Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Economy Free Notes - Planning...

TNPSC Economy Free Notes – Planning (திட்டமிடல்)

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

திட்டமிடலின் பொருள்:

  • மைய திட்டமிடல் ஆணையத்தால் நன்கு வடிவமைக்கப்பட்ட முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களையும், நோக்கங்களையும் அடைவதற்கான வழி முறையே திட்டமிடல் ஆகும். 
 • பொருளாதாரம், அரசியல், சமூக அல்லது இராணுவ நோக்கங்களை திட்டமிடல் மூலம் அடைவதற்கான இலக்குகளாக இருக்கலாம்.

திட்டமிடலின் இலக்கணங்கள்:

 • “பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்.

ராபின்ஸ்

 • “பொருளாதார திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும்.

டால்டன்

இந்தியாவில் திட்டமிடல்:

 • ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய வேண்டிய இலக்குகளை, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார நோக்கங்களையும், வழிகாட்டுதல்களையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளையும் திட்டங்களையும் உள்ளடக்கிய வரைபடமே பொருளாதார திட்டமிடல் ஆகும். 
 • தற்போதைய பொருளாதார திட்டமிடல் சிந்தனை மிகவும் புதியது, ஆனால் மார்க்சிச சோசலிசத்தில் அடிப்படையில் ஓரளவு வேரூன்றியுள்ளது. 
 • 20ம் நூற்றாண்டில் அறிஞர்கள், கோட்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஐரோப்பாவின் நிலையை முன்னிறுத்தி, முதலாளித்துவத்தையும், சமூகத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்விணையும், நிறுத்த அரசின் தலையிடுதல் அவசியம் என்றார்.
 • சோவியத் ஒன்றியம் திட்டமிடலை 1928இல் செயல்படுத்தத் துவங்கியது. பொருளாதாரத் திட்டமிடல் சோவியத் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற உதவியது. 
 • 1930களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம் அமெரிக்காவில் மக்களின் வாங்கும் திறனை குறைத்து சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியதால், பொருளாதார திட்டமிடலின் அவசியம் என்னும் கருத்து வலுவடைந்தது. 
 • நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பாக ஒதுக்கீடு செய்ய இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட சூழல் நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. போரின் விளைவுகளை சமாளிக்க திட்டமிடல் தான் சரியான தீர்வு என்ற சிந்தனை பரவத்தொடங்கியது.
 • இந்திய விடுதலைக்குப் பிறகு 1948இல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதில் மைய திட்ட குழு மற்றும் கலப்புப் பொருளாதார அமைப்பு முறை ஆகிய இரண்டையும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 
 • இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனவரி 26, 1950 அன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் அமைக்கப்பட்டது. 
 • ஏப்ரல் 1, 1951ல் முதல் திட்ட காலம் துவங்கியது. இதில் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலமாக 1951 முதல் 1956 வரை ஏற்படுத்தப்பட்டது. 
 • இந்தியாவில் திட்டமிடுதலின் பரிணாம வளர்ச்சியை கீழ்க்கண்ட நிகழ்வுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
 • சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா (1934): புகழ் பெற்ற பொறியியல் வல்லுநரும், அரசியல்வாதியுமான எம் விஸ்வேஸ்வரய்யா 1934ல் இந்தியாவில் திட்டமிட்டு அதற்கான அடித்தளத்தை அமைத்தார். அவர் தனது ஆலோசனையாக பத்தாண்டு திட்டம் ஒன்றை அவர் எழுதிய “இந்திய பொருளாதார திட்டமிடல் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
 • ஜவஹர்லால் நேரு (1938): தேசிய திட்டக் குழு ஒன்றை அமைத்தார். அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும், இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தாலும் நேருவின் முயற்சிகள் நின்றுவிட்டன.
 • பாம்பே திட்டம் (1940): மும்பையின் முன்னனி தொழிலதிபர்கள் பாம்பே திட்டம் என்ற 1938இல் முன்மொழிந்தனர். இது 15 ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டு திட்டமாகும்.
 • எஸ்.என். அகர்வால் (1944): காந்தியத் திட்டம் என்ற திட்டத்தை 1944இல் வழங்கினார். இது வேளாண்மை மற்றும் கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டமாகும்.
 • எம்.என்.ராய் (1945): மக்கள் திட்டம் என்பதை வடிவமைத்தார். இது வேளாண்மை உற்பத்தி மற்றும் விநியோகத்தை இயந்திர மயமாக்குவதையும், நுகர்வுப் பொருட்களை அரசே வினியோகம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.
 • ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1950): சர்வோதய திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இது காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரின் கருத்துக்களின் உத்வேகத்தால் தயாரிக்கப்பட்டத் திட்டமாகும். விவசாயம் மட்டுமல்லாமல் சிறு மற்றும் குடிசை தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளை கொண்ட திட்டமாகும்.
 • இந்த ஆறுத் திட்டங்களையும் கவனமாக ஆராய்ந்து திட்டக்குழுவை அமைத்து ஐந்தாண்டுத் திட்டங்களை செயல்படுத்த ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார். அவரே இந்திய அரசின் திட்டக் குழுவின் முதல் தலைவராவர்.

 

**************************************************************************

TNPSC Group 1 prelims
TNPSC Group 1 prelims
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here