இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இந்திய திட்ட ஆணையம்
- இந்திய திட்ட ஆணையம் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 15ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் இது உருவாக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்திய திட்ட ஆணையம் ‘நாட்டின் வளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலையுடனும்’ பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.
- திட்டங்களை உருவாக்குவது தொடர்பான ஒரு ஆலோசகர் என்ற பங்களிப்பினை திட்ட ஆணையம் ஆற்றுகிறது அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்.
திட்ட ஆணைய பணிகள்:
- நாட்டின் எதிர்கால வளர்ச்சி தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தேசிய மூலவளங்களை மதிப்பீடு செய்வது திட்ட ஆணையம் பணியாகும் மனித வளங்கள் மூலதனம் கச்சாப் பொருள்கள் ஆகியனவும் இதில் அடங்கும்.
- மூலவளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலை தவறாமலும் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது ஆணையத்தின் முதன்மை பணியாகும்.
- முன்னுரிமை அடிப்படையில் துறைகள் இனங்காணப்பட்டு மூலவளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், திட்டங்களை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றி முழுமைப்படுத்துவதிலும் ஆணையத்தின் பொறுப்பாகும்.
- எனவே, வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சூழ்நிலைகளை அடையாளம் காண வேண்டியது ஆணையத்தின் பொறுப்பு ஆகும்.
- நாட்டில் அவ்வப்போது நிலவும் சூழ்நிலைக்கு தக்கவாறு திட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளையும் திட்ட ஆணையம் ஆராய்கிறது.
- ஒரு திட்டத்தின் பல்வேறு கட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகளை ஆணையம் வரையறை செய்கிறது. எனவே, திட்டச் செயல்பாடுகள் உரிய கால இடைவேளைகளில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
- இதன் மூலம் உரிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறைகளில் உரிய செயல்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கும் வகையில் ஆலோசகராக திட்ட ஆணையம் இயங்குகிறது.
- ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகள் எழும்போது அதனை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் திட்ட ஆணைய பணியாகும்.
- மேலும், ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட காலத்தில் எட்ட வேண்டிய இலக்குகளை வகுத்து, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வரையறை செய்வதும் ஆணையத்தின் பணியாகும்.
நிறுவனமும் அமைப்பும்:
- பிரதமர், நான்கு முழு நேர உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர்கள் நிலையிலுள்ள நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோரை திட்ட ஆணையம் கொண்டுள்ளது.
- முழுநேர ஊழியர்களை பொறுத்தமட்டில் தொழில்நுட்பத்துறை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியத் துறைகளில் வல்லமைமிக்கவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
- திட்ட ஆணையத்தின் தலைமை பொறுப்பை ஏற்று ஆணைய பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்கிறார்.
- இதில் பின்னர் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை ஏற்று ஆணையம் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, பிரதமர் தலைவராக இருந்து கூட்டங்களை தலைமையேற்று நடத்துவார்.
- ஆணைய துணைத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்படும் ஒருவர் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.
- திட்ட வரைவுகளை தயாரித்து மத்திய அமைச்சகம், செயலகம், நான்கு முழுநேர உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்களாக உள்ள சம்பந்தப்பட்ட கேபினட் அமைச்சர்கள் ஆணையத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான நிதி அமைச்சர், திட்ட அமைச்சர், உறுப்பினர் மற்றும் செயலர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டியது திட்டக்குழு உதவி தலைவரின் பொறுப்பாகும்.
- ஆணையத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் மூலம் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைக்கபடுகிறது.
- திட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பில் துறைச் செயலாளர்கள் கீழ்நிலைச் செயலாளர்கள், நிலையிலான உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
- திட்ட ஆணைய நிர்வாகத்தில் மாநில அரசுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. இது முழுவதும் மத்திய அரசு அமைப்பாகும்.
- கூட்டுப் பொறுப்பு எனும் நெறியின் கீழ் திட்ட ஆணையம் இயங்குகிறது. பொதுப்பிரிவு, பொருள் பிரிவு, நிர்வாக பிரிவு என மூன்று பிரிவுகளாக ஆணையம் பிரிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதாரம் தொடர்பான அனைத்து பணிகளையும் இப்பிரிவு மேற்கொள்கிறது. குறிப்பிட்ட வளர்ச்சி பணிகள் குறித்த திட்டங்கள் உதாரணமாக, உணவு, வேளாண்மை, மின்சாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்ற தனிப்பட்ட துறைகளுக்கான திட்டங்கள் பொருள் பிரிவின் கீழ் வருகின்றன. நிர்வாகப் பணிகள் நிர்வாகப் பிரிவின் கீழ் வருகின்றன.
- இதைத் தவிர, வேறு சில பிரிவுகளும் திட்டங்கள் உருவாக்கம் மற்றும் அமலாக்கம் தொடர்பாக இயங்குகின்றன. அவை பின்வருமாறு,
- தேசிய திட்டக் குழு:
- 4-வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் 1965இல் தேசிய திட்டக் குழு அமைக்கப்பட்டது. அறிவியல், பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறை வல்லுநரைக் கொண்டு உருவாக்கப்படும்.
- இக்குழு வேளாண்மை, நிலசீர்திருத்தம், நீர்பாசனம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, வர்த்தகம், மேலாண்மை, குடும்பகட்டுப்பாடு, சமூகநலம், இயற்கை வளங்கள், போக்குவரத்து, பன்னாட்டு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுகிறது.
- இந்த ஒவ்வொரு துறையிலும் தேவைகள் குறித்து விரிவான ஆய்வு செய்து திட்ட ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டியது இக்குழுவின் கடமையாகும்.
- தேசிய வளர்ச்சி குழு:
- பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சி குழுவில் அனைத்து முதலமைச்சர்களும் உறுப்பினர்கள் ஆவர்.
- இக்குழுவில் மாநிலங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் ஒவ்வொரு மாநிலங்களிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகிறது.
- தேசிய வளர்ச்சி குழு கூட்டங்களின் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்கள் சில நேரங்களில் பங்கேற்பதில்லை. திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது சீராய்வு செய்வதும் மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பதும் இக்குழுவின் பங்காகும்.
- திட்டங்களை திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உருவாக்குவதும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தும் இக்குழுவின் பணியாகும்.
- எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான மூலவளங்களை கருத்தில் கொண்டு, நிர்வாகப் பணிகளை திறம்பட செயல்படுத்தும் வகையில் இக்குழு பணியாற்றுகிறது.
வறுமை ஒழிப்பை நோக்கி:
-
- இந்தியாவின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வறுமையாகும். நாட்டில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதையும் திட்ட ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் அவரது பொருளாதார நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து புரிந்து கொள்ளத்தக்கது.
- அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் வழங்குவதுடன் அவர்கள் ஒரு நாகரிகமான வாழ்க்கையை நடத்துவதற்கான தேவையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் பெறும் வகையில் தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவது அரசின் முக்கியமான கடமையாக உணரப்பட்டுள்ளது.
- ஆனாலும், பொருளாதார வளர்ச்சியிலும், வறுமை ஒழிப்பை இணைப்பது என்பது இன்னுமும் சவாலாகவே நீடிக்கிறது. எனவே, 4-வது ஐந்தாண்டு திட்டத்தில் அரசு இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகிறது.
- 1970களின் தொடக்கத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டது.
- வறுமை ஒழிப்புக்கான வழிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- வேலையின்மை மற்றும் முழுமையான வேலையின்மை காரணமாக ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அனைத்து ஐந்தாண்டு திட்டங்களும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தன.
சமூக நீதியினை உறுதிப்படுத்துதல்:
- அரசமைப்பின் 38 (2)-வது உறுப்பு இவ்வாறு கூறியது: “அரசு குறிப்பாக, வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிரிவினர் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்கள் குழுக்கள் ஆகியோரிடையிலும் தனிநபரிடையிலும் தகுதி, வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்”.
- திட்டங்களை வகுப்போர் இப்பிரிவினை மனதில் கொண்டு திட்டங்களை வகுக்கின்றனர்.
- சமூக நீதியை உறுதிப்படுத்துதல் என்பது பொருளாதாரத்தை திட்டமிடும் நிலையிலேயே இணைந்து உள்ளது.
- வளர்ச்சிக்கான வழிமுறைகளை வகுக்கும்போது கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- சமூக மயப்படுத்தப்பட்ட சமுதாயங்களில் உருவாக்குவதன் மூலம் செல்வங்கள் ஒரு சிலர் கைகளில் மட்டுமே குவிவது தடுக்கப்படுவதுடன் சுரண்டல், ஒடுக்குமுறை ஆகிய கொடுமைகளுக்கு முடிவு கட்ட இயலும்.
- வரலாற்று பூர்வமாகவே இந்திய சமுதாயம் என்பது சமூகத்தில் ஒரு பிரிவால் மற்ற பிரிவு ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்திருக்கிறது.
- எனவே தான், இத்தகைய பழைமை வாய்ந்த சக்திகள் மற்றும் சமூகத் தீமைகளை தடுக்கும் வழிகளை காண்பது அரசமைப்பை உருவாக்கியவர்களுக்கு சவாலாகவே அமைந்தது.
- அடிப்படை உரிமைகள் குறித்து பேசும் அரசமைப்பின் பிரிவு III-ன் கீழ் ஒருவர் முழுமையான வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளும் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாக்கப்படுவது அடிப்படை உரிமைகள் ஆகும்.
- பிரிவு IV அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் மக்களின் வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்து ஒரு சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் பணிகள் அமைய வேண்டும் என்று கூறுகிறது.
- திட்ட ஆணையம் கவனம் செலுத்த வேண்டியுள்ள மற்றொரு முக்கிய பகுதி கிராம நகர்ப்புற ஏற்றத்தாழ்வாகும்.
- பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், ஆகியவற்றிற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, இந்திய சமூகத்திலும் பொருளாதாரத்திலும் அதன் பாதிப்பு ஏற்படுகிறது.
- கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களின் வளர்ச்சியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கை நெறிக்கு எதிராக சமத்துவமின்மையை ஊக்குவிக்கிறது.
- எனவே, இந்த ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிராம பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான பல திட்டங்களை திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மக்களாட்சி சமதர்மம்:
- இந்தியா விடுதலை பெற்ற தருணத்தில் தேசத்தை எவ்வாறு ஆள்வது எவ்வாறு திட்டமிடுவது என்பது பல்வேறு பிரச்சனைகள் இருந்தன.
- இவற்றில் ஒன்று நீண்டகால வளர்ச்சிக்கான சிறந்த செயல்திட்டம் எது என்பதை கண்டுபிடிப்பதாகும்.
- இந்திய வளர்ச்சிக்கான திட்டமிடுதலின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆவார்.
- அவரைப் பொருத்தவரை சோவியத் யூனியன் பின்பற்றிய திட்டமிடல் முறையில் மட்டுமல்லாமல் முதலாளித்துவம் பின்பற்றிய தாராளவாத கொள்கைகளாலும் கவரப்பட்டி இருந்தார்.
- இந்த இரண்டு கோட்பாடுகளும் இணைந்து இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
- இதுவே மக்களாட்சி சமதர்மம் என்று அழைக்கப்படுகிறது.
- நேருவை பொருத்தவரை மக்களாட்சி முறையில் திட்டமிடலும் இணைந்து பின்பற்றப்படவேண்டும்.
- திட்டமிடல் என்பது சமுதாயத்தில் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஒருங்கிணைந்த வழிமுறையாகும். அது உற்பத்தி நுகர்வு, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், சமூக பணிகள் போன்றவற்றோடு உற்பத்தியை இணைப்பதாகும்.
- இத்தகைய ஒரு சமுதாயமே தனிநபர் ஆளுமை வளர்ச்சியை முழுமையாக வழங்க இயலும். இதையொட்டி சமுதாயத்தில் பொருள் வளங்களை சிறப்பாக கட்டுப்படுத்துவது சிறப்பான உடைமை விநியோகத்தை உறுதிப்படுத்துவது ஆகியவற்றிற்கான கொள்கை வழிமுறைகளை உருவாக்குவது அரசின் கடமையாகும்.
- கீழ்தட்டு மக்கள் பிரிவுகளை பாதுகாப்பதற்கு அத்தியாவசியம் பொருள்களின் விநியோகத்தினையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956):
- இது ஹாரேட் டாமர் (Harrod – Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
- இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.
- இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961):
- இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
- இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.
- இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (1961-1966):
- இத்திட்டம் “காட்கில் திட்டம் “(Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
- சீன – இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை.
திட்ட விடுமுறை காலம் (1966-1969):
- இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.
- இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1969-1974):
- இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.
- இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1974-1979):
- இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
- இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P. தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.
சுழல் திட்டம்:
1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985):
- இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இதன் இலட்சியமாகும்.
- இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
- இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1990):
- இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாக தனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.
ஆண்டுத் திட்டங்கள்:
மைய அரசில் நிலையற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை எனவே 1990 – 91 மற்றும் 1991 – 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997):
- இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
- இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.
ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002):
- சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது.
- இத்திட்டகால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.
பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002-2007):
- இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
- இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
- இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0%. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.
பதினொன்றாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007-2012):
- இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”
- இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.
பனிரெண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012-2017)
- இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
- இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |