Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Economy Free Notes - Methods...

TNPSC Economy Free Notes – Methods of Economic Organization Part-3

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான பொருளாதார அமைப்பின் முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

Attend TNPSC Book Back Question Quiz Here

பொருளாதார அமைப்பு முறைகள்: 

  • பொருளாதார அமைப்பு முறை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். 
  • இது சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ள உதவும் பொருளாதார நடவடிக்கைகளின் செய்யும் வழிமுறை ஆகும் பொருளாதார அமைப்பு முறை மூன்று முக்கிய வகைகளை கொண்டுள்ளது அவையாவன:
  • முதலாளித்துவ பொருளாதார அமைப்பு  (முதலாளித்துவம்) 
  • சமத்துவ பொருளாதாரம்  (சமத்துவம்)  மற்றும்
  • கலப்பு பொருளாதார அமைப்பு  (கலப்புத்துவம்) 
  • முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய இரு அணுகுமுறைகளும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது. 
  • முதலாளித்துவ பொருளாதாரத்தின் தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. 
  • சமத்துவ பொருளாதாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை மாறாக உற்பத்தியில் அனைத்து செயல்பாடுகளும் பொதுவுடைமை ஆக்கப்படும்.
  • கலப்புப் பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவம் சமத்துவம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் உள்ளடக்கியது. 

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்):

  • முதலாளித்துவத்தின் தந்தை ஆடம் ஸ்மித் ஆவார். முதலாளித்துவ பொருளாதார தடையில்லா பொருளாதாரம் (laissez-faire free economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் (market economy) என்று அழைக்கிறோம். இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும் சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.
  • முதலாளித்துவ பொருளாதாரத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும். பொருள்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் லாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருப்பார்கள். தனிநபர் தங்களுக்கான வேலையை தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சுதந்திரமாக செயல்படுவர். 
  • USA மேற்கு ஜெர்மனி ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்
  • மேலும் இவ்வமைப்புகள் அங்காடி சக்திகளிடமிருந்து  (market forces) அடித்தட்டு சாதாரண மக்களை பாதுகாக்க தேவையான சமூக நல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்:

  • தனியார் சொத்துரிமை மற்றும் பரம்பரைச் சட்டம்  (private ownership of property and law of inheritance): 
  • முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில் நிலம், உழைப்பு, மூலதனம் இயந்திரங்கள், சுரங்கம் போன்ற அனைத்து வளங்களும் தனிநபர்களுக்கு சொந்தமாக இருக்கும்.
  • உரிமையாளர்கள் வளங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிமம் கொள்ள வைத்துக்கொள்ள, விற்க மற்றும் பயன்படுத்த அதிகாரம் படைத்தவர்களாவர் உரிமையாளர்கள் இறந்த பிறகு சொத்துக்கள் அவர்கள் வாரிசுகளுக்கு மாற்றப்படும்.
  • தெரிந்துதெடுப்பதில் சுதந்திரம்  (freedom of choice and enterprise): 

ஒவ்வொரு தனிநபரும் தங்களது வேலையை தேர்ந்தெடுப்பதிலும், உற்பத்தி செய்யும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பார்கள்.

  • இலாப நோக்கம்  (profit motive): 
  • முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் லாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனி நபர்களும் அமைப்புகளும் அதிக லாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள். 
  • இங்கு வேலை பகுப்பு புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு கவனம் போன்றவை பின்பற்றப்படும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்றன தங்க விதி (golden rule) உச்ச இலாபம் அடைதல்.
  • போட்டியில் சுதந்திரம்  (free competition): 

பொருட்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களின் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே போட்டி நிலவும்.

 

  • விலை இயங்கும் முறை  (price mechanism): 

விலை இயங்கும் முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இதயமாகும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் விலை இயங்கும் முறை தேவை மற்றும் அளிப்பு அங்காடி சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது

  • அரசின் பங்கு  (role of government): 

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் விலை இயங்கு முறையை கட்டுப்படுத்துவதால் அரசின் பங்கு மிகக் குறைவாக இருக்கும் அடிப்படை பணிகளான பாதுகாப்பு பொது நலம், கல்வி போன்றவை அரசாங்கம் வழங்குகிறது

  • வருமான ஏற்றத் தாழ்வு  (inequalities of income): 

முதலாளித்துவ சமுதாயம் இரண்டு வகுப்பாக பிரிக்கப்படுகிறது சொத்துக்களை வைத்திருப்பவர்கள் (Haves) மற்றும் சொத்துக்கள் இல்லாதவர்கள் (Have-nots) என பிரிக்கப்பட்டு உள்ளனர் இதன் விளைவாக பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் இருக்கின்றனர் இதனால் பொருளாதார சமனற்ற நிலை அதிகரிக்கிறது.

முதலாளித்துவத்தின் நன்மைகள் (merits of capitalism): 

    • தானாக இயங்குதல்: முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்
  • வளங்களை திறமையாக பயன்படுத்துதல்: இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது.
  • கடின உழைப்பிற்கு வெகுமதி: கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும் அதிக திறன் நாள் தொழில் முனைவோர்கள் அதிக லாபம் பெறுவதும் காணப்படும்.
  • பொருளாதார முன்னேற்றம்: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அளவு மிக அதிகமாகும்.
  • நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
  • மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பும் முதலீடும் அதிகரிக்கும் மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழிவகுக்கும்.
  • புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்: லாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால் உற்பத்தியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து தரமான பொருட்களை உற்பத்தி செய்வர்.

முதலாளித்துவத்தின் குறைகள் (demerits of capitalism): 

  • வருமானம் மற்றும் செல்வச்செறிவு: முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிகிறது. இதனால் வருமான ஏற்றத் தாழ்வு அதிகரிக்கிறது.
  • வளங்கள் வீணாக்கப்படுதல்: போட்டி விளம்பரங்களினாளும் பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் அதிக அளவில் வீணாக்க படுகின்றன.
  • வகுப்பு போராட்டம்: முதலாளித்துவமானது சமுதாயத்தை முதலாளிகளாகவும் வேலைக்காரர்களாகவும் பிரிப்பதால் வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
  • வாணிப சுழல்: தடையில்லா சந்தை முறை (free market system) அதிக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கொண்டு செல்கிறது.
  • அத்தியாவசியமில்லா பொருட்களின் உற்பத்தி: இலாபத்தை பெறுவதற்காக வாய்ப்பு இருக்குமாயின் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்யப்படும்.

சமத்துவ பொருளாதார அமைப்பு (socialism): 

  • காரல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவர் சமத்துவம் என்பது மொத்த திட்டமிடுதல் பொதுவுடமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடு ஆகிய முறைகளை குறிப்பிடுவதாகும் அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்கு படுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும். 
  • ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பை திட்டமிட்ட (planned economy)   அல்லது கட்டளை பொருளாதாரம் (command economy) என்று அறியப்படுகிறது.

சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்:

  • உற்பத்தி மூலங்களின் பொது உரிமம் (public ownership) 

அனைத்து வளங்களுக்கும் அரசே உரிமம் கொண்டிருக்கும் இதன் பொருள் என்னவெனில் அனைத்து உற்பத்தி காரணிகளும் பொது அதிகாரத்தால்   (அரசால்) தேசிய மயமாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்

    • மைய திட்டமிடல் (Central planning): ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பில் திட்டமிடுதல் என்பது ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும் இந்த அமைப்பு முறையில் மைய திட்ட அதிகாரமே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும்.
  • அதிகபட்ச சமூக நலன்  (social benefit): 

சமூக நலன் அனைத்து பொருளாதார நடவடிக்கையின் வழி காட்டுக் கொள்கையாகும் பெரும்பாலான பயன்கள் சமூகத்திற்கு சம அளவில் பகிரும் படியாக முதலீடுகள் திட்டமிடுகின்றன

  • போட்டி இல்லாமை:

சமத்துவ பொருளாதார அமைப்பு முறையில் போட்டி இல்லாத அங்காடி காணப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியையும் பகிர்வையும் அரசே முற்றிலும் கட்டுப்படுத்துகிறது நுகர்வோருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட விருப்ப அளவு உண்டு.

  • விலை இயங்கும் முறை இல்லாமை (price mechanism): 

மைய திட்ட அதிகாரத்தின் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதலின் அடிப்படையில் விலை நிர்ணய முறை காணப்படும்

  • வருவாயில் சமத்துவம் (equality of income): 

சமத்துவ பொருளாதார அமைப்பின் மற்றொரு அத்தியாவசிய தன்மையானது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது மற்றும் குறைப்பது ஆகும் சமத்துவ பொருளாதாரத்தில் தனியார் சொத்துரிமை மற்றும் வாரிசு சொத்துரிமை நடைமுறையில் இல்லை.

  • வாய்ப்புகளில் சமத்துவம் (equality of opportunity): 

இலவச மருத்துவம், கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை சமத்துவ பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்

  • வகுப்பு பேதமில்லா சமூகம்  (classless society): 

சமத்துவ பொருளாதாரத்தின் வகுப்பு பேதமில்லா சமூகம் மற்றும் வகுப்பு சண்டைகள் இல்லை என்பதாகும் ஒரு உண்மையான சமத்துவ சமூகத்தின் பொருளாதார நிலையில் அனைவரும் சமம்

சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள்:

  • ஏற்றத்தாழ்வுகளில் குறைவு:

எந்த நபராலும் தனியார் சொத்துக்களை உரிமம் கொண்டு மற்றும் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களை சுரண்ட அனுமதி இல்லை

 

  • வளங்கள் அறிவார்ந்த முறையில் ஒதுக்கீடு: 

மைய திட்ட அதிகாரத்தால் திட்டமிட்டபடி வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது வளங்கள் விரயமாவது குறைக்கப்படுவதுடன் முன் திட்ட அடிப்படையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

  • வகுப்பு சண்டைகள் இல்லாமை:

ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருப்பதால் பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான சண்டை இருப்பதில்லை, சமூகம் சுமூகமான சூழலில் செயல்படும்

  • வாணிகச் சூழலுக்கு முடிவு:

பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பகிர்வை அதிகாரமே முழு கட்டுக்குள் வைத்துக்கொள்ளும், எனவே பொருளாதார ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கலாம்

  • சமூக நலன் முன்னேற்றம்:

சுரண்டல் இல்லாமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படுகிறது ஏற்றத்தாழ்வு மிக்க வாணிக சூழல் தவிர்த்தல் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்தல் ஆகியவை சமூக நலன் வளர உதவுகிறது.

சமத்துவ பொருளாதார அமைப்பின் தீமைகள்:

  • சிகப்பு நாடா (red tapism)  மற்றும் அதிகார வர்க்கம் (bureaucracy): 

அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளை எடுப்பதாலும் அநேக அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாவதாலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

  • ஊக்கமில்லாமை (absence of incentive): 

சமத்துவத்தின் மிகப்பெரிய குறை என்பது இந்த முறையில் திறமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை எனவே உற்பத்தி திறனும் பாதிக்கப்படும்

  • தெரிவு செய்வதில் சுதந்த குறைவு  (limited freedom and choice): 

பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது

  • அதிகாரம் குவிதல் (concentration of power): 

அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை எனவே அரசே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பாகவும் அமைகிறது.

கலப்பு பொருளாதாரம் (கலப்புத்துவம்):

  • கலப்பு பொருளாதார அமைப்பு முறையில் தனியார் மற்றும் பொதுத் துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றும் இம்முறை முதலாளித்துவம் சமத்துவம் ஆகியவற்றின் கலவையாகும்.
  • முதலாளித்துவம் மற்றும் சமத்துவ பொருளாதார அமைப்பு முறைகளின் தீமைகளை களைய இம்முறை உதவும் இப்பொருளாதார முறைகளில் தனியார்களும் அரசும் வளங்களை கொண்டிருப்பர். இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்பு பொருளாதார நாடுகளின் உதாரணங்களாகும்.

கலப்புப் பொருளாதார அமைப்பின் தன்மைகள்:

  • சொத்து உற்பத்தி சாதனங்களின் உரிமம்  (ownership of property and means of production): 

உற்பத்தி சாதனங்களும், சொத்துக்களும், தனியார் மற்றும் பொதுத் துறைக்கு சொந்தமாக இருக்கும் பொதுத் துறையும், தனியார் துறையும் வளங்களை கொள்முதல் செய்யவும் பயன்படுத்தவும் மற்றும் மாற்றவும் உரிமை கொண்டிருக்கும்.

  • பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்திருக்கும் (coexistence of public and private sectors): 

கலப்பு பொருளாதாரங்களில் தனியார் பொதுத்துறைகள் இரண்டும் இணைந்திருக்கும் தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்காகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமூக நலனை உச்ச படுத்துவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்.

  • பொருளாதார திட்டமிடல் (economic planning): 

மைய திட்டமிடல் அதிகார பொருளாதாரத் திட்டங்களை தயாரிக்கும் அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறையும் பொது துறையும் மதித்து பின்பற்றும் பொதுவாக திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் முன்னுரிமைகள் இலக்குகள் அடிப்படையில் தான் எல்லா துறைகளும் இயங்கும்.

 

  • பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு (solution to economic problem): 

எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? மற்றும் எப்படி பகிர்ந்து அளிப்பது? போன்ற அடிப்படை பிரச்சனைகளை விலை இயக்க முறை (price mechanism) மற்றும் அரசின் தலையீட்டின் (government intervention) மூலம் தீர்க்கப்படும்

  • சுதந்திரமும் கட்டுப்பாடும் (freedom and control): 

வளங்களை உரிமை கொண்டாடவும் பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும் கூட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.

கலப்பு பொருளாதாரத்தின் நன்மைகள்:

  • அதிவேக பொருளாதார வளர்ச்சி  (rapid economic growth):

கலப்பு பொருளாதாரத்தின் சிறந்த நன்மை அதிக வேக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும் இவ்விதம் பொது தேவைகளும் தனியாரின் தேவைகளும் சந்திக்கப்படுகின்றன

  • சமமான பொருளாதார வளர்ச்சி  (balanced economic growth): 

பொருளாதாரத்தின் சமநிலை வளர்ச்சியை கலப்புத்துவம் ஊக்குவிக்கிறது இது வேளாண்மை மற்றும் தொழில் நுகர்வு பண்டங்கள் மற்றும் மூலதன பண்டங்கள் கிராமம் மற்றும் நகரம் ஆகியவற்றின் இடையே சமமான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

  • வளங்களை சரியாக பயன்படுத்துதல் (proper utilisation of resources): 

ஒரு கலப்பு பொருளாதாரத்தில் வளங்களின் சரியான பயன்பாட்டை அரசு உறுதிப்படுத்தலாம் அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நேரடியாக கட்டுப்படுத்தும் மேலும் தனியார் துறையை மறைமுகமாக கட்டுப்படுத்தும்.

  • பொருளாதார சமத்துவம் (economic equality):  

அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர்வீத வழிமுறையை பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது

  • சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள்  (special advantages to the society): 

குறைந்தபட்ச கூலிகள் மற்றும் பகிர்வு முறை சட்டங்கள் நியாய விலை கடைகளை ஏற்படுத்துதல் மற்றும் சமூகநல நடவடிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் தொழிலாளர்கள் நலிவடைந்த பிரிவினரின் ஆர்வங்களை அரசு பாதுகாக்கும்.

கலப்பு பொருளாதார அமைப்பின் தீமைகள் (Demerits of mixedism):

  • ஒருங்கிணைப்பு இல்லாமை  (lack of coordination): 

கலப்புத்துவத்தின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாகும் இவ்விரண்டு துறைகளும் வேறுபட்ட நோக்கங்களுடன் செயல்படுவதால் ஒருங்கிணைப்பு தொடர்பான பிரச்சினைகள் உருவாகின்றன.

  • போட்டி மனப்பான்மை  (competitive attitude): 

அரசு மற்றும் தனியார் துறைகள் சமூகத்தின் நலனுக்காக இணைந்து செயலாற்றும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு ஆனால் நடைமுறையில் இவ்விரண்டும் துறைகளும் அவற்றின் நடவடிக்கைகளில் போட்டி தன்மையுடனேயே நடந்து கொள்கின்றன.

  • திறமையின்மை  (inefficiency): 

மந்தமான அதிகார முறை சிவப்பு நாடா முறை ஊக்கமின்மை ஆகியவற்றால் பொதுத்துறை நடவடிக்கைகளில் பெரும்பாலானவை திறனற்றவைகளாகவே இருக்கின்றன

  • தேசியமாக்கல் பற்றிய பயம்  (fear of nationalisation): 

கலப்புப் பொருளாதார அமைப்பில் தேசிய மயமாக்குதல் பற்றிய பயம் தனியார் துறைகளில் காணப்படுவதால் தனியார் தொழில் முனைவோர்கள் அவர்களின் வாணிப நடவடிக்கைகளையும் புத்தாக்க முயற்சிகளையும் சுருக்கி விடுகின்றன.

  • விரிவடையும் சமத்துவமின்மை  (widening inequality): 
  • வளங்களின் உரிமை பரம்பரை சட்டங்கள் மக்களின் லாப நோக்கம் ஆகியவை பணக்காரர் ஏழைகளிடையே இடைவெளியை விரிவடையச் செய்கின்றன.
  • இறுதியாக முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையும் சம தர்மத்தின் திறமையும் கலப்பு பொருளாதாரத்தில் காணப்படுகின்றன.

**************************************************************************

TNPSC Economy Free Notes - Methods of Economic Organization Part-3_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here