இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
ஒன்றியமும் அதன் ஆட்சி பரப்பும்
முதல் அட்டவணை:
இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் உள்ளது. மாநிலங்களின் ஆட்சி அதிகார வரம்புகளும் இதில் அடங்கும்.
நான்காவது அட்டவணை:
மாநிலங்களவையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஷரத்துகளை இது கொண்டுள்ளது.
பகுதி 1: விதி 1-4
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 1இந்திய யூனியன் நிலப்பரப்பு மற்றும் அதன் எல்லைகளை பற்றிக் கூறுகிறது இந்தியாவில் 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன இதில் நான்கு விதிகள் உள்ளன.
விதி 1
- யூனியனின் பெயர் இந்தியா பாரத் என குறிப்பிடுகிறது
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பெயர்கள்
- அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள முதல் அட்டவணை நிலப்பகுதியை மூன்றாகப் பிரித்து உள்ளது
- மாநில பகுதிகள்
- முதல் அட்டவணையில் உள்ள யூனியன் பிரதேசங்கள்
- பிறகு இருக்கும் மற்ற நிலப்பகுதிகள்
விதி 2
- நாடாளுமன்றத் சட்டத்தின் வாயிலாக ஒன்றியத்தில் புதிய மாநிலங்களை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது உருவாக்கலாம்
- இந்தியாவின் எல்லைக்கு வெளியில் உள்ள நிலப் பகுதியை இந்தியாவுடன் புதிய மாநிலமாக இணைத்தல்
- எடுத்துக்காட்டு சிக்கிம் 1975, 35 மற்றும் 36 அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
விதி 3
மாநிலங்கள் தங்கள் நிலப்பரப்பை ஒழுங்கு படுத்திக் கொள்ளுதல் பற்றி கூறுகிறது
- ஒரு மாநிலத்திலிருந்து நிலப்பகுதியை தெளிப்பதன் வாயிலாக அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை இணைப்பதன் மூலமாக புதிய மாநிலத்தை உருவாக்கலாம்
- மாநிலத்தின் எல்லைகளை மாற்றி அமைக்கலாம்
- மாநிலத்தின் நிலப்பரப்பை அதிகரிக்கலாம்
- மாநிலத்தின் நிலப்பரப்பை குறைக்கலாம்
- மாநிலத்தின் பெயரை மாற்றலாம்
- இவை அனைத்தையும் நாடாளுமன்றத்தின் அன்றும் சட்டத்தின் வாயிலாக தான் நிறைவேற்ற இயலும்
- நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி நிர்வாக செயல் வாயிலாக செய்ய இயலாது
- நாடாளுமன்றம் ஒரு மாநிலத்தின் அனுமதி இன்றி அதன் பெயர் மற்றும் எல்லைகளை மாற்றம் செய்யலாம்
- எந்த ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் முன் அனுமதி இல்லாமல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியாது குடியரசுத் தலைவர் முதலில் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அம்மாநில சட்டசபை கருத்தை தெரிவிக்க அறிக்கை அனுப்புவார்
- எனினும் அம்மாநில சட்டசபை கருத்திற்கு குடியரசுத் தலைவரோ அல்லது நாடாளுமன்றமோ கட்டுப்படத் தேவையில்லை
- நாடாளுமன்றம் ஒரு சட்டம் வாயிலாக சாதாரண பெரும்பான்மை ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கலாம் அல்லது மாநிலத்தின் நில அளவு அல்லது எல்லைகள் அல்லது பெயரை மாற்றி அமைக்கலாம்
எடுத்துக்காட்டு: வங்கதேசத்துடன் இல்லை பரிமாற்றம் (ஜூலை 31 2015) 100 அரசமைப்புச் சட்டத்திருத்தம் அல்லது 119 அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- இதற்கு அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவை இல்லை
- குறிப்பு: இதன் கீழ் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இந்திய நிலப் பகுதியை அயல்நாட்டிற்கு கொடுக்க முடியாது
மாநில உருவாக்கத்திற்கான செயல்முறை:
ஜனாதிபதியின் முன் பரிந்துரை:
- இந்த மசோதாவை சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் பரிந்துரைசெய்தார்.
- குடியரசுத் தலைவரால் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட காலக்கெடு (காலக்கெடு) அவர்களின் ஆலோசனையை (Y/N) (அரசு விரும்பினால், குடியரசுத் தலைவர் காலக்கெடுவை நீட்டிக்கலாம்)
- அரசு அளிக்கும் ஆலோசனை குடியரசுத் தலைவருக்கு கட்டுப்படாது. இதன் பொருள், மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களை ஜனாதிபதி ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம், கருத்துக்கள் / ஆலோசனைகள் உரிய நேரத்தில் பெறப்பட்டாலும் கூட ஜனாதிபதி நேரடியாக சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும்.
ஒரு அரசு உருவாக்க அல்லது நீக்க இந்த மசோதா இரு அவைகளிலும் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |