Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - நிதிப்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – நிதிப் பொருளியல்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

நிதிப் பொருளியல்

அறிமுகம்: 

  • நிதிப் பொருளியல் என்ற பதம் புதிய ஒன்றாகும் இதன் பழைய மற்றும் பிரசித்தி பெற்ற பாடம் பொது நிதி என்பதாகும்.
  • பிசிகல் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான கூடை என்ற பொருள்படும் இது பொதுவான என்பதை குறிக்கிறது. 
  • பொதுநிதி என்பது ஓர் அரசு தனது நிதி வளங்களை உருவாக்குவது மற்றும் செலவழிப்பது பற்றி கூறுகிறது.

பொதுநிதி – பொருள்:

  • பொது நிதி என்பது அரசு நிதி பற்றிய செயல்பாடுகளோடு தொடர்புடையது, அரசு கருவூலத்தின் நிதி செயல்பாடுகள் பற்றி விவாதிக்கிறது.
  • பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி கூறுகிறது. 
  • இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும் அவை ஒன்றோடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது.

வரைவிலக்கணங்கள்:

  • பொதுநிதி என்பது அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக்கோடாக திகழ்கிறது இது பொது அதிகார அமைப்பின் வரவு செலவுகளைப் பற்றியும் அது ஒன்றோடொன்று சரிசெய்து கொள்வதைப் பற்றியும் கருத்தில் கொள்கிறது. 
  • டால்டன் 
  • அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும் கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்.

– ஆடம்ஸ்மித்

பொது நிதியியலின் பாடப்பொருள்/எல்லை:

  • நவீன காலத்தில் பொதுநிதியியல் ஐந்து துணைப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
  • அவை பொது வருவாய் பொதுச் செலவு பொதுக்கடன் நிதி நிர்வாகம் நிதிக் கொள்கை. 
  • பொது வருவாய்:

பொது வருவாய் என்பது வருவாயைப் பெருக்கக் கூடிய முறைகளான வரி மற்றும் வரியல்லா வருமானங்கள் பற்றியும், வரிக்கொள்கை, வரிவிகிதம், பளு, வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றையும் விளக்குகிறது 

  • பொதுச் செலவு:

இப்பகுதி அரசின் செலவு பொதுச் செலவின் விளைவுகள் மற்றும் பொதுச் செலவைக் கட்டுப்படுத்துதல் போன்றவை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளை கொண்டுள்ளது

  • பொதுக் கடன்:
  • பொதுக்கடன் என்பது உள்நாடு மற்றும் வெளிநாட்டின் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி கூறுகிறது. 
  • இதில் பொதுக்கடன்களின் சுமை அதன் விளைவுகள் மற்றும் திரும்பச் செலுத்தும் முறை பற்றி கூறுகிறது.
  • நிதி நிர்வாகம்:
  • இப்பகுதி அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி கூறுகிறது.  
  • வரவு செலவு திட்டம் என்பது ஒராண்டிற்கான அரசின் பேரளவு நிதி திட்டமாகும். 
  • வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான வழிமுறைகள் நிதி ஒதுக்கீடு மதிப்பீடு மற்றும் தணிக்கை போன்றவைகள் நிதி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
  • நிதிக் கொள்கை:

வரிகள் மானியங்கள் பொதுக்கடன் மற்றும் பொதுச் செலவு ஆகியவைகள் நிதிக்கொள்கையின் கருவிகளாகும்

  • பொதுநிதி மற்றும் தனியார் நிதி:
  • பொது நிதி என்பது அரசின் வருவாய் செலவு கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. 
  • தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய் செலவு கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது.   
  • பொதுநிதி மற்றும் தனியார் நிதி அடிப்படையில் ஒன்று போல் இருந்தாலும், அவற்றின் அளவு நோக்கம் விளைவு தாக்கம் ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

ஒற்றுமைகள்:

