Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – Sources of Medieval India

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Sources of Medieval India MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

Q1. ______________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

(a) காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்

(b) பயணக்குறிப்புகள்

(c) நாணயங்கள்

(d) பொறிப்புகள்

S1.Ans.(d)

Sol.

முதல்நிலைச் சான்றுகள்:

  • பொறிப்புகள்,(கல்வெட்டுகள்செப்புப்பட்டயங்கள்),நினைவுச்சின்னங்கள்,நாணயங்கள் ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகளும் முதல்நிலைச் சான்றுகள் ஆகும்.

இரண்டாம் நிலைச் சான்றுகள்:

  • இலக்கியங்கள்,நிகழ்வுப்பதிவுகள்,காலவரிசையிலான பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள் ஆகியன இரண்டாம் நிலைச்சான்றுகள் ஆகும்.

பொறிப்புகள் (Inscriptions)

  • பொறிப்புகள் என்பன பாறைகள், கற்கள்,கோயிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும். 

நினைவுச் சின்னங்கள்:

  • கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள்,ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நினைவுச் சின்னங்கள்  எனும் வகையைச் சார்ந்தவையாகும். 

 

Q2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

(a) வேளாண்வகை

(b) சாலபோகம்

(c) பிரம்மதேயம்

(d) தேவதானம்

S2.Ans.(d)

Sol.

சோழ அரசர்களால் வழங்கப்பட்ட பல்வகைப்பட்ட நிலக்கொடைகளை கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அவை:

  • வேளாண்வகை – பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்.
  • பிரம்மதேயம் – பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • சாலபோகம் – கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • தேவதானம் – கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
  • பள்ளிச் சந்தம் – சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்டநிலங்கள்.

 

Q3. ______________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென

அறியப்படுகிறது.

(a) சோழர்

(b) பாண்டியர்

(c) ராஜபுத்திரர்

(d) விஜயநகர அரசர்கள்

S3.Ans.(a)

Sol.

  • சமய இலக்கியங்கள் தொடக்கத்தில் தென்னிந்தியாவிலும் தோன்றிய பின்னர் வடஇந்தியாவிலும் பக்தி இயக்கம், பக்தி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தன. 
  • சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது.
  • ‘கம்பராமாயணம்’, சேக்கிழாரின் ‘பெரியபுராணம்’, பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட ‘தேவாரம்’, மாணிக்கவாசகரின் ‘திருவாசகம்’ ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
  • ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’ (12ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய தொடர்ச்சியாகும். 
  • பதினைந்தாம் மரபின் நூற்றாண்டைச் சேர்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞரான கபீர்தாஸ் பக்தி இயக்கத்தால் கவரப்பெற்றவராவார்.

 

Q4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

(a) அயினி அக்பரி

(b) தாஜ் – உல் – மா -அசிர்

(c) தசுக்-இ-ஜாஹாங்கீரி

(d) தாரிக் – இ – பெரிஷ்டா

S4.Ans.(b)

Sol.

  • பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுல்தான் இல்துமிஷின் இறுதிக்காலத்தில் கஜினியிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த ஹசன் நிஜாமி என்பார்
  • ‘தாஜ்-உல்-மா-அசிர்’ எனும் நூலை எழுதினார்.
  • குத்புதீன் ஐபக் பற்றிய பல பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது. 
  • இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூலாகும்.

 

Q5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

(a) மார்க்கோபோலோ

(b) அல் -பரூனி

(c) டோமிங்கோ பயஸ்

(d) இபன் பதூதா

S5.Ans.(d)

Sol.

  • அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு, எகிப்தைக் கடந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார். 
  • அவருடைய பயணநூல் (ரிக்ளா [பயணங்கள்]) அவர் பயணம் செய்த நாடுகளையும் மக்களையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.

 

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக:
  2. ___________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது. (உத்திரமேரூர்)
  3. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ___________ ஆவார்.  (முகமது கோரி)
  4. ஒரு ___________ என்பது 3.6 வெள்ளி குன்றி மணிகளைக் கொண்டிருந்தது. (ஜிட்டல்)
  5. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்_________ ஆவார். (மின்கஜ் உஸ் சிராஜ்)
  6. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ___________ ஆவார். (நிக்கோலோ கோண்டி)

III.

Q6.பொருத்துக:

  1. கஜுராகோ—ஒடிசா
  2. கொனாரக்—ஹம்பி
  3. தில்வாரா —மத்தியப்பிரதேசம்
  4. விருப்பாக்சா— ராஜஸ்தான்

(a) 4 1 2 3

(b) 2 3 1 4

(c) 3 1 4 2

(d) 1 4 2 3

S6.Ans.(c)

Sol.

  • இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப்பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள், கொனாரக்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள் ஆகியவை வடஇந்தியாவில் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள சிறந்த சான்றுகளாகும். 

 

  1. சரியா? தவறா?:
  2. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும். (சரி)
  3. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன. (சரி)
  4. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன. (சரி)
  5. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார். (தவறு)
  6. (அ) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

Q7.கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.

காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

(a) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(b) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

(c)  கூற்று தவறு, காரணம் சரி.

(d) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

S7.Ans.(a)

Sol.

  • முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார். 
  • இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத்தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.

 

Q8.தவறான இணையைக் கண்டறியவும்:

(a) மதுரா விஜயம் – கங்காதேவி

(b) அபுல் பாசல் – அயினி அக்பரி

(c) இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்

(d) அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்

S8.Ans.(c)

Sol.

  • இபன் பதூதா – ரிக்ளா [பயணங்கள்]
  • அபுல் பாசலின் –  ’அயினி அக்பரி’,
  • கங்காதேவியால் – ‘மதுரா விஜயம்’, 
  • கிருஷ்ணதேவராயரின் – ‘அமுக்த மால்யதா’

 

(இ) பொருந்தாததைக் கண்டுபிடி: 

பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here