இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
நிதி ஆயோக்கின் நோக்கங்கள்
- முன்னுரிமை திட்டங்களை அடையாளம் காண்பதில் மாநில அரசுகளையும் மத்திய அரசு இணைத்துக் கொள்வதன் மூலம் திட்டமிடல் செயல்முறையின் மாநிலங்களும் இணைக்கப்படுகின்றன. திட்டமிடல் செயல் முறையில் மாநிலங்களும் பங்களிக்க உள்ளதால் இது கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பாக செயல்படும்.
- கிராமங்கள் அளவிலான நம்பகமானத் திட்டங்களை உருவாக்கி அவை வளர்ச்சியோடு ஒருங்கிணைக்கப்படும்.
- பொருளாதார செயல்திட்டத்துடன் தேசப்பாதுகாப்பு இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முறைகேடுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பிரிவு மக்களும் பயனடைகிறார்களா என்பது கண்காணிக்கப்படும்.
- தொலைநோக்கு கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சியை நிதி ஆயோக் கண்காணிக்கும்.
- படைப்பூக்கம் கொண்ட வளர்ச்சிகள் உருவாக்கப்படும். பயனாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வி மற்றும் கொள்கையாட்சி நிறுவனங்கள் போன்ற பங்காளர்களின் பங்கேற்பு ஊக்கப்படுத்தப்படும். தேசிய, சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட சமுதாயத்தின் மூலமாக அறிவும் ஊக்கமும், தொழில் முனைப்பும் கொண்ட ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும்.
- வளர்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்தும் வண்ணம் பிரிவுகள் மற்றும் துறைகள் இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தளத்தினையும் வழங்குகிறது.
- நீடித்த மற்றும் சமத்துவமான வளர்ச்சியை அடைவதற்கான சிறந்த நடை முறைகளை உருவாக்குவதிலும் நல்ல ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதிலும் ஆராய்ச்சி சிறப்பாக மேற்கொள்வதற்கான திறன் மிக்க வளமையம் ஒன்றையும் அது பராமரிக்கிறது.
- தேவையான மூலவளங்களை அடையாளம் காண உதவும் வகையில் திட்ட அமலாக்கம் வடிவமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
- புதிய திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தகுதிபடுத்தலுக்கு நிதி ஆயோக் அதிக அழுத்தம் தருகிறது.
- தேசிய வளர்ச்சி செயல்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
- நிதி ஆயோக் தொடங்கப்பட்ட பின்னர் முன் முயற்சி மேற்கொண்ட சில திட்டங்கள் வருமாறு: பதினைந்தாண்டு செயல்திட்டம், ஏழு ஆண்டு கண்ணோட்டம், நகர்புற மாற்றம் மற்றும் மறு உருவாக்கத்திற்கான அடல் திட்டம், டிஜிட்டல் இந்தியா, அடல் புத்தாக்க திட்டம் போன்றவை.
- 2018-2022 காலக்கட்டத்திற்கான வளம் குன்றா வளர்ச்சி வடிவமைப்பு ஒன்றில் நிதி ஆயோக் கையொப்பமிட்டுள்ளது.
- வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் அரசின் உறுதிபாடு இதில் பிரதிபலிக்கிறது.
- வறுமை ஒழிப்பு மற்றும் நகர் மயமாக்கம், உடல்நலம், குடிநீர் மற்றும் பொது சுகாதாரம், கல்வி, வேலை உருவாக்கம், பாலினச் சமத்துவம், இளைஞர் மேம்பாடு போன்ற பகுதிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நிலைகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பது மற்றும் ஒரு சில கைகளில் செல்வம் குவிவதை தடுப்பது ஆகியவற்றை செயல்படுத்தக் கூடிய அம்சங்கள் தற்போதைய பொருளாதார கொள்கைகளிலும் மற்றும் செயல் அமைப்புகளிலும் காணப்படுவதில்லை.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |