Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision -...

TNPSC Book Back Questions Revision – Society and Culture in Ancient Tamizhagam

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Society and Culture in Ancient Tamizhagam MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Q1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர்

(a) பாண்டியன் நெடுஞ்செழியன் 

(b) சேரன் செங்குட்டுவன்

(c) இளங்கோ அடிகள் 

(d) முடத்திருமாறன்

S1.Ans.(b)

Sol.

  • பதிற்றுப்பத்து சேர அரசர்கள்‌ குறித்த செய்திகளை வழங்குகின்றன.
  • சேர அரசன்‌ செங்குட்டுவன்‌ வட இந்தியாவின்‌ மீது படையெருத்துச்‌ சென்றார்‌. 
  • சிலப்பதிகாரக்‌ காவியப்‌ பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர்‌ இமயமலையிலிருந்து கற்களைக்‌ கொண்டுவந்தார்‌ எனத்‌ தெரியவந்துள்ளது.
  • பத்தினித்‌ தெய்வ வழிபாட்டை அவர்‌ அறிமுகம்‌ செய்தார்‌.

 

Q2.கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

(a) பாண்டியர் 

(b) சோழர் 

(c) பல்லவர் 

(d) சேரர்

S2.Ans.(c)

Sol.

சங்க காலம்‌:

  • சங்கம்‌ என்னும்‌ சொல்‌ மதுரைப்‌ பாண்டிய அரசர்களின்‌ ஆதரவில்‌ தழைத்தோங்கிய தமிழ்ப்‌ புலவர்களின்‌ குழுமத்தைச்‌ சுட்டுகிறது.
  • இப்புலவர்கள்‌ இயற்றிய பாடல்கள்‌ மொத்தமாகச்‌ சங்க இலக்கியம்‌ என அறியப்பருகிறது.
  • இப்பாடல்கள்‌ இயற்றப்பட்ட காலம்‌ சங்க காலம்‌ என அழைக்கப்பருகின்றது.
  • ஆட்சி புரிந்த அரச வம்சங்கள்‌ சேரர்‌, சோழர்‌, பாண்டியர்‌

 

Q3.பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ஆவர்.

(a) சாதவாகனர்கள் 

(b) சோழர்கள் 

(c) களப்பிரர்கள் 

(d) பல்லவர்கள்

S3.Ans.(c)

Sol.

களப்பிரர்கள்‌

 

  • கி.பி. (பொ.ஆ.) மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ சங்ககாலம்‌ படிப்படியாகத்‌ தனது சரிவைச்‌ சந்தித்தது. 
  • சங்க காலத்தைத்‌ தொடர்ந்து களப்பிரர்கள்‌ தமிழகத்தைக்‌ கைப்பற்றி இரண்டரை நூற்றாண்ருகள்‌ ஆட்சி செய்தனர்‌. 
  • அவர்களின்‌ ஆட்சி குறித்து இலக்கியங்களில்‌ சான்றுகள்‌ உள்ளன. 
  • இலக்கியச்‌ சான்றுகள்‌, தமிழ்‌ நாவலர்‌ சரிதை, ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்‌. 
  • சீவக யாப்பெருங்கலம்‌, பெரியபுராணம்‌ சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும்‌ ‘இக்காலத்தில்‌ எழுதப்பட்டவைகளாகும்‌.

 

4.சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு .

(a) மண்டலம் 

(b) நாடு 

(c) ஊர் 

(d) பட்டினம்

S4.Ans.(c)

Sol.

  • மண்டலங்கள்‌ நாடுகளாகப்‌ பிரிக்கப்பட்டன. .
  • நாடு பல கூற்றங்களாகப்‌ (கூற்றம்‌) பிரிக்கப்பட்டன. 
  • ஊர்‌ என்பது கிராமம்‌ ஆகும்‌. 
  • அவை பேரூர்‌ (பெறிய கிராமம்‌), சிற்றூர்‌ (சிறிய கிராமம்‌), மூதூர்‌(பழமையான கிராமம்‌) என அழைக்கப்பட்டன.
  • கடற்கரையோர நகரங்களுக்குப் பட்டினம் எனப் பெயர்.
  • ‘புகார்’ என்பது துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்.

 

5.குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

(a) கொள்ளையடித்தல் 

(b) ஆநிரை மேய்த்தல்

(c) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல் 

(d) வேளாண்மை

S5.Ans.(c)

Sol.

திணை  நிலம்‌ தொழில்‌  மக்கள்‌  கடவுள்‌
குறிஞ்சி  மலையும்‌ மலை சார்ந்த இடமும்‌ வேட்டையாகுதல்‌ /சேகறித்தல்‌ குறவர்‌, குறத்தியர்‌ முருகன்‌
முல்லை  காடும்‌, காடு சார்ந்த இடமும்‌ ஆநிரை மேய்த்தல்‌ ஆயர்‌, ஆய்ச்சியர்‌ மாயோன்‌
மருதம்‌  வயலும்‌ வயல்‌ சார்ந்த இடமும்‌ வேளாண்மை  உழவன்‌, உழத்தியர்‌ இந்திரன்‌
நெய்தல்‌  கடலும்‌ கடல்‌ சார்ந்த பகுதியும்‌ மீன்பிடித்தல்‌ / உப்புஉற்பத்தி பரதவர்‌, நுளத்தியர்‌  வருணன்‌
பாலை  வறண்ட நிலம்‌ வீரச்‌ செயல்கள்‌ மறவர்‌, மறத்தியர்‌ கொற்றவை

 

II.கூற்றை வாசிக்கவும், சரியான விடையை () செய்யவும்

Q6. 

கூற்று: புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.

