TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Art and Architecture of Tamil Nadu MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.
Attend TNPSC Book Back Question Quiz Here
I.சரியான விடையைத் தேர்வு செய்க.
Q1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்ழமையான கட்டுமானக் கோவில் எது?
(a) கடற்கரைக் கோவில்
(b) மண்டகப்பட்டு
(c) கைலாசநாதர் கோவில்
(d) வைகுந்தபெருமாள் கோவில்
S1.Ans.(a)
Sol.
- ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும், மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோவில்கள் பல்லவ அரசர் இரண்டாம் நரசிம்மவர்மனால் எழுப்பப்பட்டவை ஆகும்.
- அவை தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கேவில்களாகும்.
Q2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
(a) 1964
(b) 1994
(c) 1974
(d) 1984
S2.Ans.(d)
Sol.
- 1984இல் கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமென யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்டது.
Q3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
(a) புடைப்புச் சிற்பங்கள்
(b) விமானங்கள்
(c) பிரகாரங்கள்
(d) கோபுரங்கள்
S3.Ans.(b)
Sol.
- பாறைகளில் சிற்பங்களைப் படைப்பது பல்லவர்கால சிறப்புக்கூறாக அமைந்திருந்தது.
- முற்காலச் சோழர்களின் காலம் பேரழகுமிக்க விமானங்களுக்குப் பெயர்பெற்றதாகும்.
- பிற்காலச் சோழர்களின் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.
- மண்டபங்கள் விஜயநகர காலப்பகுதியின் தனிச்சிறப்பாகும்.
- நவீனகாலத்தில் பிரகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
Q4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
(a) திருக்குறுங்குடி
(b) மதுரை
(c) திருநெல்வேலி
(d) திருவில்லிபுத்தூர்
S4.Ans.(a)
Sol.
- சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.
- பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும்முறை அதிகரித்தது என்பதை திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ண ஆகியவற்றில் கோவில் காணமுடியும்.
Q5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
(a) மகேந்திரவர்மன்
(b) நரசிம்மவர்மன்
(c) ராஜசிம்மன்
(d) இரண்டாம் ராஜராஜன்
S5.Ans.(d)
Sol.
- வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் இரண்டாம் நந்திவர்மன்.
- கோடிட்ட இடங்களை நிரப்புக:
- பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________________ என்ற இடத்தில் உள்ளது. (மண்டகப்பட்டு)
- முற்கால சோழர் கட்டடக்கலை ________________ பாணியைப்
பின்பற்றியது. (விமானங்களுக்கு)
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ________________ ஆகும். (புதுமண்டபம்)
- பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ________________ பெயர்பெற்றது.(கோபுரங்கள்)
- விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ________________ ஆகும். (மண்டபங்கள்)
III.
Q6.பொருத்துக.
- ஏழு கோவில்கள் – 1.மதுரை
- இரதிமண்டபம் – 2.தாராசுரம்
- ஐராவதீஸ்வரர்கோவில் – 3.திருக்குறுங்குடி
- ஆதிநாதர் கோவில் – 4.கடற்கரைக்கோ வில்
- புதுமண்டபம் – 5.ஆழ்வார் திருநகரி
(a) 5 4 2 1 3
(b) 5 4 3 1 2
(c) 3 4 5 1 2
(d) 4 3 2 5 1
S6.Ans.(d)
Sol.
- கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் பிற்காலச் சோழர்களின் கோவில் உள்ளது.
- பேரழகுமிக்க கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்ட இக்கோவில் ஐராவதீஸ்வரருக்கு (இந்திரனின் யானை வழிப்பட்ட கடவுள்) படைத்தளிக்கப்பட்டதாகும்.
- ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் கோவிலிலுள்ள தெற்குவிழா மண்டபம்
Q7.தவறான இணையைக் காண்க:
(a) கிருஷ்ணாபுரம்கோவில் – திருநெல்வேலி
(b) கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
(c) சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
(d) ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
S7.Ans.(b)
Sol.
- ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் கோவிலிலுள்ள தெற்குவிழா மண்டபம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையுடன் அமைந்துள்ள புகுமுக மண்டபம் ஆகியவை குறிப்பிடத்தகுந்த எடுத்துக்காட்டுகளாகும்.
- மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இராமநாதபுரம் பகுதியை ஆண்டு வந்த சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், திண்டுக்கல்லுக்கு அருகே தாடிக்கொம்பில் அமைந்துள்ள கோவில்கள், திருநெல்வேலிக்கு அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கோவில்
Q8.கூற்று: இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம்: உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
(a) காரணம், கூற்றை விளக்கவில்லை
(b) காரணம், கூற்றை விளக்குகின்றது
(c) கூற்று சரி, காரணம் தவறு
(d) கூற்று, காரணம் இரண்டும் தவறு
S8.Ans.(b)
Sol.
- இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க கவனத்தை ஈர்ப்பதாய் பிரகாரங்கள் நம் அமைந்துள்ளன.
- உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
Q.பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
(a) கி.பி. 600 – 850 –
(b) கி.பி. 850 – 1100 –
(c) கி.பி. 1100 – 1350 –
(d) கி.பி. 1350 – 1600 –
S.Ans.()
Sol.
- பல்லவர் காலம் (கி.பி 600 – 850)
- முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 – 1100)
- பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி.1100-1350)
- விஜயநகர/நாயக்கர்காலம் (கி.பி.1350-1600)
- நவீன காலம் (கி.பி.1600க்கு பின்னர்).
Q9. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி:
(a) மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
(b) பல்லவர்கால கட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
(c) பின்ளையார்பட்டியிலுள்ள குகைக் கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
(d) மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
S9.Ans.(a)
Sol.
- மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பாகும்.
- இக்கருங்கல் பாறை ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்டதாகும்.
- மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இராமநாதபுரம் பகுதியை ஆண்டு வந்த சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- சரியா ? தவறா?
- இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார். (சரி)
- முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர். (தவறு)
- பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும். (சரி)
- பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. (சரி)
- தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும். (தவறு)
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |