இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
அடிப்படைக் கடமைகள்
- 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
- அடிப்படை கடமைகள் ஸ்வரன் சிங் கமிட்டியின் பரிந்துரையின் படி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 1976 ஆம் ஆண்டின் 42ஆவது திருத்தச் சட்டம் குடிமக்களின் சில பொறுப்புகளை நமது அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்று சேர்த்தது.
- இந்தத் திருத்தம் அரசியலமைப்பில் பகுதி IVA என்ற புதிய பகுதியை சேர்த்தது. இந்த புதிய பகுதி ஒரு சட்டப்பிரிவு மட்டுமே கொண்டுள்ளது, இது 51A ஆகும், இது முதன் முறையாக குடிமக்களின் பத்து அடிப்படைக் கடமைகளை குறிப்பிட்டுள்ளது.
அடிப்படை கடமைகளின் பட்டியல்:
- ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றையும் மதிக்க வேண்டும்.
- விடுதலைப் போராட்த்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
- இந்தியாவின் இறயாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
- தேவை ஏற்படின், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, நாட்டுப் பணியாற்ற வேண்டும்.
- சமய, மொழி, மண்டல அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவர் மனதிலும் சகோதரத்துவமும் இணக்கமும் ஏற்பட பாடுபட வேண்டும். பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
- நமது கூட்டுப் பண்பாட்டு மரபினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
- காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்.
- அறிவியல் உணர்வு, மனிதநேயம், பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
- பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வன்முறையை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
- தனிப்பட்ட அளவிலும் கூட்டு செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயல வேண்டும்.
- 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்புக்கு வகை செய்திடல் வேண்டும். (86 திருத்தச் சட்டப்படி 2002ல் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது).
- நீதிபதி வர்மா கமிட்டி 1999 ஆம் ஆண்டு அடிப்படைக் கடமைகளை குடிமக்களுக்கு கற்பிப்பதை பற்றி அறிக்கை தர அமைக்கப்பட்டது.
- இதன் அறிக்கை 2000ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் கல்வி வழியில் அடிப்படைக் கடமைகளை கற்பிக்க பரிந்துரைத்தது.
2003இல் உச்ச நீதிமன்றம் நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |