Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – மாநில மறுசீரமைப்பு குழு

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

மாநில மறுசீரமைப்பு குழு

முன்பு 552 மாகாணங்கள் இருந்தன (சுதந்திரம் அடையும் போது) பின் 549 மாநிலங்கள் சர்தார் படேல் முயற்சிகள் இந்தியாவுடன் இணைந்தது மூன்று தவிர

  1. ஹைதராபாத் ராணுவ நடவடிக்கை மூலம் இணைக்கப்பட்டது
  2. ஜுனாகட் பொது வாக்கெடுப்பு மூலம் இணைந்தது
  3. ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் மூலம் இணைந்தது

விதி 4

விதி 2 மற்றும் 3 கீழ் மேற்கொள்ளப்படும் மாநிலங்களை உருவாக்குதல் அல்லது சேர்த்தல் நிலப் பகுதிகளை மாற்றி அமைத்தல் .

  1. கட்டுரை 368 – அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாராளுமன்றத்தின் அதிகாரம்
  2. உறுப்பு 2A – சிக்கிம் இணை மாநிலமாக (நீக்கப்பட்ட)

1950-ல்புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த போது இந்திய ஒன்றியத்தின் உறுப்பு அலகுகள் பகுதி A, பகுதி B, பகுதி C, பகுதி D என வகைப்படுத்தப் பெற்றது.

  • பகுதி A →  முன்னாள் ஆளுநர் மாகாணங்கள்.
  • பகுதி B →   சமஸ்தானங்கள்.
  • பகுதி C →,  முன்னாள் தலைமை ஆணையர் மாகாணங்கள் மற்றும் சில முன்னாள் சமஸ்தானங்கள்.
  • பகுதி D →  அந்தமான் நிக்கோபார் தீவுகளை கூறுகிறது.

 

  1. ஜூன் 1948-S.K தார் கமிட்டி:
  • இந்தியா மொழிவழி மாநிலமாக பிரிக்கப்பட அமைக்கப்பட்ட முதல் கமிட்டி ஆகும்
  • டிசம்பர்  1948ல் தனது பரிந்துரையை அளித்தது
  • பரிந்துரைகள் மொழிவாரி மாநிலமாக பிரிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை வேண்டுமானால் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கலாம் என்று பரிந்துரை செய்தது
  1. டிசம்பர் 1948 JVP கமிட்டி:
  • J-ஜவகர்லால் நேரு
  • V-வல்லபாய் படேல்
  • P-பட்டாபி சீதாராமையா
  • இந்திய தேசிய காங்கிரசால் ஏற்படுத்தப்பட்டது
  • S.K தார் கமிட்டியை மறு ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்டது
  • ஏப்ரல் 1949 எல் தனது பரிந்துரையை சமர்ப்பித்தது
  • JVP கமிட்டிS.K தார் கமிட்டியின் பரிந்துரையை ஆதரித்தது
  • ஆகஸ்டு 1953 தெலுங்கு தேச மக்களுக்காக ஆந்திரா என்ற தனிமனித கோரிக்கையை முன்னிறுத்தியது
  • இதில் 56 நாட்கள் உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர் பொட்டுஸ்ரீராமுலு
  • நவம்பர் 1953 ஆந்திரா முதல் மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டது   தலைநகர் கர்னூல்.

மாநிலங்களை உருவாக்குதல்:

டிசம்பர் 1953 பாசல் அலி கமிட்டி:

தலைவர்: பாசல் அலி (1953)

மற்ற இருவர்

  1. K.M. பணிக்கர்
  2. K.N குன்ஸ்ரு
  • செப்டம்பர் 1957 தனது அறிக்கையை அளித்தது இது இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரை அளித்தது
  • இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டது
  • நவம்பர் 1, 1956 மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது
  • ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் 1956(தெலுங்கானா+ஆந்திரா உருவானது தலைநகர்ஹைதராபாத்)
  • 7TH அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956 இன்படி அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது இந்த விதியின்படி 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டது.

 இதற்கு முன்னர்

 

பகுதி –  9 மாகாணம் ஆளுநர் கட்டுப்பாட்டில்
பகுதி –  9 மாகாணம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்
பகுதி –  10 மாகாணம் உயர் ஆணையர் கட்டுப்பாட்டில்
பகுதி –  அந்தமான் நிகோபார் பகுதிகள்
மொத்தம் 29

 

மாநிலங்கள் 1956 பிறகு:

  • 1956 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் ஹைதாராபாத்தில் உள்ள தெலுங்கு பேசும் மாவட்டங்களுடன் இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது.
  • மெட்ராஸ் மாநிலம் அதன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டது, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகள் திருவிதாங்கூர்- கொச்சினிலிருந்து சேர்க்கப்பட்டன.
  • கேரளா = மலபார் மாவட்டம் + தென் கனரா மாவட்டங்களின் காசர்கோட் வட்டம், திருவிதாங்கூர் – கொச்சி.
  • பம்பாய் மாநிலம் = சௌராஷ்டிர மாநிலம் + கட்ச் மாநிலம்.

 

புதிய மாநிலங்களுக்கான கோரிக்கை: 

  • உ.பி., ம.பி., பீஹார் – புந்தேல்கண்ட் இயக்கம்
  • உ.பி. – ஹரிதா பிரதேசம் போராட்டம் / இயக்கம் 
  • கர்நாடகாவில் – கடகு போராட்டம் / இயக்கம் 
  • மகாராஷ்டிராவில் விதர்பா போராட்டம் 
  • குஜராத் – சௌராஷ்டிரா கிளர்ச்சி / இயக்கம் 
  • பஞ்சாபில் – கலிஸ்தான்  கிளர்ச்சி / இயக்கம் 
  • மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து போராட்டம் 
  • தெலுங்கானா – தெலுங்கானா போராட்டம் / இயக்கம்

 

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில், சென்னை மாகாணத்தை “தமிழகம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று திரு சங்கரலிங்கனார், 27.07.1956 முதல் 10.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தார். 
  • 10.10.1956 அன்று மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருந்தலைவர் காமராஜர், கக்கன், மா.பொ.சி., பேரறிஞர் அண்ணா, ஜீவானந்தம் ஆகியோர் அவரை மருத்துவமனையில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். 
  • ஆனால், சங்கரலிங்கனார் தனது முடிவில் உறுதியாக இருந்து அதற்காக தன் உயிரைத் தியாகம் செய்தார். 
  • திரு.C.என்.அண்ணா துரை அவர்கள் தமிழக அரசின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபோது (1967) அவர் சட்டமன்றத்தில் தேவையான திருத்தங்களைச் செய்து, 1969 ஆம் ஆண்டில் அவர் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. 
  • மாண்புமிகு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா, தியாகி சங்கரலிங்கநருக்காக 77 லட்சம் ரூபாய் செலவில் விருதுநகரில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை 18.06.2015 அன்று திறந்து வைத்தார்.
  • 1960 மே 1-ல் பம்பாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டு (மகாராஷ்டிரா, குஜராத்) குஜராத் 15-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1961 – 10வது சட்டத்திருத்தத்தின் படி 11-08-1961ல் தாத்ராநாகர் ஹவேலியூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது.
  • 1962 – 12வது சட்டத்திருத்தப்படி கோவா, டையூ, டாமன் யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது.1962-ல் 13-வது சட்டத் திருத்தப்படி 1-12-1963ல் அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்து பிரிக்கப்பட்டு 16-வது மாநிலமாக உருவானது.
  • 1962 – 14வது சட்டத்திருத்தப்படி 1963-ல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது.
  • 1966 நவம்பர் -1-ல்ஷா கமிஷன்பரிந்துரைப்படி பஞ்சாப் மூன்றாக பிரிக்கப்பட்டு (பஞ்சாப், ஹரியானா,சண்டிகர்) ஹரியான 17வது மாநிலமாகவும், சண்டிகர்யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டது.
  • 1969 – 22வது சட்டத்திருத்தப்படி அஸ்ஸாமில் இருந்து மேகாலயா பிரிக்கப்பட்டு தன்னாட்சி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 25-1-1970-ல் ஹிமாச்சலப்பிரதேசம் 18-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 21-1-1972-ல் மணிப்பூர் 19-வது மாநிலமாகவும், திரிபுரா 20-வது மாநிலமாகவும், மேகாலயா 21வது மாநிலமாகவும் உருவாக்கப்பட்டது.
  • 1972 ஜூன் 26 அஸ்ஸாமில் இருந்து அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகியவை பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது.
  • 1974 35வது சட்டத்திருத்தப்படி சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இணை மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1975 மே 16-ல் 36வது சட்டத்திருத்தப்படி சிக்கிம் 22வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1986 53வது சட்டத்திருத்தப்படி 20-02-1987ல் மிசோரம் 23-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1986 54வது சட்டத்திருத்தப்படி 20.02.1987ல் அருணாச்சலப் பிரதேசம் 24-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1987 56வது சட்டத்திருத்தப்படி 30-05-1987ல் கோவா 25வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 1991 69வது சட்டத்திருத்தப்படி 1992ல் டெல்லிக்கு தேசிய தலைநகர் பகுதி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • 1-11-2000ல் மத்தியபிரதேசத்தில் இருந்து சட்டீஸ்கர் பிரிக்கப்பட்டு 26வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 9-11-2000ல் உத்திரபிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல் பிரிக்கப்பட்டு 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 15-11-2000ல் பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டு 28-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 2-06-2014ல் ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு 29வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் தற்போது 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் (6 யூனியன் பிரதேசங்கள், 1 தேசிய தலைநகர்) உள்ளது.

மாநிலங்கள் () யூனியன் பிரதேசங்களின் பெயர் மாற்றங்கள்:

பழைய பெயர் தற்போதைய பெயர் மாற்றப்பட்ட ஆண்டு
ஐக்கிய மாகாணம் உத்திரப்பிரதேசம் 26-01-1950
மெட்ராஸ் தமிழ்நாடு 14-01-1969
மைசூர்  கர்நாடகா 1 நவம்பர் 1973
லாகடிவ், மினிகாய் & அமினி தீவுகள்  லட்சத்தீவு
டெல்லி யூனியன் பிரதேசம் தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி 1992
உத்தராஞ்சல் உத்தரகண்ட் 2006
பாண்டிச்சேரி புதுச்சேரி
அசாம் அசோம்
ஒரிசா ஒடிசா 24 மார்ச் 2011

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here