Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அட்டவணை மற்றும் ஒன்றியம், மாநிலம் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

அட்டவணைகள்:

அட்டவணை I

  1. இந்தியாவின் அமைவிடம் பற்றி கூறுகிறது
  2. இந்தியா அதன் எல்லைகள் தலைநகரம்
  3. மாநிலம் அதன் எல்லைகள் தலைநகரம்
  4. யூனியன் பிரதேசம் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள்

அட்டவணை II

அரசியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட சம்பளம் மற்றும் படிகள்

  1. குடியரசுத் தலைவர்
  2. பிரதமர் மற்றும் கேபினெட் அமைச்சர்கள்
  3. மாநிலங்களின் ஆளுநர்கள்
  4. மக்களவைத் தலைவரும் மக்களவை துணைத் தலைவரும்
  5. மாநிலங்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
  6. மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைத் தலைவர் மற்றும் துணை சபாநாயகர்
  7. மாநிலங்களின் சட்டமன்ற மேலவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
  8. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
  9. உயர்நீதிமன்ற நீதிபதிகள்
  10. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர்

அட்டவணை III

பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம்

  1. மத்திய அமைச்சர்கள்
  2. பாராளுமன்றத்திற்கான தேர்தல் வேட்பாளர்கள்
  3. பாராளுமன்ற உறுப்பினர்கள்
  4. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
  5. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர்
  6. மாநில அமைச்சர்கள்
  7. மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் வேட்பாளர்கள்
  8. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 
  9. உயர்நீதிமன்ற நீதிபதிகள்

அட்டவணை IV

மாநிலங்களவையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இடங்களை ஒதுக்கீடு செய்தல் பற்றி கூறுகிறது

அட்டவணை V

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை ஆள்வது மற்றும் அவரது பகுதிகளை நிர்வகிப்பது (அசாம் திரிபுரா மேகாலயா மிசோரம் தவிர)

அட்டவணை VI

அசாம் திரிபுரா மேகாலயா மிசோரம் மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை ஆள்வது

அட்டவணை VII

மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப்பகிர்வு (list)

  1. மத்திய பட்டியல் 100 (முன்பு 97)
  2. மாநில பட்டியல்-62 (முன்பு 66)
  3. பொதுப் பட்டியல் 52 (முன்பு 47)
  1. மத்திய பட்டியல்:

மத்திய அரசால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட துறைகளாகும்

(ரயில்வே (அஞ்சல் அலுவலகம்), வான்வழி, கடற்படை, விண்வெளி ஆராய்ச்சி)

  1. மாநிலப் பட்டியல்:

மாநில அரசு சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட துறைகள் ஆகும்

(சிறைத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை)

  1. பொதுப்பட்டியல்:

மத்திய அரசால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட துறைகள் ஆகும்

(கல்வி, சுகாதாரம், நிதித்துறை வரி)

அட்டவணை VIII

அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் (22)

