Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - பணவியல்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பணவியல் கொள்கை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

பணவியல் கொள்கை (Monetary Policy)

  • பண அளிப்பு மற்றும் மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே பணவியல் கொள்கை எனப்படுகின்றது. 
  • பேரினப் பொருளியல் கொள்கைகளான பணவீக்கம், நுகர்ச்சி, வளர்ச்சி மற்றும் நீர்மைத்தன்மை போன்றவற்றை அடைய மேற்கொள்ளும் தேவை சார்ந்த பொருளியல் கொள்கையாகும். 
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் முக்கியத்துவம் பெற்றதும், 1976ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மில்டன் ஃபிரைட்மேனால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணவியல் கொள்கையாகும். 
  • அவர் ஒரு பணவியலாளராக இருந்தும், 1929 துவங்கி 1930களில் நிலவிய உலக பெருமந்தத்துக் காரணம் அமெரிக்க மையவங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் என்பதனைத் தனது நூலான ‘அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு, 1986—1960″ (Monetary History of the United States, 1867—1960) என்ற நூலில் மிகத் தைரியமாகத் தெரிவித்திருந்தார். 

விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சுருக்க பணக்கொள்கை: 

  • விரிவாக்க பணக்கொள்கை என்பது (Expansionary Monetary Policy) மலிவுப் பணக்கொள்கையாகும் (Cheap Money Policy). இதில் பணவியல் அதிகார அமைப்பான மைய வங்கி அதன் கருவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துகிறது. 
  • நடப்பு குறுகியகால வட்டி விகிதத்தைவிட குறைவான வட்டிவிகித்தையும், வழக்கத்தை விட வேகமான பண அளிப்பையும் ஏற்படுத்துவது விரிவாக்கப் பணக்கொள்கையாகும். 
  • இது பாரம்பரியமாக பொருளாதார நடவடிக்கைளின் பின்னிறக்க காலத்தில் ஏற்படும் வேலைவாய்பின்மைக்கு எதிராக எடுக்கப்படும். வட்டி விகித குறைப்பு நடவடிக்கை கடனுக்கு ஆகும் செலவை குறைந்து தொழில் உற்பத்தியையும், வாணிபத்தையும் விரிவாக்கும். 
  • இதனால் தொகு தேவை (அனைத்து பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை) அதிகரித்து, மொத்த உள்ள நாட்டு உற்பத்தியால் கணக்கிடப்படும் குறுகிய கால வளர்ச்சியை தூண்டும். 
  • மேற்கூறியதற்கு எதிரானது சுருக்கப் பணக்கொள்கை (Contractionary Monetary Policy) அருமைப் பணக்கொள்கை (Dear Money Policy) எனப்படுகிறது. 
  • இதில், குறுகியகால வட்டிவிகிதம் நடப்பு வட்டிவிகித்தைவிட அதிகப்படுத்துவது, பண அளிப்பினை குறைப்பது அல்லது சுருக்குவது ஆகும். 
  • இது, பொருளாதாரத்தின் குறுகியகால வளர்ச்சியை குறைத்து பணவிக்கத்தை குறைப்பது ஆகும், சுருக்கப்பணக் கொள்கை வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியளர்கள் கடன் வாங்குவதையும் செலவு செய்வதையும் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை பின்னோக்கி திருப்புவது ஆகும். 

பணவியல் கொள்கையின் நோக்கங்கள் (Objectives of Monetary Policy): 

  • வளர்ந்த நாடுகளின் பொருளதாரத்தில் பணவியல் கொள்கை நிலைப்படுத்துதல் மற்றும் பொருளாதார அமைப்பினில் சமநிலையைப் பேணுதல் ஆகிய பணிகளை செய்யவேண்டியுள்ளது. 
  • ஆனால், வளர்ச்சி குறைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் இது இயக்கநிலையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை விரிவாக்க ஏதுவான ஒழ்நிலையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. 
  • பணவியல் கொள்கை பொருளாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கருவியாக உணரப்படுகிறது. 

பணத்தின் நடுநிலைத் தன்மை: 

  • பொருளியலாளர்களான விக்ஸ்டெட், ஹேயக் மற்றும் ராபர்ட்சன் ஆகியோர் பணத்தின் நடுநிலை பற்றி விவரித்த முக்கிய நிபுணர்கள் ஆவர்கள். 
  • அவர்கள் பணவியல் அதிகார அமைப்பு பொருளாதாரத்தில் பணம் நடுநிலைத் தன்மை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். 
  • பணத்தில் ஏற்படும் மாற்றமே அனைத்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும். 
  • பண நடுநிலையாளர்களின் கூற்றுப்படி, பணவியல் மாற்றங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் பொருளாதார அமைப்பில் விலகலையும், இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்றனர். 

விகித நிலைத்தன்மை: 

  • பரிவர்த்தனை விகித நிலைத்தன்மை என்பது பணவியல் கொள்கையின் பாரம்பரியமான நோக்கமாகும். பல்வேறு நாடுகளில் பொன் திட்டம் அமலில் இருந்து காலத்தில் இது ஒரு முக்கிய நோக்கமாகும். 
  • எப்பொழுது ஒரு நாட்டின் செலுத்துச் சமநிலையில் சமனற்ற நிலை தோன்றுகிறதோ அப்பொழுது தங்க நகர்வின் காரணமாக அது தானாகவே சரி செய்துகொள்ளும். எப்பொழுது தங்கம் உள் வருகிறதோ அப்பொழுது பணமும் கடனும் விரிவடைகிறது. 
  • எப்பொழுது தங்கம் வெளிச்செல்கிறதோ அப்பொழுது பணமும் கடனும் சுருங்குகிறது என்பது ஒரு முக்கியமான புகழ்பெற்ற வாக்கியமாகும். 
  • இம்முறை இருக்கும்பொழுது செலுத்துச் சமநிலையில் ஏற்படும் சமனற்ற நிலைகள் தானாகவே சரிசெய்யப்பட்டு பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத்தன்மை பேணப்படும். 

விலை நிலைத்தன்மை: 

  • பொருளியலாளர்கள் காஸல், கீன்ஸ் போன்றவர்கள் விலை நிலைத்தன்மை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையில் முக்கிய நோக்கம் என்கின்றனர். 
  • விலை நிலைத்தன்மை பொதுமக்களிடம் பொதுவான நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும் இது வணிக நடடிவக்கையை அதிகரித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். 
  • மக்களிடையே சமமான வருவாய் மற்றும் சொத்துப் பங்கீடுகளை செய்யும். இவைகளின் தொடர் விளைவாக வளர்ச்சிக்கான பொது அலையும் சமுதாய நலனும் நிறுவப்படும், 
  • இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது. விலை நிலைத்தன்மை என்பது விலை மாறாமல் நிலையாக (price rigidity) இருப்பதோ, விலைத் தேக்கமடைந்து (price stagnation) இருப்பதோ அல்ல. 

முழுவேலைவாய்ப்பு: 

  • உலக பெருமந்தத்தின் பொழுது வேலைவாய்பின்மை மிகவேகமாக அதிகரித்தது. 
  • இது சமுதாய அளவில் அபாயகரமானதும், பொருளாதார அளவில் விணடிப்பையும், அறநெறியளவில் வருந்தத்தக்கதாகவும் இருந்தது. 
  • ஆகவே, முழுவேலைவாய்ப்பு என்பது பணவியல் கொள்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும், 1936-ல் வெளியிடப்பட்ட “வேலைவாய்ப்பு, வட்டி, மற்றும்பணத்திற்கான பொதுக் கோட்பாடு (General Theory of Employment, Interest and Money) என்ற கீன்ஸின் நூல் முழுவேலைவாய்ப்பு என்ற பணவியல் கோட்பாட்டின் குறிக்கோளை முன்னிலைப்படுத்தியது. 

பொருளாதார வளர்ச்சி: 

  • பொருளாதார வளர்ச்சி என்பது நீண்டகாலத்தில் உண்மை தலா வருவாய் (real per capita income) அதிகரித்து செல்லும் நடவடிக்கை ஆகும். 
  • இது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பொருள் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதை உணர்த்துவது ஆகும். 
  • ஆகவே, சமநிலை பண அளவு, உற்பத்தி அளவுகள், சாதகமான சேமிப்பு முதலிடு ஆகிய சூழ்நிலைகளை பராமரித்து அதன்மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையின் குறிக்கோளாக அமைகிறது. 
  • தேவை மற்றும் அளிப்பிற்கிடையே சமநிலையை ஏற்படுத்த நெகிழ்ச்சியுடன் கூடிய பணவியல் கொள்கை ஒரு சிறந்த வழிமுறையாகும். 

செலுத்துச் சமநிலையில் சமநிலையை பேனுதல்: 

  • பேணுதல் என்பது பணவியல் கொள்கையின் குறிக்கோளாகும். உலகப்போர்களுக்குப் பிறகு வாணிபத்தில் சமனற்ற நிலைகள் தோன்ற ஆரம்பித்தன. 
  • உலக வர்த்தகம் சமனற்ற நிலையில் அதிகரித்ததால் வரும் அந்நிய செலாவணி பிரச்சனையாகும். 
  • இதன் காரணமாக செலுத்துசமநிலையில் வரும் பற்றாக்குறை பொருளாதாரத்தின் மற்ற குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதின் திறனையும் குறைக்கும். 
  • இதனால், குறைவளர்ச்சி நாடுகள் தங்களுடைய இறக்குமதியினை குறைப்பதால் அதன் வளர்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் பாதகமான நிலைக்கு தள்ளப்படுகிறது. 
  • ஆகவே, பணவியல் கொள்கை செலுத்துச்சமநிலையில் சமமான நிலையினை பேணுவதை தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

பணவியல் கொள்கைக் குழு: 

பணவியல் கொள்கைக் குழு பற்றி:

  • ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கைக் குழுவை (MPC) அமைத்துள்ளது, இது ரெப்போ வீதம், தலைகீழ் ரெப்போ வீதம், வங்கி வீதம், பண இருப்பு விகிதம் (CRR) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி பணவியல் கொள்கையை உருவாக்குகிறது.
  • இது ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934இன் பிரிவு 45ZBஇன் கீழ் மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது.

செயல்பாடுகள்:

MSF, ரெப்போ வீதம், தலைகீழ் ரெப்போ வீதம் மற்றும் பணப்புழக்க சரிசெய்தல் வசதி உள்ளிட்ட பல்வேறு கொள்கை விகிதங்களை தீர்மானிக்கும் பொறுப்பு MPCக்கு வழங்கப்பட்டுள்ளது

MPC யின் கட்டமைப்பு:

  • குழுவில் ஆறு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆறு உறுப்பினர்களில், மூன்று பேரை அரசாங்கம் பரிந்துரைக்கும். எந்தவொரு அரசாங்க அதிகாரியும் MPCக்கு பரிந்துரைக்கப்படமாட்டார்.
  • 3 உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள். ஆர்பிஐ ஆளுநர் குழுவின் பதவி வழி தலைவராக செயல்படுவார்.

உறுப்பினர்களின் தேர்வு மற்றும் பதவிக்காலம்:

  • தேர்வு 
  • அரசாங்கம் பரிந்துரைக்கும் MPCயின் உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பொருளாதார விவகார செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளரை கொண்ட ஒரு தேடல்-தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
  • பதவிக்காலம்
  • MPC உறுப்பினர்கள் நான்கு வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். மீண்டும் நியமனம் பெற தகுதியற்றவர்கள்.
  • முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன?
  • ஒவ்வொரு உறுப்பினரும் வாக்களிக்கும் போது பெரும்பான்மை வாக்குகளால் முடிவுகள் எடுக்கப்படும்.
  • ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் பங்கு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் பணவியல் கொள்கைக் குழுவுக்கு தலைமை தாங்குவார். எவ்வாறாயினும், ஆளுநர் மற்ற குழு உறுப்பினர்களை மீறுவதற்கான வீட்டோ அதிகாரம் கிடையாது, ஆனால் சமநிலை   ஏற்படும் போது வாக்களிக்கும் உரிமை பெறுகிறார்.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here