்.
  1. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து, சரியான விடையை () செய்யவும்

Q6. கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர்

ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.

காரணம்:முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியைமணமுடித்தார்.

(a) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

(b) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

S6.Ans.(a)

Sol.

முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 319 -335)

  • முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற, வலிமை மிகுந்த ‘லிச்சாவி’ அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார். 
  • இக்குடும்பத்தின் ஆதரவோடு, வட இந்தியச் சிற்றரசுகள் பலவற்றை இவர் வெற்றிகொண்டு, ஒரு பேரரசின் முடியரசராகத் தன்னை முடி சூட்டிக்கொண்டார்.
  • சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. 
  • ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

Q7. 

கூற்று: 1 தென்னிந்திய அரசர்களோ டு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை

கூற்று: 2 குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்

(a) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி

(b) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி

(c) இரண்டு கூற்றுகளும் சரி

(d) இரண்டு கூற்றுகளும் தவறு

S7.Ans.(a)

Sol.

இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 380 – 415)

  • இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார்.
  • அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார்.
  • அவர் சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். 
  • தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார்.
  • குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என் நம்பப்படுகிறது.

குப்தர்களின் ஆட்சி அமைப்பு

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
  • (அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.
  • எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக்   கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனும் கோட்பாடு )

 

Q8. கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?

(a) ஸ்ரீகுப்தர்முதலாம் சந்திரகுப்தர்சமுத்திரகுப்தர்விக்கிரமாதித்யர்

(b) முதலாம் சந்திரகுப்தர்விக்கிரமாதித்யர்ஸ்ரீகுப்தர்சமுத்திரகுப்தர்

(c) ஸ்ரீகுப்தர்சமுத்திரகுப்தர்விக்கிரமாதித்யர்முதலாம் சந்திரகுப்தர்

(d) விக்கிரமாதித்யர்ஸ்ரீகுப்தர்சமுத்திரகுப்தர்முதலாம் சந்திரகுப்தர்

S8.Ans.(a)

Sol.

  • குப்த அரச வம்சத்தை நிறுவியவர்‌ ஸ்ரீ குப்தர் எனக்‌ கருதப்படுகிறார்‌. 
  • முதலாம்‌ சந்திரகுப்தர்‌ (கி.பி. (பொ.ஆ) 319 – 335)
  • சமுத்திரகுப்தர்‌ (கி.பி. (பொ.ஆ) 335 – 980)
  • இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 380 – 415)

 

Q9. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது / சரியானவை என்பதைக் கண்டறியவும்.

  1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
  2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

(a) 1 மட்டும் சரி 

(b) 2 மட்டும் சரி

(c) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி 

(d) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

S9.Ans.(a)

Sol.

  • குப்தர்காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.

உலோகவியல்

  • குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும் உலோகத் தொழிலும் செழிப்புற்று விளங்கின.

 

பொருந்தாததை வட்டமிடுக.

  1. காளிதாசர் ஹரிசேனர் சமுத்திரகுப்தர் சரகர்
  2. ரத்னாவளி ஹர்சசரிதா நாகநந்தா பிரியதர்சிகா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. இலங்கை அரசர் சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.(ஸ்ரீ மேகவர்மன்‌)
  2. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின்போது சீனாவைச் சேர்ந்த பெளத்தத்‌ துறவி இந்தியாவிற்கு வந்தார். (பாகியான்‌)
  3. படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது. (ஹன்ஸ்)
  4. அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது. (நில வரி)
  5. குப்தர்களின் அலுவலக மொழி . (சமஸ்கிருதம்)
  6. பல்லவ அரசர் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார். (விஷ்ணு கோபா)
  7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ஆவார்.(ஹர்ஷவர்தன)
  8. ஹர்ஷர் தலைநகரை லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.(தானேஸ்வர்)
  9. சரியா / தவறா
  10. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார். (சரி)
  11. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோஆரிய பாணியை ஒத்துள்ளன. தவறு
  12. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.தவறு
  13. ஹர்ஷர் ஹீனயான பெளத்தத்‌ பிரிவைச் சேர்ந்தவர்.தவறு
  14. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.தவறு

Q10.பொருத்துக

. மிகிரகுலர் – 1. வானியல்

. ஆரியபட்டர் – 2. குமாரகுப்தர்

. ஓவியம் – 3. ஸ்கந்தகுப்தர்

. நாளந்தா பல்கலைக்கழகம் – 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்

. சார்த்தவாகா – 5. பாக்

(a) 1, 2, 4, 3, 5 

(b) 2, 4, 1, 3, 5 

(c) 3, 1, 5, 2, 4 

(d) 3, 2, 1, 4, 5

S10.Ans.(c)

Sol.

Q11.பொருத்துக

. பாணர் – 1. 10,000 மாணவர்கள்

. ஹர்ஷர் – 2. பிரயாகை

. நாளந்தா பல்கலைக்கழகம் – 3. ஹர்ஷ சரிதம்

. யுவான் சுவாங் – 4. ரத்னாவளி

. பெளத்த சபை – 5. சியூகி

(a) 4, 3, 2, 1, 5 

(b) 5, 2, 1, 3, 4 

(c) 3, 5, 1, 2, 4 

(d) 2, 1, 3, 4, 5

S11.Ans.(c)

 

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here