Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – Emergence of New Kingdoms in North India

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Emergence of New Kingdoms in North India MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்வு செய்க:

Q1. ‘பிருதிவிராஜ ராசோஎனும் நூலை எழுதியவர் யார்?

(a) கல்ஹணர்

(b) விசாகதத்தர்

(c) ராஜசேகரர்

(d) சந்த் பார்தை

S1.Ans.(d)

Sol. பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் “பிருதிவிராஜ ராசோ” எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். 

Q2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

(a) முதலாம் போஜா

(b) முதலாம் நாகபட்டர்

(c) ஜெயபாலர்

(d) சந்திரதேவர்

S2.Ans.(b)

Sol.பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார். 

Q3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

(a) மங்கோலியா

(b) துருக்கி

(c) பாரசீகம்

(d) ஆப்கானிஸ்தான்

S3.Ans.(d)

Sol.ஆப்கானிஸ்தான்

 

Q4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

(a) சிலை வழிபாட்டை ஒழிப்பது.

(b) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

(c) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.

(d) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

S4.Ans.(b)

Sol.இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மீது அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் வட இந்தியாவின் செல்வச் செழிப்புமிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. 

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக:
  2. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் _____________ ஆவார். (தர்மபாலர்)
  3. கி.பி ______________ இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர். (712 கி.பி)
  4. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ______________ ஆவார். (சிம்மராஜ்)
  5. காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது. (மத்திய பிரதேசம்)

III. 

Q5.பொருத்துக:

  1. கஜுராகோஅபு குன்று
  2. சூரியனார் கோவில்பந்தேல்கண்ட்
  3. தில்வாரா கோவில்–கொனாரக்

(a) 3 2 1

(b) 2 1 3

(c) 1 2 3

(d) 2 3 1

S5.Ans.(d)

Sol.கஜுராகோ எனும் இடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தில்வாரா சமணக்கோவில், மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தர்யா கோவில் ஆகியன ராஜபுத்திரர்களின் கோவில் கட்டடக்கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும்.

  1. சரியா? தவறா?:
  2. ராஜபுத்ரஎன்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.தவறு
  3. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரி
  4. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.தவறு
  5. ரக்ஷாபந்தன்சகோதர உறவு தொடர்பான விழாவாகும். சரி
  6. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.தவறு
  7. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்:

Q6. கூற்று: கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.

காரணம்: கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

(a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.

(b)காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

(c) கூற்று தவறு. காரணம் சரி.

(d) கூற்றும் காரணமும் தவறு.

S6.Ans.(b)

Sol.

  • மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.
  • இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

 

Q7. கூற்று I. மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை.

கூற்று II. மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவர்.

(a) I சரி.

(b) II சரி.

(c) I மற்றும் II சரி.

(d) I மற்றும் II தவறு.

S7.Ans.(c)

Sol.

  • பிரதிகாரர்களின் வீழ்ச்சியானது வடஇந்திய அரசியல் மகிபாலருக்கு நிகழ்வுகளில் முதன்மையான பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பை வழங்கியது. 
  • ஆனால் தென்னிந்திய அரசரான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் காரணமாய் வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த அவரால் இயலாமல் போயிற்று. 

 

Q8. கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கி.பி.(பொ.) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.

காரணம்: கூர்ஜரப்பிரதிகாரர்கள் அராபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

(a) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(b)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d) கூற்று தவறு, காரணம் சரி.

S8.Ans.(d)

Sol. 

  • பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார். 
  • சிந்துவின் மீது அரேபியர் மேற்கொண்ட படையெடுப்பை அவர் முறியடித்து அவர்களின் விரிவாக்க நடவடிக்கைகளைத் தடுத்தார். 

 

Q9. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.

காரணம்: ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.

(a) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

(b)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d) கூற்று தவறு, காரணம் சரி.

S9.Ans.(b)

Sol.

  • சௌகான் வம்சாவளியின் கடைசி அரசனான பிருதிவிராஜ் சௌகானே அவ்வரச வம்சாவளி அரசர்களுள் தலைசிறந்தவரெனக் கருதப்படுகின்றார்.
  • அவர் 1191ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார்.
  • இருந்தபோதிலும் 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் அவர் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

Q10. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.

  1. ரக்ஷாபந்தன்மரபு ராஜபுத்திரர்களுடையது.
  2. வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்றரக்ஷாபந்தன்விழாவைத் தொடங்கினார்.
  3. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

(a) கூற்று ‘1’ சரியானது.

(b) கூற்று ‘2’ சரியானது.

(c) கூற்று ‘3’ சரியானது.

(d) மேற்கண்ட அனைத்தும் சரியானவை.

S10.Ans.(d)

Sol.

  • ரக்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும்.
  • ‘ரக்ஷா’ எனில் பாதுகாப்பு என்றும், ‘பந்தன்’ என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும்.
  • இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும். 
  • ஒரு பெண் ஓர் ஆடவனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டிவிட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறாள் என்று பொருள். 
  • அப்படியான ஆடவர்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
  • 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்றரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். 
  • அவ்விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர் கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்கவைத்தார். 
  • இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here