Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்

அறிமுகம்:

  • அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் அரசமைப்பினை எழுதினர். அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 அன்று கூடியது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணயச் சபை 14 ஆகஸ்ட் 1947 அன்று மீண்டும் கூடியது
  • அன்றைய மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணயச் சபை உறுப்பினர்களை மறைமுக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
  • கேபினட் மிஷன் என அழைக்கப்பட்ட பிரிட்டானிய அமைச்சரவைக் குழு முன்மொழிந்த அடிப்படையில் அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கனர்கள் வரிசை அமைந்தது. இத்திட்டத்தின் படி
  • அன்றைய மாகாணங்கள், சுதேச அரசுகள், அல்லது அரசுகளின் குழுக்களில் இருந்து அதன் மக்கள்தொகைக்கு ஏற்றபடி பத்து லட்சத்துக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்
  • இதன்படி, மாகாணங்களில் இருந்து 292 உறுப்பினர்களும் சுதேச அரசுகளிடம் இருந்து 93 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • ஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்து, முஸ்லிம், சீக்கியர் ஆகிய சமுதாயங்களின் மக்கள் தொகை விகுதத்திற்கேற்ப இடம் ஒதுக்கப்பட்டது.
  • இந்த உறுப்பினர்கள் அந்தந்த மாகாணத்துக்கு மாற்றத்தக்க வாக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையின்படி ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையிலான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
  • சுதேச அரசுகள் தங்கள் பகுதியிலிருந்து உறுப்பினர்களை மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப தாங்களே தேர்வு செய்து கொள்ளும் முறையை உருவாக்க அனுமதிக்கப்பட்டது.

 

அரசமைப்பு நிர்ணயசபை உருவாக்கம்:

  • 284 உறுப்பினர்கள் 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்.
  • அரசமைப்பு நிர்ணயசபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது. அன்றைய கூட்டத்தின் முதல் கூட்டப்பொருள்: ‘‘தற்காலிகத் தலைவர் தேர்வு ஆகும்
  • ஆச்சார்ய ஜே. பி. கிருபாளினி (ஐக்கிய மாகாணம்: பொது) அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக் கொண்டார்.
  • அரசமைப்புற்கு ஒப்புதல் தருவதற்காக சபை 24.01.1950 அன்று கூடிய கூட்டத்திற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார்.
  • 9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி, 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையின் விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.
  1. தொகுதி 1 – 9 டிசம்பர் முதல் 23 டிசம்பர் 1946 வரை
  2. தொகுதி 2 – 20 ஜனவரி முதல் 25 ஜனவரி 1947 வரை
  3. தொகுதி 3 – 28 ஏப்ரல் முதல் 2 மே 1947 வரை
  4. தொகுதி 4 – 14 ஜூலை முதல் 31 ஜூலை 1947 வரை
  5. தொகுதி 5 – 14 ஆகஸ்ட் முதல் 30 ஆகஸ்ட் 1947 வரை
  6. தொகுதி 6 – 27 ஜனவரி 1948
  7. தொகுதி 7 – 4 நவம்பர் 1948 முதல் 8 ஜனவரி 1949 வரை
  8. தொகுதி 8 – 16 மே முதல் 16 ஜூன் 1949 வரை
  9. தொகுதி 9 – 30 ஜூலை முதல் 18 செப்டம்பர் 1949 வரை
  10. தொகுதி 10 – 6 அக்டோபர் முதல் 17 அக்டோபர் 1949 வரை
  11. தொகுதி 11 – 14 நவம்பர் முதல் 26 நவம்பர் 1949 வரை

தொகுதி 12 – 24 ஜனவரி 1950

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here