Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision -...

TNPSC Book Back Questions Revision – Great Thinkers and New Faiths

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Great Thinkers and New Faiths MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

 

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

Q1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

(a) அங்கங்கள் 

(b) திரிபீடகங்கள் 

(c) திருக்குறள் 

(d) நாலடியார்

S1.Ans.(b)

Sol.

  • அங்கங்கள்‌ – சமண நூல்கள்‌
  • திரிபீடகங்கள்‌ மற்றும்‌ ஜாதகங்கள்‌ -பெளத்த நூல்கள்‌

 

Q2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

(a) ரிஷபர் 

(b) பார்சவநாதர் 

(c) வர்தமானர் 

(d) புத்தர்

S2.Ans.(a)

Sol.

  • உலகத்தின்‌ மிகப்பழமையான, தற்போதும்‌ வாழ்ந்து கொண்டிருக்கும் மதங்களில் சமணமும்‌ ஒன்றாகும்‌. 
  • சமணம்‌ 24 தீர்த்தங்கரர்களை மையமாகக்‌ கொண்டது. 
  • தீர்த்தங்கரர்கள்‌ பல்வேறு காலங்களில்‌ மதம்‌ தொடர்பான உண்மைகளைப்‌ போதித்தோர்‌ ஆவர்‌. 
  • முதல்‌ தீர்த்தங்கரர்‌ ரிஷபர்‌. கடைசித்‌ தீர்த்தங்கரர்‌ மகாவீரர்‌ ஆவார்‌.

 

Q3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

(a) 23 

(b) 24 

(c) 25 

(d) 26

S3.Ans.(b)

Sol.

  • உலகத்தின்‌ மிகப்பழமையான, தற்போதும்‌ வாழ்ந்து கொண்டிருக்கும் மதங்களில் சமணமும்‌ ஒன்றாகும்‌. 
  • சமணம்‌ 24 தீர்த்தங்கரர்களை மையமாகக்‌ கொண்டது. 
  • தீர்த்தங்கரர்கள்‌ பல்வேறு காலங்களில்‌ மதம்‌ தொடர்பான உண்மைகளைப்‌ போதித்தோர்‌ ஆவர்‌. 
  • முதல்‌ தீர்த்தங்கரர்‌ ரிஷபர்‌. கடைசித்‌ தீர்த்தங்கரர்‌ மகாவீரர்‌ ஆவார்‌.

 

Q4. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

(a) ராஜகிரகம் 

(b) வைசாலி 

(c) பாடலிபுத்திரம் 

(d) காஷ்மீர்

S4.Ans.(c)

Sol.

  • முதலாவது – இராஜகிருகம்‌
  • இரண்டாவது – வைசாலி
  • மூன்றாவது – பாடலிபுத்திரம்‌
  • நான்காவது – காஸ்மீர்‌

 

Q5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

(a) லும்பினி 

(b) சாரநாத் 

(c) தட்சசீலம் 

(d) புத்தகயா

S5.Ans.(b)

Sol.

  • வாரணாசிக்கு அருகேயுள்ள, சாரநாத்‌ என்னும்‌ இடத்தில்‌ உள்ள மான்கள்‌ பூங்கா என்ற இடத்தில்‌ புத்தர்‌ தனது முதல்‌ போதனைச்‌ சொற்பொழிவை நிகழ்த்தினார்‌. 
  • இது ‘தர்ம சக்ர பிரவர்த்தனா’ அல்லது ‘தர்ம சக்கரத்தின்‌ பயணம்‌’ என்று அழைக்கப்பருகின்றது.

 

  1. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக / பொருத்தமான விடையை தேர்ந்தெடு.

 

Q6. 

கூற்று: ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.

(a) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.

(b) கூற்று தவறானது.

(c) கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது.

(d) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.

S6.Ans.(a)

Sol. வேள்விச்‌ சடங்குகளுக்கு மாற்றாகக்‌ கற்பிக்கப்பட்ட உபநிடதத்‌ தத்து- -வங்களைச்‌ சாதாரண மக்களால்‌ புரிந்துகொள்ள இயலவில்லை.

 

Q7. கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்

காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

(a) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

(b) கூற்று தவறு.

(c) கூற்று சரி; ஆனால் அதற்கான காரணம் தவறு.

(d) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.

 

S7.Ans.(a)

Sol.

சுவரோவியங்கள்‌:

  • மகாராஷ்டிர மாநிலம்‌ ஒஎரங்காபாத்தில்‌ உள்ள அஜந்தா குகைகளின்‌ சுவர்களிலும்‌ மேற்கூரையிலும்‌ வரையப்பட்டுள்ள ஓவியங்கள்‌ ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.
  • ஜாதகக்‌ கதைகள்‌ புகழ்‌ பெற்றவை. புத்தர்‌ முந்தைய பிறவிகளில்‌ மனிதராகவும்‌. விலங்காகவும்‌ இருந்ததைக்‌ குறித்த கதைகளாகும்‌. இவை அறெறிகளைக்‌ கூறுவன ஆகும்‌.

 

Q8. சரியான விடையைக் கண்டறியவும்.

விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

  1. கல்விக் கூடமாக
  2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
  3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
  4. வழிபாட்டுக் கூடம்

(a) 2 சரி 

(b) 1 மற்றும் 3 சரி 

(c) 1, 2, 4 ஆகியவை சரி 

(d) 1 மற்றும் 4 சரி

S8.Ans.(b)

Sol.

  • விகாரைகள்‌ அல்லது மடாலயங்கள்‌ சிறந்த கல்வி மையங்களாகச்‌ செயல்பட்டன. 
  • அவற்றில்‌ ஒன்று நாளந்தா. அங்கு சீனப்‌ பயணி யுவான்‌-சுவாங்‌ பல ஆண்டுகள்‌ தங்கி கல்வி பயின்றார்‌.

Q9. சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் கருதலாமா?

  1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
  2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்க ளும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன. மேற்சொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.

(a) 1 மட்டும் 

(b) 2 மட்டும் 

(c) 1 மற்றும் 2 

(d) 1 மற்றும் 2 ம் இல்லை

S9.Ans.(c)

Sol.

  • பின்வேத காலத்தில்‌ பறிந்துரைக்கப்பட்ட சிக்கலான சடங்குகளும்‌ வேள்விகளும்‌.
  • அதிக அளவில்‌ செலவு செய்ய வேண்டி இருந்த வேள்விச்‌ சடங்குகள்‌.
  •  மூடநம்பிக்கைகளும்‌, நடைமுறைகளும்‌ சாதாரண மக்களைக்‌ குழப்பம்‌ அடையச்‌ செய்தன.

 

Q10. சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?

(a) உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.

(b) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக் கொள்கிறது.

(c) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலைவழிபாடாகும்

(d) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.

S10.Ans.(a)

Sol.

  • இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர்‌ கடவுள்‌ என்பதை சமணம்‌ மறுக்கிறது.
  • அகிம்சைஅல்லது அறவழியே சமணத்தின்‌ அடிப்படைத்‌ தத்துவம்‌.

 

Q11. தவறான இணையைக் கண்டுபிடி

(a) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்

(b) சத்யம் – உண்மைபேசுதல்

(c) அஸ்தேயம் – திருடாமை

(d) பிரம்மச்சரியம் – திருமண நிலை

S11.Ans.(d)

Sol.

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது.
  • சத்யம் – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேயம் – திருடாமை
  • அபரிக்கிரகம்- பணம்,பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை
  • பிரம்மச்சரியம் – திருமணம் செய்து கொள்ளாமை

 

Q12. சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.

(a) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.

(b) அவர் நேபாளத்தில் பிறந்தார்.

(c) அவர் நிர்வாணம் அடைந்தார்.

(d) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.

S12.Ans.(a)

Sol.

  • அவ்வாறு தியானத்தில்‌ இருந்தபோது 49ஆம்‌ நாள்‌ அவர்‌ ஞானம்‌ பெற்றார்‌. அப்போதிலிருந்து அவர்‌ புத்தர்‌ (ஞானம்‌ பெற்றவர்‌) என அழைக்கப்பட்டார்‌. 
  • சாக்கிய அரச குடும்பத்தைச்‌ சேர்ந்த துறவி என்பதால்‌ சாக்கிய முனி என்றும்‌ அழைக்கப்பட்டார்‌.
  •  நிர்வாண நிலை அடைவதே வாழ்க்கையின்‌ இறுதி நோக்கம்‌ என்று புத்தர்‌ வலியுறுத்தினார்‌.
  • இயற்பெயர் – சித்தார்த்தா
  • பிறப்பு – லும்பினி தோட்டம் நேபாளம்
  • பெற்றோர்- சுத்தோதனா, மாயாதேவி
  • இறப்பு – குசி நகரம், உ பி.

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. மகாவீரரின் கோட்பாடு ____________ என்று அழைக்கப்படுகிறது.(கர்மா)
  2. ____________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.(நிர்வாண)
  3. பௌத்தத்தை நிறுவியவர் ____________ ஆவார்.(கெளதம புத்தர்‌)
  4. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில்____________ என்று அழைக்கப்பட்டது.(ஜைனக் காஞ்சி)
  5. ____________ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.(ஸ்தூபி)

 

  1. சரியா? தவறா?
  2. புத்தர் கர்மாவை நம்பினார்.(சரி)
  3. புத்தருக்குச் சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.(தவறு)
  4. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்..(சரி)
  5. விகாரைகள் என்பன கோவில்களாகும்.(தவறு)
  6. அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்..(சரி)

 

Q13.பொருத்துக.

  1. அங்கங்கள் – 1.வர்தமானர்

B.மகாவீரர் – 2.துறவிகள்

  1. புத்தர் – 3.பௌத்தக் கோவில்கள்
  2. சைத்தியம் – 4.சாக்கியமுனி
  3. பிட்சுக்கள் – 5.சமண நூல்

(a) 2 1 4 3 5

(b) 5 1 4 3 2 

(c) 2 4 1 3 5

(d) 2 4 1 5 3

S13. Ans.(b)

Sol.

5 1 4 3 2 

 

****************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here