காரணம்: சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.

(a) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

(b) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று சரி; காரணம் தவறு.

(d) கூற்றும் காரணமும் தவறானவை.

S6. Ans.(a)

Sol.

சங்க காலம்‌:

  • சங்கம்‌ என்னும்‌ சொல்‌ மதுரைப்‌ பாண்டிய அரசர்களின்‌ ஆதரவில்‌ தழைத்தோங்கிய தமிழ்ப்‌ புலவர்களின்‌ குழுமத்தைச்‌ சுட்டுகிறது.
  • இப்புலவர்கள்‌ இயற்றிய பாடல்கள்‌ மொத்தமாகச்‌ சங்க இலக்கியம்‌ என அறியப்பருகிறது.
  • இப்பாடல்கள்‌ இயற்றப்பட்ட காலம்‌ சங்க காலம்‌ என அழைக்கப்பருகின்றது.
  • தொல்காப்பியம்‌ ஒரு தமிழ்‌ இலக்கண நூலாகும்‌. அது சங்க காலத்‌ தமிழ்‌ மக்களின்‌ மொழி, பண்பாரு ஆகியவற்றின்‌ உயர்‌ தரத்தைச்‌ சுட்டிக்காட்ருகிறது.

 

Q7.கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?

  1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.
  2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
  3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.

(a) ‘1’ மட்டும்

(b) ‘1 மற்றும் 3’ மட்டும்

(c) ‘2’ மட்டும்

(d) ‘3’ மட்டும்

S7. Ans.(c)

Sol.

  • பதிற்றுப்பத்து சேர அரசர்கள்‌ குறித்த செய்திகளை வழங்குகின்றன.
  • சேர அரசன்‌ செங்குட்டுவன்‌ வட இந்தியாவின்‌ மீது படையெருத்துச்‌ சென்றார்‌. 
  • நெருஞ்செழியன்‌ மிகவும்‌ புகழ்பெற்ற போர்வீரராகப்‌ போற்றப்பருகிறார்‌. 
  • அவர்‌ சேரர்‌, சோழர்‌, ஐந்து வேளிர்கள்‌ ஆகியோரின்‌ கூட்டுப்படையைத்‌ ‘தலையாலங்கானம்‌ என்னுமிடத்தில்‌  தோற்கடித்தார்‌. 
  • அவர்‌ கொற்கையின்‌ தலைவன்‌ எனப்‌ போற்றப்பருகின்றார்‌.

 

Q8.பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது

(a) ஊர் < நாடு < கூற்றம் < மண்டலம்

(b) ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

(c) ஊர் < மண்டலம்< கூற்றம் < நாடு

(d) நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்

S8.Ans.(b)

Sol.

  • மண்டலங்கள்‌ நாடுகளாகப்‌ பிரிக்கப்பட்டன. .
  • நாடு பல கூற்றங்களாகப்‌ (கூற்றம்‌) பிரிக்கப்பட்டன. 
  • ஊர்‌ என்பது கிராமம்‌ ஆகும்‌. 
  • அவை பேரூர்‌ (பெறிய கிராமம்‌), சிற்றூர்‌ (சிறிய கிராமம்‌), மூதூர்‌(பழமையான கிராமம்‌) என அழைக்கப்பட்டன.
  • கடற்கரையோர நகரங்களுக்குப் பட்டினம் எனப் பெயர்.
  • ‘புகார்’ என்பது துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்.

 

Q9.அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.

. சேரர் – 1. இரண்டு மீன்கள்

. சோழர் – 2. புலி

. பாண்டியர் – 3. வில், அம்பு

(a) 3, 2, 1 

(b) 1, 2, 3 

(c) 3, 1, 2 

(d) 2, 1, 3

S9.Ans.(a)

Sol.

மூவேந்தர்‌  மாலை  துறைமுகம்‌  தலைநகர்‌  சின்னம்‌
சோர்‌  பனம்பூ மாலை முசிறி /தொண்டி வஞ்சி / கரூர்‌ வில்‌, அம்பு
சோழர்‌  அத்திப்பூ மாலை புகார்‌  உறையூர்‌ / புகார்‌ புலி
பாண்டியர்‌  வேப்பம்பூ மாலை கொற்கை மதுரை  இரண்டு மீன்கள்‌

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. வெண்ணி போரில் வெற்றி பெற்றவர் .(கரிகாலன்‌)

2.சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் .(தொல்காப்பியம்‌)

  1. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை கட்டினார்.(கரிகாலன்‌)

4.படைத் தலைவர் என அழைக்கப்பட்டார்.(தானைத்‌ தலைவன்‌)

5.நில வரி என அழைக்கப்பட்டது.(‘இறை’)

IV.சரியா / தவறா:

  1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்.(தவறு)

2.சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.(தவறு)

3.கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்.(சரி)

4.புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.(தவறு)

  1. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.(தவறு)

V.

Q10.பொருத்துக:

  1. தென்னர் – 1.சேரர்
  2. B. வானவர் – 2.சோழர்
  3. C. சென்னி – 3.வேளிர்
  4. D. அதியமான் – 4.பாண்டியர்

(a) 4 1 2 3

(b) 1 2 3 4

(c) 4 2 1 3

(d) 4 3 2 1

 

S10.Ans.(a)

Sol.

மூவேந்தர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்:

 

சேரர்கள்

  • ஆதவன்
  • குட்டுவன்
  • வானவன்
  • இரும்பொறை
சோழர்கள்

  • சென்னி
  • செம்பியன்
  • கிள்ளி
  • வளவன்
பாண்டியர்கள்

மாறன்

வழுதி

செழியன்

தென்னர்

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here