Table of Contents
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
இயற்கை வளங்கள்:
- ஒரு நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள்.
- காடு, நீர், கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் சக்திகள் ஆகியன முக்கிய இயற்கை வளங்கள் ஆகும்.
- அதிக இயற்கை வளங்களைக் கொண்டுள்ள இந்தியா பெருவாரியான ஏழை மக்களையும் கொண்டுள்ளது.
- இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை, பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின் சக்தி, அதிக கனிமவளங்கள் காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
இயற்கை வளங்களின் வகைகள்:
- புதுப்பிக்கக்கூடிய வளங்கள்: நீண்டகாலங்கள் நிலைத்து இருக்கக்கூடிய மீண்டும் உருவாக்கக்கூடிய வளங்கள் எ.கா. காடுகள், வனவிலங்குகள், காற்று, கடல் வளங்கள், நீர்மின் சக்தி, உயிரினத் தொகுதி, காற்றாலை மின் உற்பத்தி போன்றவை.
- புதுப்பிக்க இயலாத வளங்கள்: மீண்டும் உருவாக்கப்பட முடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள் எ.கா. படிம எரிபொருட்கள் நிலக்கரி, பெட்ரோலியம் கனிமங்கள் போன்றன.
மண் வளம்:
- இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோமீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. இது உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
- இந்தியா நிலப்பரப்பளவில் உண்மையில் பெரியநாடு என்ற போதும் மிகப்பெரிய மக்கட் தொகை அளவினால் நிலப்பரப்பு – மனிதன் விகிதம் சாதகமானதாக இல்லை.
- வேளாண் புள்ளி விவர அறிக்கையின்படி, அதிக விவசாய பரப்பில் விவசாயம் செய்பவர்கள் (10 ஹெக்டேர் மற்றும் அதற்கு மேலும்) குறைவான எண்ணிக்கையிலும் மிக குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் (1 ஹெக்டேர் அதற்கும் குறைவு) அதிகமாண எண்ணிக்கையிலும் இருக்கின்றனர். நிலம் துண்டாடப்படுதால், மேலும் பிரிவினையைக் கூடும் என்பதையே காட்டுகிறது.
வனவளம்:
- 2007 – ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவின் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டேர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02% ஆகும்.
- இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள், 31.90 மில்லியன் ஹெக்டேர் காடுகள் ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84 மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்தவெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
இரும்புத்தாது:
- இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
- ஹேமடைட் இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத் தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு நமது நாட்டில் இருப்பு உள்ளது.
- ஹேமடைட் இரும்புத் தாது அதிகமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
- மேக்னடைட் தாது கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரையில் அதிகம் கிடைக்கிறது. கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
- பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
- சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
- மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
- வங்காளம், ஜார்கண்ட் மாநில நிலக்கரி வயல்களிலிருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது.
அலுமினியத்தாது (பாக்சைட்):
- பாச்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
- கிழக்குக் கடற்கரையில், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
மைக்கா:
- 60% மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
- இந்தியா மொத்த வியாபாரத்தில் பங்குடன், மைக்காதாள் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது. மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது.
சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
- இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
- டிக்பாய், பாடர்பூர், நாகர்காட்டிகா, காசிம்பூர், பள்ளியரியா, ருத்ராபூர், சிவசாகர், மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள்) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
தங்கம்:
- இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
- மூன்று முக்கிய தங்கச் சுரங்கப் பகுதிகள் உள்ளன. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும் (இரண்டும் கர்நாடகாவில் உள்ளது) மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
வைரம்:
- UNECE (United Nations Economic Commission for Europe) அறிக்கையின்படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
- அதில் அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும், கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஒடிஷாவின் நியுபடா மற்றும் பார்கர் மாவட்டம், ஆந்திராவின் நாராயணபேட் மத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர் குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |