Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வரவு...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைகள்

  • வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை என்பது வரவு செலவு திட்டத்தில் உள்ள வருவாய் செலவை விட குறைவாக இருப்பதாகும்.
  • இந்த நிலை அரசு பற்றாக்குறை எனவும் அழைக்கப்படும்.

இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் நான்கு வகையான பற்றாக்குறைகள் உள்ளன

  1. வருவாய் பற்றாக்குறை
  2. வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை
  3. நிதிப் பற்றாக்குறை
  4. முதன்மைப் பற்றாக்குறை

(A) வருவாய் பற்றாக்குறை:

  • அரசின் வருவாய் செலவினம், வருவாய் வரவை விட அதிகமாக இருந்தால் அது வருவாய் பற்றாக்குறை எனப்படும். 
  • இதில் மூலதன வரவு மற்றும் மூலதனச் செலவை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
  • வருவாய் பற்றாக்குறை என்பது அரசின் அன்றாட பணிகளை நடத்துவதற்கு தேவையானதை விட குறைவாக உள்ளதைக் காட்டுவதாகும்.
  • RE – RR>0ஆக‌ இருக்கும்.

வருவாய் பற்றாக்குறை (RD) = மொத்த வருவாய் செலவினம் (RE) – மொத்த வருவாய் வரவுகள் (RR)

(B) வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை:

வருவாய் மற்றும் மூலதனக் கணக்குகளின் மொத்த வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையாகும்

வரவு செலவு திட்ட பற்றாக்குறை = மொத்த செலவு – மொத்த வரவு

(C) நிதிப் பற்றாக்குறை:

நிதிப்பற்றாக்குறை = வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை – அரசின் அங்காடி கடன்களும் ஏனைய பொறுப்புகளும்

எனவே நிதிப் பற்றாக்குறை என்பது வரவு செலவு பற்றாக்குறையை விட அதிகமானதாகும்

(D) முதன்மைப் பற்றாக்குறை:

  • முதன்மைப் பற்றாக்குறையானது நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி   செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறையாகும். 
  • இது அரசின் உண்மையான சுமையை காட்டும், மேலும் இதில் முன்னர் வாங்கிய கடனுக்கான வட்டியை கணக்கில் கொள்ளாது.
  • எனவே முதன்மைப் பற்றாக்குறை என்பது அரசின் கடனுக்கான குறிப்பாக வட்டி செலுத்தலுக்கான தேவையைக் குறிக்கும்.
  • எனவே நிதிப் பற்றாக்குறை முதன்மைப் பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கும்.

முதன்மை பற்றாக்குறை (PD) = நிதிப்பற்றாக்குறை (FD) – வட்டி செலுத்துதல் (IP) 

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here