  • பகுத்தறியும் தன்மை 
  • பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாக கொண்டவை. 
  • இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது 
  • கடனுக்கான வரையறை
  • இரண்டுக்குமான கடன்கள் வரையரக் கொண்டுள்ளது. 
  • தனது வருவாய்க்கு அப்பால் அரசும் செல்வதில்லை அரசின் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.
  • வளங்களின் பயன்பாடு
  • தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது.
  • இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகிறது 
  • நிர்வாகம்
  • நிர்வாகத் திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது.
  • செயல்திறன் இன்மை மற்றும் ஊழல் ஆகியவை நிர்வாகத்தில் காணப்பட்டால் விரயங்கள் மற்றும் நட்டங்கள் ஏற்படும்

வேற்றுமைகள்:

  • வருமானம் மற்றும் செலவு சரிகட்டல் 
  • அரசு செலவினை மதிப்பீடு செய்து அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது. 
  • தனிநபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக் கொள்வார்கள். 
  • எடுத்துக்காட்டாக தனியார் நிதி என்பது இருக்கக்கூடிய துணி அளவிற்கு மேலங்கி (coat)தைப்பது போன்றும் பொதுநிதி என்பது மேலங்கியின் தேவைக்கேற்ப துணி அளவை முடிவு செய்து போன்றதாகும். 
  • கடன்

அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடன்களை பெறலாம் மேலும் அரசனது பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனைப் பெறலாம் ஆனால் தனியார் இவ்வாறு அவர்களிடம் கடனைப் பெற முடியாது 

  • பணம் அச்சடிக்கும் உரிமை
  • அரசு வேண்டுமெனில் பணத்தை அச்சடிக்கலாம். 
  • இது பணத்தை உருவாக்குவதல் பகிர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 
  • தனியார் பணத்தை உருவாக்க இயலாது.

  • நடப்பு மற்றும் எதிர்கால முடிவுகள் 
  • அரசானது எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு நீண்டகால முடிவினை மேற்கொள்கிறது. 
  • அரசின் முதலீடானது பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுதல், மருத்துவமனை மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 
  • ஆனால் தனியார் நிதியானது குறுகிய கால திட்டங்களுக்கான நிதியைக் கொண்டவை ஆகும். 
  • நோக்கம்
  • பொதுத்துறையின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் சமூக நன்மையை வழங்குவதாகும். 
  • தனியார் துறையின் நோக்கம் சொந்த நன்மை உயர்த்துவது அதாவது இலாபத்தை உச்சப்படுத்துவதாகும் 
  • கட்டாய வருவாய் பொறுவதற்கான வழிகள்
  • தனிநபரின் வருமானத்திற்கான ஆதாரங்கள் குறைவாகும். ஆனால் அரசுக்கு அதிகமாகும். 
  • அரசு தனது அதிகாரவரம்பை பயன்படுத்தி வருவாயைப் பெறலாம்.
  • பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவருவதற்கான திறன் 
  • பொதுநிதிக்கு வருவாய் சார்ந்த பெரிய முடிவுகளை எடுப்பதற்கான திறன் உண்டு. 
  • தனது வருவாயை திறமையாக மற்றும் வெளிப்படையாக அரசால் சரிகட்ட இயலும். 
  • ஆனால், தனி நபர்கள் அவ்வாறான பெரிய முடிவுகளை எடுக்க இயலாது. 

பொது வருவாய்:

பொது வருவாய்:

  • பொது வருவாய் என்பது பொது நிதியியலில் முக்கிய இடம் வகிக்கிறது. 
  • மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
  • பொதுச் செலவுகள் உயர்ந்து வருவதால் அதனை பொது வருவாயின் மூலமே சரிசெய்ய முடியும். பொது வருவாயை அதிகரிப்பது என்பது பொதுச் செலவில் அவசியம் மற்றும் மக்களின் செலுத்தும் திறன் அடிப்படையில் அமையும். 

