இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இந்திய அரசாங்கச் சட்டம் 1858
அறிமுகம்:
1858ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது 1858 ஆகஸ்ட் 2 ஆம் நாள் அரச அனுமதியையும் இச்சட்டம் பெற்றது
பின்னணி:
- 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட அதிலிருந்து இந்திய அரசியலமைப்பின் வரலாறு தொடங்குகிறது. 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் மற்றும் 1793 முதல் 1853 வரை இயற்றப்பட்ட பட்டயச் சட்டங்கள் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள் ஒரு பகுதியாகும்.
- 1857 ஆம் ஆண்டு கலகம், இந்தியாவில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி, இங்கிலாந்து அரசர் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
- விக்டோரியா அரசியின் அறிக்கை இந்தியர்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும் என்ற உறுதியையும் அளித்தது. அதன்பிறகு, நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் பின்னனியில் இந்திய அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன
சட்டத்தின் முக்கிய சரத்துக்கள்:
- கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது
- இங்கிலாந்தில், இயக்குநர்கள் குழுவும், கட்டுப்பாட்டு வாரியம் கலைக்கப்பட்டது அவற்றுக்குப்பதில், இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டார்
- அவருக்கு ஆலோசனை வழங்க இந்தியா கவுன்சில்‘ என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது அயலுறவுச் செயலர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பார்
- இந்தியாவுக்கான முதல் அயலுறவுச் செயலராக சர் சார்லஸ் வுட் நியமிக்கப்பட்டார்
- இந்தியா கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்
- இந்தியாவின் தலைமை ஆளுநர் இந்தியாவின் வைஸ்ராய் (அரசுப் பிரதிநிதி) என்ற பொறுப்பையும் வகிப்பார். இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் கானிங் பிரபு ஆவார்
- இச்சட்டம் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டது
விக்டோரியா அரசியின் அறிக்கை:
- 1858 நவம்பர் 1 ஆம் நாள் விக்டோரியா அரசியின் அறிக்கை அலகாபாத் நகரில் கானிங் பிரபு அறிவித்தார்.
- இந்த அரச அறிக்கை இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்வேறு முக்கிய இடங்களில் பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது.
- இந்தியாவில் வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்ததையும், அரசியார் ஆட்சிப் பொறுப்பை தாமே மேற்கொண்டது இந்த அறிக்கை குறிப்பிட்டது.
- இந்திய அரசர்களுடன் வணிகக்குழு செய்து கொண்டிருந்த உடன்படிக்கைகளை ஒப்புக்கொண்டதுடன், அவர்களது உரிமைகள் கண்ணியம், மதிப்பு ஆகியவற்றை மதித்து நடப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
- சமமான மற்றும் பாரபட்சமற்ற சட்டப்பாதுகாப்பு தங்கள் சமய மற்றும் சமூக பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கான உரிமை ஆகிய இந்திய மக்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை கூறியது.
விக்டோரியா அரசியின் அறிக்கை 1858 ஆம் ஆண்டு சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதாக இருந்தது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |