Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Economy Free Notes - Methods...

TNPSC Economy Free Notes – Methods of Economic Organization Part-1

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான பொருளாதார அமைப்பின் முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

Attend TNPSC Book Back Question Quiz Here

பொருளியல்

  • ‘பொருளியல் (Economics) என்ற சொல் “ஆய்க்கனோமிக்ஸ் (Oikonomikos) என்னும் பழமையான கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. “ஆய்க்கோஸ்” (oikos) என்றால் இல்லங்கள் மற்றும் “நேமெயின் (Nemein) என்றால் நிர்வாகம், வழக்கம் அல்லது விதி என்று பொருள்படும். ‘பொருளியல் என்றால் ‘இல்லங்களின் நிர்வாகம் என்று பொருள்படும். 
  • இந்த பொருள் முன்னர் ‘அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்டது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆல்பிரட் மார்ஷல் என்பவரால் ‘பொருளாதாரம் என மறுபெயரிடப்பட்டது.

நான்கு வரையறைகள்:

  • ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலும் பொருளியலின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்ப நான்கு வரையறைகள் தரப்பட்டுள்ளன. 
  • தொன்மை காலத்தை உணர்த்தும் ஆடம் ஸ்மித்தினுடைய செல்வ இலக்கணம்
  • புதிய தொன்மை காலத்தை உணர்த்தும் மார்ஷலின் நல இலக்கணம்
  • புதிய யுகத்தை உணர்த்தும் இராபின்ஸின் பற்றாக்குறை இலக்கணம்
  • நவீன யுகத்தை உணர்த்தும் சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணம்.

செல்வ வரையறை – ஆடம் ஸ்மித்:

  • ஆடம் ஸ்மித் (1723-1790) “நாடுகளின் செல்வத்தின் இயல்பும், காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு (1776) என்ற தனது நூலில் “பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்.
  • ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை அவர் விளக்குகிறார்.
  • சமுதாயத்தில் உள்ள நபர் தனது சொந்த லாபத்தை ஊக்குவிக்க விரும்புகிறார் என்று அவர் கருதுகிறார், அவ்வாறு செயல்படும்போது அவர்களை திரைக்குப் பின்னாலிருந்து ஒரு புலனாக உந்து சக்தி (Invisible hand) வழி நடத்துகிறது.
  • ஒவ்வொரு மனிதனும் தனது சுயநலத்தால் தூண்டப்படுகிறான் என்று அவர் கூறுகிறார். இதன் பொருள் ஒவ்வொரு நபரும் தனது சொந்த நலனுக்காக உழைக்கிறார்கள்.உற்பத்தியின் அளவை அதிகரிக்க “தொழிலாளர் பிரிவு” அறிமுகப்படுத்தப்படுவதை ஸ்மித் ஆதரிக்கிறார்.உற்பத்தியின் அளவினை அதிகரிக்க “வேலை பகுப்புமுறையை (Division of Labour) அறிமுகப்படுத்துவதை ஸ்மித் ஆதரிக்கின்றார். 
  • சமுதாயம் மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்கின்றன. அளிப்பு ஆற்றல் மிகுந்து இருப்பதினால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கின்றன.
  • ஆடம்ஸ்மித்தின் நூலான “நாடுகளின் செல்வம் (1776) வெளியீட்டுக்குப்பின் பொருளியல் ஒரு தனி இயலாக உருவானது.

திறனாய்வு:

  • ஸ்மித்தைப் பொறுத்தவரை, பொருளியல் என்பது ‘செல்வத்தை ‘திரட்டுதல் மற்றும் ‘செல்வத்தைச் செலவிடுதல் சார்ந்த நடவடிக்கைகளாகும். 
  • பொருட்சார் செல்வம் என்ற ஒன்றிற்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 
  • செல்வமே இறுதியானதாக கருதப்பட்டுள்ளது. இந்த கருத்தினால் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான மனித நலம் அவரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 
  • மதம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் மேலோங்கியிருந்த காலக் கட்டத்தில் ஸ்மித் தனது வரையறையை வழங்கியுள்ளார். 
  • எனவே, இரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர், நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தைக்கற்றுத் தருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுவதால், பொருளியலை ஓர் “இருண்ட அறிவியல் (dismal science) எனக் கூறியுள்ளனர்.

