Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – Educational Development in India

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions Educational Development in India MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. வேதம் என்ற சொல்லிருந்து வந்தது.

(a) சமஸ்கிருதம்

(b) இலத்தீன்

(c) பிராகிருதம்

(d) பாலி

S1.Ans.(a)

Sol.

  • வேதம் (Veda) என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அறிவு என்று பொருள். 
  • இச்சொல்லானது “வித்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.
  • இதன் பொருள் ‘அறிதல்’ என்பதாகும். 

 

Q2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

(a) குருகுலம்

(b) விகாரங்கள்

(c) பள்ளிகள்

(d) இவையனைத்தும்

S2.Ans.(d)

Sol.

  • தொடக்க காலத்தில் ஆசிரியரால் (குரு / ஆச்சார்யா) தன்னைச் சுற்றி இருந்த மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டது.
  • மேலும் குருவின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல வந்து தங்கி கல்வி பயின்றனர். 
  • இதுவே குருகுலக் கல்விமுறை எனப்பட்டது.
  • மாணவர்கள் தங்கள் உயர்படிப்பிற்காக விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர்.
  • பண்டைய இந்தியாவில் பள்ளிக் கூடங்கள் பள்ளி (palli) என்றும், ஆசிரியர்கள் கணக்காயர் என்றும் அழைக்கப்பட்டனர்.

Q3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

(a) உத்திரப்பிரதேசம் 

(b) மகாராஷ்டிரம்

(c) பீகார் 

(d) பஞ்சாப்

S3.Ans.(c)

Sol.

  • பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.(பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது. 
  • தற்போதைய பீகாரில் உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 
  • நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. 
  • தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகம் நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பு மையமாக கருதப்படுகிறது.

Q4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

(a) 1970 

(b) 1975

(c) 1980 

(d) 1985

S4.Ans.(c)

Sol.

  • பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
  • இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும்.
  • இதனை 1980இல் யுனெஸ்கோ, உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது.
  • சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும்.
  • 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.

Q5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

(a) இங்கிலாந்து 

(b) டென்மார்க்

(c) பிரான்சு 

(d) போர்ச்சுக்கல்

S5.Ans.(d)

Sol.

  • இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பியர் போர்ச்சுகீசியர்களேயாவர். 
  • இயேசு சங்கத்தின் உறுப்பினரான பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். 

Q6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது?

(a) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

(b) 1833 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

(c) 1853 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

(d) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்

S6.Ans.(a)

Sol.

  • 1813இல் கிழக்கிந்திய  நிறுவனம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை உறுதிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது.
  • 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

Q7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

(a) சார்ஜண்ட் அறிக்கை, 1944

(b) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

(c) கோத்தாரி கல்விக்குழு, 1964

(d) தேசியக் கல்விக் கொள்கை, 1968

S7.Ans.(b)

Sol.

  • பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க 1948ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது.
  • இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டது.

Q8. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

(a) 1992 

(b) 2009

(c) 1986 

(d) 1968

S8.Ans.(c)

Sol.

  • இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை 1986 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

II கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. வேதம் என்ற சொல்லின் பொருள்——————-. (‘அறிதல்’)
  2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர்——————-. (அலெக்சாண்டர் கன்னிங்காம்)
  3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் ——————-ஆவார். (இல்துமிஷ்)
  4. புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு——————-(1992)
  5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு——————- ஆகும். (அனை வருக்கும் கல்வி இயக்கம் (SSA)
  6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு——————-(1956)

III 

Q9.பொருத்துக

  1. இட்சிங் – 1.சரஸ்வதி மகால்
  2. பிரான்சிஸ் சேவியர்- 2.இந்திய கல்வியின் மகா சாசனம்
  3. உட்ஸ் கல்வி அறிக்கை- 3.மதராஸில் மேற்கத்திய கல்வி
  4. இரண்டாம் சரபோஜி- 4.கொச்சி பல்கலைக்கழகம்
  5. சர் தாமஸ் மன்றோ- 5.சீன அறிஞர்

(a) 5 4 2 1 3

(b) 5 4 2 1 3

(c) 3 4 5 1 2

(d) 4 1 3 2 5

 

S9.Ans.(b)

Sol.

5 4 2 1 3

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

  1. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன.(சரி)
  2. கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.(சரி)
  3. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.(சரி)
  4. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை. (தவறு)
  5. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது. (தவறு)

V பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு

Q10. 

  1. i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ.) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
  2. ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின்

பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர்.

iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

  1. iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.

 

(a) i மற்றும் ii சரி

(b) ii மற்றும் iv சரி

(c) iii மற்றும் iv சரி

(d) i, ii மற்றும் iii சரி

S10.Ans.(d)

Sol.

  • பண்டைய இந்தியாவில் பள்ளிக் கூடங்கள் பள்ளி (palli) என்றும், ஆசிரியர்கள் கணக்காயர் என்றும் அழைக்கப்பட்டனர்.
  • பாண்டியர்கள்ஆட்சிகாலத்தில்  காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது. 

Q11. சரியான இணையைக் கண்டுபிடி

(a) மக்தப்கள் – இடைநிலைப் பள்ளி

(b) 1835ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு- ஆங்கிலக் கல்வி

(c) கரும்பலகைத் திட்டம்- இடைநிலைக் கல்வி குழு

(d) சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

S11.Ans.(b)

Sol.

  • ஆசிரியர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.
  • அவ்வகை நிலங்கள் சாலபோகம் என்றழைக்கப்பட்டது. (உம். கன்னியாகுமரியிலுள்ள வல்லப பெருஞ்சாலை).
  • 1835ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி
  • தொடக்கப் பள்ளிகளைத் தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
  • மக்தப்கள் –  தொடக்கப் பள்ளி

 

**************************************************************************

TNPSC Group 1 & 2 Studymate
TNPSC Group 1 & 2 Studymate
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here