Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - சரக்கு...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – சரக்கு மற்றும் சேவை வரியின் வரலாறு

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

சரக்கு மற்றும் சேவை வரி

  • சரக்கு மற்றும் சேவை வரி என்பது சரக்கு மற்றும் சேவைகள் நகரும் போது விதிக்கப்படும் வரி ஆகும். 
  • இது ஒரு சேருமிடம் சார்ந்து நுகர்வு வரி மற்றும் அளிப்பு சங்கிலியின் ஒவ்வொரு படி நிலையிலும் காட்டப்பட்ட மதிப்பின் மீது வசூலிக்கப்படுகிறது. 
  • சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017, ஏப்ரல் 12ல் இயற்றப்பட்டது. 
  • 2017 ஜீலை 1ல் நடைமுறைக்கு வந்தது. 
  • இதுவே சுதந்திரத்திற்குப் பின்பு நடந்த ஒரு மிகப்பெரிய ஒற்றை வரி சீரமைப்பு ஆகும்.
  • ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா போன்ற பல்வேறு நாடுகள் ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்துள்ளன.
  • இந்திய அரசியலமைப்பிலிருந்து வரி விதிக்கும் உரிமை பெறப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவைகளின் மீது வரிகளைச் சுமத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க அரசியலமைப்பில் தனி சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது. 
  • அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 101ன் படி 2016 ஆம் ஆண்டு இச்சட்டம் இயற்றப்பட்டு, 2016, செப்டம்பர் 3ல் குடியரசு தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டது. 
  • இச்சட்டத்தின் படி சரக்கு மற்றும் சேவை வரி குழுமம் என்ற அரசியலமைப்பு குழுமம் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த தோற்றுவிக்கப்பட்டது.
  • இந்தியாவில் உற்பத்தியாளர் எங்கு உற்பத்தி செய்தாலும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தத் தேவையில்லை. 
  • சரக்கு மற்றும் சேவை வரி, எரி சாராயம் மற்றும் குறிப்பிட்ட எரி பொருட்கள் தவிர மற்ற எல்லாப் பொருட்களுக்கும் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். 
  • சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நான்கு விதமான வரி வீதங்களை முன் மொழிந்துள்ளது. அதாவது 5%, 120%, 18% மற்றும் 28%.
  • ஒரு மாநில எல்லைக்குள்  இருபது இலட்சத்திற்கும் குறைவாக விற்பனை செய்கின்ற வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து வரி விலக்கு பெறுகின்றனர். 
  • இச்சிறு வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்யத் தேவையில்லை. 
  • ஆனால், மாநிலங்களுக்கு இடையே வியாபாரம் செய்யும்  வணிகர்கள், அவர்களின் விற்பனை இருபது இலட்சத்திற்கு கீழ் இருந்தாலும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்து வரி செலுத்த வேண்டும்.
  • வடகிழக்கு மாநிலங்கள் (8), இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கங்கள்:

  • இந்தியாவின் சமமான வரி வீதத்தினை தோற்றுவிப்பதே சரக்கு மற்றும் சேவை வரியின் முதன்மை நோக்கமாகும். (ஓர் நாடு, ஓர் வரி, ஓர் சந்தை).
  • வரியின் விழுத்தொடராக விளைவினைத் தவிர்க்க, சரக்கு மற்றும் சேவை வரி முன் செலுத்திய வரியினை சரிகட்டிக் கொள்ள அனுமதிக்கிறது. (உள்ளீடு வரியின் மூலம்)
  • ஏற்றுமதியினை ஊக்குவிக்க, வசூலிக்கப்பட்ட உள்ளீட்டு வரி திருப்பி வழங்கப்படுகிறது. எனவே ஏற்றுமதியின் மீது வரி இல்லை.
  • வரி அடிப்படையை அதிகரித்தே வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் வரி வருவாய் அதிகரிக்கப்படுகிறது.
  • வரி அறிக்கை வழிமுறைகளை எளிமை யாக்க பொதுவான படிவங்கள் வழங்கப் பட்டுள்ளன. வணிகவரி அலுவலகங்களுக்கு செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
  • இணையதள வரி செலுத்தல்கள் மற்றும் படிவங்களைச் சமர்ப்பிக்க சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வலையமைப்பு (GSTIN) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியின் பயன்கள்:

சமூகம் மற்றும் நாட்டிற்கு:

  • சரக்கு மற்றும் சேவை வரி சீரான தேசிய சந்தை அந்நிய முதலீட்டினை ஈர்க்கின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரத்தினை ஒன்றிணைக்கிறது. 
  • இறக்குமதி சரக்குகள் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்த சரக்குகள் இடையேயான வரிவிதிப்பில் சமநிலையைக் கொண்டு வருகிறது.
  • உற்பத்தி, ஏற்றுமதியினை ஊக்குவிக்கிறது.
  • அதிக வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழிக்கிறது.
  • வரி இணக்கத்தினை அதிகரிக்கிறது அரசாங்கத்திற்கு வருவாயையும் அதிகரிக்கிறது.
  • இது வெளிப்படையானது மற்றும் உலகளவில் வியாபார எளிமையில் இந்தியாவின் தரத்தை மேம்படுத்துகிறது.
  • சீரான வரி வீதங்கள் வரி ஏய்ப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரி வீத வேற்றுமையைக் குறைக்கிறது.

வியாபார சமூகத்திற்கு:

  • பதினேழு வரிகள் நீக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரே விதமான வரி அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது சில வரி விலக்குகளைக் கொண்ட எளிமையான வரி முறை ஆகும்.
  • உள்ளீட்டு வரி, வரியின் விழுதொடராக்க விளைவினை குறைக்கிறது. சராசரி வரிச்சுமை குறைவதன் மூலம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது. அதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்திற்கு உதவுகிறது.
  • பொதுவான வழிமுறைகள், சரக்கு மற்றும் சேவைகளின் பொதுவான வகைப்பாடு, வரி விதிப்பு முறைக்கு நிலைத் தன்மையை வழங்குகிறது.
  • சரக்கு மற்றும் வலையமைப்பு சேவை (GSTN) வரி விதிப்பு பல்வேறு பதிவேடுகள் பராமரிப்பைக் குறைக்கிறது. மனித சக்தி மற்றும் வளங்களில் முதலீடு குறைவதன் மூலம் திறன் மேம்பாடு அடைகிறது.
  • அனைத்து நடவடிக்கைகளும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வலையமைப்பு (GSTN) மூலம் நடைபெறுவதால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி செய்கிறது.
  • நாடு முழுவதும் ஒரே சீரான விலையைத் தருகிறது அனைத்து மாநிலங்களிலும் வியாபாரத்தை எளிதாக்குகிறது, விரிவாக்கத்தினை எளிதாக்குகிறது.

நுகர்வோருக்கு:

  • உள்ளீட்டு வரி நுகர்வோருக்கான விலையைக் குறைக்கிறது.
  • அனைத்து சிறு சில்லறை வணிகர்கள் வரிவிலக்கு பெறுகின்றனர். அதன் மூலம் நுகர்வோர்களின் செலவு குறைகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியின் குறைகள்:

  • பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சரக்கு மற்றும் சேவை வரிகள் இந்தியாவில் நிலைச் சொத்து சந்தையில் எதிர்மறை தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனச் சொல்கின்றனர்.
  • மற்றொரு திறனாய்வு மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகள், மாநில சரக்கு மற்றும் சேவை வரிகள் என்பது மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டுவரி (VAT) மற்றும் மத்திய விற்பனை வரிகளின் மற்றொரு பெயர் எனக் கூறுகிறது.
  • சில்லறைப் பொருள்கள் மீது தற்பொழுது 4% வரி மட்டும் சுமத்தப்படுகிறது. இதனால் இவ்வரிக்குப் பின்பு ஜவுளிப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
  • வான் பயணத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வான் பயணக் கட்டணங்கள் மீதான சேவை வரி 6 முதல் 9% சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்பொழுது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் காரணத்தால் இக்கட்டணம் இரண்டு மடங்காக உள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரிகள் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இடம் பெயர்தல் இடர்ப்பாடுகளைக் கொண்டுள்ளது.

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here