Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Economy Free Notes - National...

TNPSC Economy Free Notes – National Income

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

நிகர உள்நாட்டு உற்பத்தி (net domestic product: NDP):

  • நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தை கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும் 
  • ஒரு நாட்டில் உள்ள சில முதலீட்டு கருவிகள் உற்பத்தி செய்யும் போது தேய்மானம் அடையலாம் பழுதாகி போகலாம் அல்லது பயனற்று   போகலாம். தேய்மானத்தின் மதிப்பை GDPயிலிருந்து கழித்துவிட்டால் கிடைப்பது NDP ஆகும்
  • நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP – தேய்மானம்

நிகர தேசிய உற்பத்தி (NNP at market price):

  • நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். GNP லிருந்து தேய்மானத்தின் மதிப்பு முதலீடு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்தபின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.
  • NNP = GNP – தேய்மான கழிவு

தேய்மானத்தை மூலதன நுகர்வு கழிவு (capital consumption allowance) என்றும் கூறலாம்

காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNP at factor cost):

  • NNP என்பது உற்பத்தியின் சந்தை மதிப்பு ஆகும். காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும் 
  • காரணி செலவில் நிகர தேசிய வருவாயை பெறுவதற்கு சந்தை விலையில் NNPயின் பண மதிப்பிலிருந்து மறைமுக வரியை கழிக்க வேண்டும். மேலும் மானியங்களை கூட்ட வேண்டும்
  • காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP – மறைமுகவரி + மானியம்

தனிநபர் வருமானம் (personal income):

  • தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் ஆகும். 
  • அவை வட்டியாகவோ, வாரமாகவோ கூலியாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டினால் அது தனிநபர் வருமானம் ஆகும். 
  • தேசிய வருவாயிலிருந்து பங்கு அளிக்கப்படாத கார்பரேட் லாபம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் உழைப்பாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றை கழித்துவிட்டு, மாற்று செலுத்துதல்களை கூட்டி தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது.
  • தனிநபர் வருமானம் = தேசிய வருமானம் – (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள்

செலவிடக் கூடிய வருமானம் (disposable income):

  • செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் செலவிடக் கூடிய வருமானத்தை குறிக்கிறது. தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முகவரிகளை (Eg. Income tax) கழித்தால் கிடைப்பது செலவிடக்கூடிய வருமானம். 
  • இந்த வருமானம் தான் தனி நபர்கள் நுகர்வுக்காக செலவிடக்கூடிய பண அளவு ஆகும்.
  • செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் – நேர்முக வரிகள்

தலா வருமானம் (per capita income):

  • தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகையில் வகுக்கக் கிடைப்பது தலா வருமானம்.
  • தலா வருமானம் = (தேசிய வருமானம்)/(மக்கள் தொகை) 

உண்மை வருமானம் (real income):

  • பண வருவாய் என்பது தேசிய வருமானத்தை ஒரு ஆண்டில் உள்ள பொது விலை அளவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. 
  • மாறாக தேசிய வருவாய் என்பது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுற்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பை பல அளவுகளில் குறிப்பிடப்படுகிறது 
  • நிலையான விலையில் தேசிய வருமானம் = (நடப்பு விலையில் தேசிய வருவாய்)/(P1/P0)  

P1 = நடப்பு ஆண்டு விலை குறியீடு.

Po = அடிப்படை ஆண்டின் விலைக் குறியீடு.

GDP குறைப்பான் (GDP deflator):

  • GDP குறைப்பான் என்பது GDPயில் குறிப்பிட்டுள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மாற்ற குறியீட்டெண் ஆகும். இதுவும் ஒரு விலை குறியீட்டெண் ஆகும். 
  • கொடுக்கப்பட்ட ஆண்டில் பண மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட GDPயை உண்மை GDP யால் வகுத்து, 100ஆல் பெருக்கினால், GDP குறிப்பாணை கணக்கிடலாம்
  • GDP குறைப்பான் =(பணமதிப்பு GDP)/(உண்மை GDP)   × 100

தேசிய வருவாயை அளவிடும் முறைகள்:

  • ஓர் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை கணக்கிட்டு, அதனை பண மதிப்பில் மதிப்பிட படவேண்டும் 
  • தேசிய வருவாயை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம். அவை உற்பத்தி முறை வருவாய் முறை செலவு முறை இவற்றை
  1. உற்பத்தி அல்லது மதிப்பு கூடுதல் (value added)
  2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதியம் முறை மற்றும்
  3. செலவு முறை

உற்பத்தி முறை (product method):

  • உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளின் உற்பத்தியின் மொத்தமே தேசிய உற்பத்தி ஆகும்.
  • ஒரு துறையின் வெளியீடு(output) மற்றொரு துறையின் உள்ளீடு (input) ஆகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரு முறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு இருமுறை கணக்கிடல் என்று பெயர். 
  • இதனை தவிர்க்க இறுதி பொருட்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருமான முறை (income method):

  • வருமான முறை என்பது தேசிய வருவாய்கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது. உற்பத்தி நிலைகளில் உற்பத்தி காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி தேசிய வருமானத்தை கணக்கிடலாம். வருமான முறை, காரணிகள் சம்பாதிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது
  • Y=W+r+i+π+(R-P)

இதில்

W = கூலி

r = வாடகை

I = வட்டி

π = லாபம்

R = ஏற்றுமதி

P = இறக்குமதி

செலவு முறை (expenditure or outlay method):

  • இம்முறையில், ஓர்ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
  • தனிநபர் சுய நுகர்வு செலவுகள் நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீடு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி போன்ற அனைத்து செலவுகளையும் கூட்டி செலவு முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
  • GNP=C+I+G+(X-M)

C – தனியார் நுகர்வுச் செலவு

I – தனியார் முதலீடு செலவு

G – அரசின் கொள்முதல் செலவு

X – M = நிகர ஏற்றுமதி

தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம்:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேசிய வருவாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய வருவாய் பொருளாதாரத்தின் கணக்கு அல்லது சமூகக் கணக்கு (social accounting) எனச் சொல்லப்படுகிறது. தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் பின்வருமாறு:

  • தேசிய வருவாய் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் தேசிய வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது. மேலும் பொருள்கள் மற்றும் பணிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, பகிரப்படுகின்றன, செலவு செய்யப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன, மற்றும் வரி விதிக்கப்படுகின்றன போன்றவைகளை அறிய இயலும்.
  • தேசிய அளவிலான பணவியல் மற்றும் பொதுநிதிக் கொள்கைகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல கடைபிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளை கையாளவும் தேசிய வருவாய் ஆய்வு உதவுகிறது.
  • திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கு நாட்டின் மொத்த வருமானம் உற்பத்தி சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளிவிவரங்களை தேசிய வருவாய் கணக்கீடு அளிக்கின்றது.
  • குறுகிய கால மற்றும் நீண்டகால பொருளாதார மாதிரிகளை உருவாக்க தேசிய வருவாய் கணக்கீடு பயன்படுகிறது
  • துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், தேசிய வருவாய் விவரங்கள் பயன்படுகின்றன
  • தேசிய வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது. தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுகிறது.
  • ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமான பகிர்வை தெரிந்துகொள்ள தேசிய வருவாய் பயன்படுகிறது
  • பேரியல் பொருளாதார காரணிகளான வரி – GDP விகிதம், நடப்பு கணக்கு பற்றாக்குறை – GDP விகிதம், நிதி பற்றாக்குறை – GDP விகிதம் கடன் – GDP விகிதம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது

தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள்:

தேசிய வருவாய் கணக்கீடு செய்யும் போது இந்தியாவின் சிறப்பு இயல்புகளை மனதில் கொள்ள வேண்டும். இந்தியா ஒரு ஒழுங்கு படுத்தப்படாத, அன்றாட பிழைப்பை நடத்தும் சிறு தொழில்களையும் பண்ட மற்றும் அங்காடிகளையும் உள்ளடக்கிய நாடு. எனவே ஒரு சரியான தேசிய வருமான மதிப்பீடு பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சில சிரமங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன

  1. மாற்று செலுத்துதல்கள் (transfer payments)
  • ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள் போன்றவற்றை அரசு அளிக்கிறது. இவைகள் அரசின் செலவுகள் ஆகும்.
  • ஆனால் இவைகளை தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. தேசிய கடனுக்காக செலுத்தப்படும் வட்டியும் இது போன்றதே.
  1. தேய்மானங்கள் கொடுப்பளவு மதிப்பிடுவதில் சிக்கல் (difficulties in assessing depreciation allowance)

தேய்மானம் கொடுப்பளவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்கள் போன்றவற்றை தேசிய வருவாயிலிருந்து கழிப்பது என்பது மிக எளிதானது அல்ல. இவைகளை அதிக கவனத்துடன் சரியாக மதிப்பீடு செய்து கழிக்க வேண்டும்.

  1. பணம் செலுத்தப்படாத சேவைகள் (unpaid services)

இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர். உணவு தயாரித்தல், தையல் பழுதுபார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளையும் எந்தவித பண வருமானமும் இன்றி வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை

  1. சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து பெரும் வருமானம் (income from illegal activities)
  • சூதாட்டம், கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக மதுவை தயாரித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம் தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை.
  • இந்த நடவடிக்கைகள் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்தாலும் சமுதாய ரீதியில் உற்பத்தியைச் சார்ந்தது என்று எடுத்துக்கொள்ள முடியாது
  1. சுய நுகர்வுக்கு உற்பத்தி செய்தல் மற்றும் விலை மாற்றம் (production for self-consumption and changing price)
  • விவசாயிகள் தங்களின் சுய நுகர்விற்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர்.
  • உற்பத்தி முறையில் தேசிய வருவாய் கணக்கிடுதல் என்பது நடப்பு சந்தை விலையில் முடிவடைந்த பொருள்கள் மற்றும் பணிகளின் மதிப்பை அளவிடுதல் ஆகும். ஆனால் விலைகள் ஒரே மாதிரி நிலையாக இருப்பது இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வுகான, பொருளியல் அறிஞர்கள் நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை பயன்படுத்தி நிலையான விலையில் உண்மை தேசிய வருவாயை கணக்கிடுகின்றனர்.
  1. மூலதன இலாபம் (capital gains)
  • மூலதன சொத்துக்கான வீடு மற்றும் பிற சொத்துக்கள் பங்குகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மூலதன இலாபம் கிடைக்கிறது.
  • தேசிய வருவாய் கணக்கீட்டில் மூலதன இலாபம் சேர்க்கப்படுவது இல்லை
  1. புள்ளி விவர சிக்கல் (statistical problems)
  • புள்ளி விவரங்களை சேகரிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஒரே விவரத்தை பலமுறை கணக்கில் சேர்ப்பது 
  • நம்பகத்தன்மை புள்ளிவிவரங்கள் கிடைக்காமை சேகரிப்பவர்களின் திறன் குறைவு, அர்பணிப்பு இன்மை ஆகியவை தேசிய வருவாய் கணக்கிடுதலில் பிரச்சனைகளை தரலாம்.
  • ஆகையினால் தேசிய வருவாய் மதிப்பீட்டில் துல்லியத் தன்மை இல்லாமலும், புள்ளிவிவரங்கள் போதுமானதாக இல்லாமலும் இருக்கின்றன. 10% அதிகமாகவே அல்லது குறைந்தோ மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவின் GDPயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ஏறக்குறைய 2 ட்ரில்லியன் US$ யிலிருந்து 5 ட்ரில்லியன் US$ வரை வேறுபடுகிறது.

 

**************************************************************************

TNPSC Economy Free Notes - National Income_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here