அரசியலமைப்பு இயற்றப்பட்ட பொழுது 14 மொழிகள்

15th. சிந்தி 1967     21ST சட்டத் திருத்தம்

  1. கொங்கனி
  2. மணிப்பூரி         1992 71ST சட்டத் திருத்தம்
  3. நேபாளி

19 போடோ

  1. டோங்கினி

2003 92ND சட்டத் திருத்தம்

  1. சாந்தலி
  2. மைதிலி
  3. போர்ஜ்பிகாரி (MP) (ஆய்வு நிலையில் உள்ள மொழி)
  • இந்தியாவில் இரண்டு ஆட்சி மொழிகள் கொண்ட மாநிலம் கோவா
  • மராத்தி
  • கொங்கணி
  • நாகலாந்து ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக கொண்டுள்ளது
  • சிந்தி 1967 ஆம் ஆண்டின் 21வது சட்டத் திருத்ததினால் சேர்க்கப்பட்டது;
  • 1992 ஆம் ஆண்டு 71வதுசட்டத் திருத்ததினால் கொங்கனி, மணிப்புரி மற்றும் நேபாளி சேர்க்கப்பட்டன.
  • போடோ, டோங்கிரி, மைதிலி மற்றும் சந்தாலி ஆகியவை 2003 ஆம் ஆண்டின் 92வது திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டன
  • 2011 ஆம் ஆண்டு 96வது சட்டத் திருத்ததினால் ஒரியாஒடியாஎன பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • அரசியலமைப்பின் XVII ஆம் பகுதி 343 முதல் 351 வரை உள்ள ஆட்சிமொழி பற்றி க்கையாளுகிறது
  • அதன் ஏற்பாடுகள் ஒன்றியமொழி, வட்டார மொழிகள், நீதித்துறைமொழி, சட்டங்களின் மொழி, சிறப்பு உத்தரவுகள் ஆகிய நான்கு தலைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • 1955ஆம் ஆண்டு முதல் மொழிக் குழு அமைக்கப்பட்டது. 1956-ல் தனது அறிக்கையை அது சமர்ப்பித்தது.
  • இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக, 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டத்தை நாடாளுமன்றம் கொண்டு வந்து விட்டது
  • 15 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, ஒன்றியத்தின் அலுவல் சார் நோக்கங்களுக்காகவும், பாராளுமன்றத்தில் அலுவல்கள் நடைபெறவும் இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என்று அந்தச் சட்டம் வகுத்தது.
  • மீண்டும் 1967 ஆம் ஆண்டின் அரசகரும மொழிகள் (திருத்தச்) சட்டத்தின் மூலம், ஆங்கிலத்தின் பயன்பாடு காலவரையின்றி தொடரும் என வழங்கப்பட்டுள்ளது
  • சில பிராந்திய மொழிகளை உள்அரசு அலுவல் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த வும் அரசியல் சட்டம் அனுமதித்தது
  • ஆரம்பத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட 14 பிராந்திய மொழிகளை அரசியலமைப்பு அங்கீகரித்தது. தற்போது 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • 2004-ம் ஆண்டு இந்திய அரசு செம்மொழி என்ற புதிய வகை மொழிகளை உருவாக்க முடிவு செய்தது. இதுவரை ஆறு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ் (2004), 
  • சமஸ்கிருதம் (2005), 
  • தெலுங்கு (2008), 
  • கன்னடம் (2008), 
  • மலையாளம் (2013) 
  • ஒடியா (2014).

அட்டவணை IX

  • 1st  அரசியலமைப்பு திருத்தச் சட்டம்-1951 இன் படி ஏற்படுத்தப்பட்டுள்ளது
  • இது நீதிமன்ற தலையிட்டுகளிலிருந்து சில சட்டங்களை பாதுகாக்க பயன்படுகிறது

அட்டவணை X

  • கட்சி தாவல் தடைச் சட்டம்
  • 52 அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1985
  • தற்போது MP அல்லது MLA ஆகவோ உள்ள நபர் தான் இருக்கும் கட்சியில் இருந்து வேறு ஒரு கட்சியில் சேர்ந்தால் அவரின் பதவி பறிக்கப்படும்
  • தற்போது MP அல்லதுMLA ஆகவோ உள்ள நபர்,கட்சியின் கொரடா உத்தரவை மீறி சட்டமன்றத்திலும் அல்லது நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களித்தால் அவரின் பதவி பறிக்கப்படும்
  • ஒரு கட்சி தனது உறுப்பினரை தமது கட்சியில் இருந்து வெளியேற்றினார் அவர் வேறு எந்த கட்சியிலும் சேர்ந்து கொள்ளலாம்
  • கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கட்சியிலிருந்து விலகி வேறு எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்

அட்டவணை XI

  • பஞ்சாயத்து ராஜ் 73 அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1992
  • 24-4-1993 நடைமுறைப்படுத்தப்பட்டது
  • 1957 பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி அமைத்தது
  • 1958 மூன்றாண்டுக்கு பஞ்சாயத்து முறை பின்பற்ற பரிந்துரை அளித்தல்
  • இது அக்டோபர் 2, 1959 ராஜஸ்தானில் முதல் முதலில் அறிமுகம் இரண்டாவது மாநிலம் ஆந்திரா
  • இதில் 29 வகையான ஊராட்சிகளின் பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அட்டவணை XII

  • நகராட்சி அமைப்புகள் (74 அரசமைப்புத் திருத்தச் சட்டம் 1992)
  • ஜூன் 1993 நடைமுறைப்படுத்தப்பட்டது.

18 துறைகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here