Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – இந்திய கவுன்சில் சட்டம் 1861

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

இந்திய கவுன்சில் சட்டம் 1861

  • 1861ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவிலிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தியது 
  • மேலும், தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழு மத்திய சட்டமன்றமாக விரிவுபடுத்தப்பட்டது 
  • ஆறு முதல் பன்னிரண்டு கூடுதல் உறுப்பினர்கள்தலைமை ஆளுநரால் நியமிக்கப்படுவர் 
  • அவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அலுவலர் அல்லாதவர்களாக இருப்பர். ஆனால் சட்டமன்றத்தில் இந்தியர்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது
  • இந்த உறுப்பினர்களின் பணி சட்டம் இயற்றுவது மட்டுமே என்று தெளிவாகக் கூறப்பட்டது
  • நிர்வாக குழுவின் செயல்பாடுகளில் தலையிட இவர்களுக்கு உரிமையில்லை. நிர்வாகம் மற்றும் நிதி குறித்த அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை
  • மாகாணங்களில் இதேபோல் சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு முதல் எட்டு நிர்ணயிக்கப்பட்டது 
  • முதன்முதலாக இந்தியர்களுக்கு சட்டமியற்றும் பணியில் பங்ககெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் அரசியலமைப்பின் வளர்ச்சியில் இச்சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது
  • இந்தியாவில் சட்டமியற்றும் முறை மெதுவாகத் தொடங்கி, 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டு சட்டங்களின் மூலம் மேலும் வளர்ச்சி பெற்றது

 

இந்திய கவுன்சில்கள் சட்டம் (1892):

 

  • 1892ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய கவுன்சில்கள் சட்டம் இந்திய தேசிய காங்கிரசுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கருதலாம்
  • மத்திய சட்டமன்றத்திலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இச்சட்டம் மேலும் உயர்த்தியது.
  • அவர்களது எண்ணிக்கை குறைந்தது பத்து என்றும் அதிகபட்சம் பதினாறு என்றும் நிர்ணயிக்கப்பட்டது 
  • அலுவலர் அல்லாதோரின் விகிதம் அதிகரிக்கப்பட்டது. 16 பேரில் 6 பேர் அலுவலர்கள், 10பேர் அலுவலர் அல்லாதவர்கள், அரசின் வரவுசெலவு அறிக்கை மற்றும் நிதிக் கொள்கை பற்றி விவாதிக்க கூடுதல் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது

அதேபோல் மாகாண சட்டமன்றங்களிலும் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here