நல இலக்கணம்: ஆல்ஃபிரட் மார்ஷல்:

  • ஆல்ஃபிரட் மார்ஷல் (1842-1924) தன்னுடைய “பொருளியல் கோட்பாடுகள் (1890) என்ற நூலில் பொருளியலை கீழ்வருமாறு வரையறுத்துள்ளார்.
  • “அரசியல் பொருளியல் அல்லது பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும், பொருள் சார் நலனை அடைவதின் பொருட்டு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வதும் ஆகும். 
  • பொருளியல் ஒருபுறம் செல்வத்தைப் பற்றியும், முக்கியமான மற்றொரு புறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது.

மார்ஷலின் வரையறையின் முக்கிய அம்சங்கள்:

  • அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முதலும், முடிவுமானது செல்வமே என்று பொருளியலில் கருதப்படவில்லை. மனிதன் முதலில் நலத்தையே மேம்படுத்த முயல்கிறான், செல்வத்தையல்ல. 
  • பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையைப் பற்றியதே அந்தச் சாதாரண மனிதர்கள் அன்பினால் கட்டுப்பட்டவர்களேயன்றி, உச்சபட்ச பணம் பெறுவதை நோக்கிச் செல்பவர்கள் அல்லர். 
  • பொருளியல் ஒரு சமூக அறிவியல் ஆகும். அது சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றிப் படிக்கிறது.

திறனாய்வு: 

  • மார்ஷல், பொருள்சார் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளார். அவர் பொருள்சாரா நலனைத் தரக்கூடிய மருத்துவர், ஆசிரியர் போன்றோரது பணிகளைக் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், அவர்களது பணிகளும் மனித நலனை மேம்படுத்துகிறது.
  • பொருள் சாரா பணிகளுக்கு வெகுமதியாக அளிக்கப்படும் பணத்தினைப் பற்றி, மார்ஷல் தனது கூலிக் கோட்பாட்டில் ஏதும் கூறாமல் புறக்கணித்துவிட்டார். 
  • மார்ஷலின் இலக்கணமானது நலன் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், நலன் என்பது தெளிவுற வரையறுக்கப்படவில்லை. 
  • நலன் என்பது மனிதருக்கு மனிதர், நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபடக்கூடியது. 
  • மக்கள் நலனை மேம்படுத்தும் மற்றும் மேம்படுத்தாத பொருட்களை பற்றி மார்ஷல் தெளிவாக வேறுபடுத்தி காட்டியுள்ளார். ஆனால் நடைமுறையில், பொருளாதாரத்தில் மதுபானங்கள் போன்ற பொருட்கள் மனித நலனை மேம்படுத்துவதாக இல்லை எனினும், விலை பெறுபவையாக உள்ளதால், அவையும் பொருளியலின் எல்லைக்குள் உட்படுத்தப்படுகிறது.  
  • எனினும், நலன் என்பது தனி மனிதனோ அல்லது மனிதர்களின் குழுவோ மகிழ்ச்சியாகவோஅல்லது வசதியாகவோ வாழ்வதாகும்.
  • தனிமனிதனின் நலன் அல்லது நாட்டின் நலனானது அந்த நாடு கொண்டுள்ள செல்வ இருப்பை மட்டுமே சார்ந்தது அல்ல. அது அந்நாட்டின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளையும் சார்ந்ததாகும்.

பற்றாக்குறை இலக்கணம் – லியோனல் ராபின்ஸ்:

  • இலயனல் ராபின்ஸ், “பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை என்ற தமது நூலை 1932ல் வெளியிட்டார். 
  • அவரை பொறுத்த வரையில் பொருளியல் என்பது “விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே ஆகும்.

ராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள்:

  • விருப்பங்கள் மனிதனின் தேவைகளை குறிக்கின்றன. மனிதர்கள் எல்லையற்ற தேவைகளை உடையவர்கள்.  
  • மனிதர்களின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்புகள் குறைவானதாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ உள்ளன.
  •  ஒரு பொருளின் பற்றாக்குறை என்பது அதன் தேவையை பொருத்து அமைகிறது. 
  • மேலும், பற்றாக்குறையான வளங்கள் மாற்று வழிகளில் பயன்தரக் கூடியவையாக உள்ளன. எனவே, மனிதன் தன் தேவைகளை வரிசைப்படுத்தி, முதலில் மிகுந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்கிறான். எனவே, ராபின்ஸ் கூற்றுப்படி பொருளியல் என்பது தேவைகளைத் தேர்வு செய்யும் அறிவியலாகும். 

திறனாய்வு:

  • ராபின்ஸ் மனிதர்களுக்கு நலன் தரக்கூடிய பொருட்கள் அல்லது நலன்தரா பொருட்கள் என்று தரம் பிரிக்கவில்லை. 
  • அரிசி மற்றும் மதுபானம் ஆகிய இரண்டு உற்பத்தியிலும், பற்றாக்குறையான வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரிசியை உற்பத்தி செய்வதால் மனிதனின் நலன் மேம்படுகிறது. ஆனால் மதுபான உற்பத்தி மனிதனின் நலனை மேம்படுத்தாது. ஆனாலும், முடிவுகளைச் சமமாகவே பொருளியல் கருதுகிறது என ராபின்ஸ் கூறுகிறார். 
  • பொருளியல் என்பது நுண்ணியல் பொருளியல் கருத்துக்களான வளங்களைப் பங்கிடுதல், பண்டங்களின் விலைத் தீர்மானம் ஆகியவற்றை மட்டுமே கூறுவது அல்ல. அது பேரியல் பொருளாதார நிகழ்வுகளான தேசிய வருவாய் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் உள்ளடக்கியது. ஆனால் ராபின்ஸ் பொருளியலை வளங்களை ஒதுக்கீடு செய்யும் இயலாக மட்டுமே சுருக்கிக் கூறிவிட்டார்.
  • ராபின்ஸின் இலக்கணமானது பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கவில்லை.

வளர்ச்சி இலக்கணம்: சாமுவேல்சன்:

  • பால் அந்தோணி சாமுவேல்சனின் புத்தகம், “பொருளாதாரம் ஒரு அறிமுக பகுப்பாய்வு”, 1948. 
  • அவரின் கூற்றுப்படி பொருளியல் என்பது, “மனிதனும், சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான வளங்களைக் கொண்டு, பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து, அவற்றை தற்காலத்திலும் எதிர்காலத்திலும், மக்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் இயலாகும் என வரையறை செய்கிறார்.

வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்கள்:

  • எல்லையற்ற இலக்குகளோடு தொடர்புடைய சாதனங்கள் பற்றாக்குறையானவை, அவை மாற்றுப் பயனுடையவை என ராபின்சைப் போன்றே பால் சாமுவேல்சனும் கூறுகிறார். 
  • சாமுவேல்சன் தன்னுடைய இலக்கணத்தில் காலத்தையும் சேர்த்து இயக்கத் தன்மையுடையதாக உருவாக்கியுள்ளார். எனவே, அவரது இலக்கணம் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக உள்ளது.
  •  சாமுவேல்சனின் இலக்கணம் பணம் பயன்படுத்தப்படாத, பண்ட மாற்றுப் பொருளாதாரத்திற்கும் பொருந்தக்கூடியது. 
  • சாமுவேல்சனின் இலக்கணம், உற்பத்தி, பகிர்வு மற்றும் நுகர்வு போன்ற பல கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. 
  • சாமுவேல்சன் பொருளியலை ஒரு சமூக அறிவியலாகக் கருதினார். ஆனால் ராபின்ஸ் பொருளியலை தனி மனிதனின் நடத்தை பற்றிய அறிவியலாகக் கருதினார். 
  • மேற்காண் அனைத்து இலக்கணங்களிலும் சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணமே அதிக திருப்திகரமானதாகக் கருதப்படுகிறது.

 

**************************************************************************

TNPSC Economy Free Notes - Methods of Economic Organization_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Economy Free Notes - Methods of Economic Organization_4.1