பொருள்:

  • பொது வருவாய் அல்லது பொது வருமானம் என்பது அனைத்து மூலங்களின் வழியாக அரசு பெரும் வருமானத்தைக் குறிக்கும். 
  • டால்டன் கூற்றுப்படி பொது வருமானம் என்பது குறுகிய மற்றும் பரந்த பொருளில் விளக்கப்படுகிறது.
  • பரந்த பொருளில் பொது வருவாய் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது அதிகாரம் அமைப்பினர் பெறும் அனைத்து வருவாய் அல்லது கடன் உட்பட உள்ள பொறுதல்களைக் குறிக்கும்.
  • குறுகிய கண்ணோட்டத்தில் பொது அதிகார அமைப்பின் வருமான வளங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது. இதனை வருவாய் வளங்கள் எனக் கூறப்படுகிறது. குழப்பத்தை தவிர்ப்பதற்காக பரந்த பொருளில் பொதுப் பொறுதல்கள் எனவும், குறுகிய கண்ணோட்டத்தில் பொது வருவாய் எனவும் அழைக்கப்படுகிறது. 
  • குறுகிய பொருளில், பொது வருவாய் என்பது அரசின் வருவாய்.
  • இது ‘வருவாய் சாதனம் என்றும் பரந்த பொருளில் அரசு கடன் வழியாக பெறுவதும் ஆகும் 

பொது வருவாயின் வகைப்பாடு: 

வரி வருவாய்:

  • வரி என்பது குடிமக்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்தக்கூடியதாகும். 
  • இது அரசால் சட்டப்படி வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படுகிறது. இதனை வரி செலுத்துபவர் மறக்காமல் செலுத்த வேண்டியதாகும்.
  • சில வரி வருவாய் மூலங்கள்:
  • வருமான வரி
  • நிறுவன வரி
  • விற்பனை வரி
  • கூடுதல் கட்டணம்
  • செஸ் (வரிக்கு வரி)

 

வரிசாரா வருவாய்:

வழியில்லாத ஆதாரங்களிலிருந்து அரசினால் பெறப்படுகிற வருவாயை வரிசாரா வருவாய் என அழைக்கப்படுகிறது வரிசாரா வருவாயின் ஆதாரங்களாவன:

  • கட்டணம்:
  • அரசிற்கான மற்றொரு முக்கியமான வருவாய் ஆதாரம் கட்டணம் ஆகும். 
  • பொது நிர்வாகத்தில் செய்யும் சேவைக்காக கட்டணம் விதிக்கப்படுகிறது.
  • கட்டணம் என்பது வரியைப் போல் கட்டாயம் செலுத்தக்கூடியது அல்ல.
  •  தண்டத்தொகை:

சட்டத்தை மீறுவோர் மீது சுமத்தப்படுவது தண்டத் தொகை ஆகும்

  • பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்: 
  • அரசானது பொதுத்துறை நிறுவன அமைப்புகளில் உள்ள உபரியை வருமானமாகப் பெறும். சில பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய அளவில் இலாபம் ஈட்டுகிறது.
  • அதன் இலாபம் மற்றும் பங்காதாயங்களை பொதுச் செலவிற்காக அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
  • மேம்பாட்டுக்கான சிறப்புத் தீர்வைகள்:

இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரசு மேற்கொண்ட பொதுத் திட்டத்திற்காக அப்பகுதியினர் மீது சிறப்பு தீர்வைகள் விதிக்கப்படுகிறது

  1. அன்பளிப்புகள், மான்யங்கள் மற்றும் உதவிகள்:
  • தற்காலத்தில் ஒரு அரசிடமிருந்து மற்றொரு அரசுக்கு வழங்கப்படுவது உதவித்தொகை ஆகும். 
  • மத்திய அரசு மாநில அரசுக்கும் மற்றும் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றின் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் உதவியாகும். 
  • வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய உதவி அயல்நாட்டு உதவி என அழைக்கப்படுகிறது. 
  • மரண தீர்வை:

ஒருவர் வாரிசு இல்லாமலோ அல்லது உயில் ஏற்படுத்தாமல் மரணமடைந்தால் அவர் மரணத்திற்குப் பிறகு விட்டுச் சென்ற உடைமைகளை அரசு எடுத்துக்கொள்ளும்

 

பொதுச் செலவு:

பொருள்:

  • மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்காள்ளும் செலவினமே பொதுச் செலவாகும்.
  • பொது அமைப்புகளான மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சமூகத்தின் பொதுவான விருப்பங்களை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளக் கூடிய செலவுகள் பொதுச் செலவாகும்.

பொதுச் செலவில் வகைப்பாடு பின் வருவனவாகும்: 

நன்மை அடிப்படையிலான பாகுபாடு:

  • கான் மற்றும் பிளின் ஆகியோர் பொதுச் செலவை நன்மை அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறார்கள். அவை:
  • அனைத்து சமூகத்திற்கும் பலன் அளிக்கிற பொதுச்செலவு உதாரணமாக பொது நிர்வாகம், இராணுவம், கல்வி, பொதுச் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்கான செலவுகள். 
  • சில மக்களுக்கான சிறப்பு நன்மை தரக்கூடிய மற்றும் முழு சமுதாயத்திற்கும் பொது நன்மை தரக்கூடிய செலவுகள். உதாரணமாக, நீதி நிர்வாகம். 
  • ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய மற்றும் சமுதாயத்திற்கு மறைமுகமாக நன்மை தரக்கூடிய செலவுகள். உதாரணமாக, சமூக பாதுகாப்பு பொது நலன், ஓய்வூதியம் மற்றும் வேலையின்மைக்காண நிவாரணம் ஆகியவற்றிற்கான செலவுகள். 
  • சில நபர்களுக்கு சிறப்பு நன்மை பயக்கும் வகையிலான செலவு. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான மானியம் வழங்குதல். 

பணி அடிப்படையிலான வகைப்பாடு:

  • ஆடம்ஸ்மித் பொதுச் செலவினை அரசின் பணிகள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.
  • பாதுகாத்தல் பணிகள்: இது நாட்டின் குடிமக்களை அந்நிய ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுச் சீரழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான செலவை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக பாதுகாப்பு, காவல்துறை, நீதிமன்றங்கள் போன்றவற்றிற்கான செலவுகள்.
  • வணிக பணிகள்: வணிகம் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக மேற்கொள்ளக் கூடிய பொதுச் செலவை உள்ளடக்கியது. உதாரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மேம்படுத்துவதற்கான செலவுகள்.
  • வளர்ச்சி பணிகள்: இது கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான பொதுச் செலவை உள்ளடக்கியுள்ளது. 

பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள்:

  • தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும்.
  • இதில் அரசானது சமூக பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது.
  • பினவருபவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.
  • மக்கள் தொகை வளர்ச்சி
  • பாதுகாப்புச் செலவு
  • அரசு மானியங்கள் 
  • கடன் சேவைகள்
  • வளர்ச்சித் திட்டங்கள்
  • நகரமயமாக்கல்
  • தொழில் மயமாக்கல் 
  • மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காண மானியங்கள் அதிகரிப்பு 

பொதுக்கடன்:

  • 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அரசின் செயல்பாடானது குறைவானதாகும்.
  • ஆனால் 20ம் நூற்றாண்டிலிருந்து அரசிற்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே அரசானது ஏற்கனவே உள்ள பாரம்பரியமான வருவாயுடன் தனிநபர் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன்கள் வாங்குகிறது.
  • வளர்ச்சி குன்றிய நாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிகமான கடன் பெறுகிறது.
  • சில நாடுகள் இத்தகைய கடன்களினால் கடன் பொறியில் சிக்கியுள்ளது.

பொதுக்கடனின் வகைகள்:

உள்நாட்டு பொதுக்கடன்

  • உள்நாட்டுக் கடன் என்பது ஒரு நாட்டிற்குள் குடிமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அரசினால் பெறப்படும் கடனாகும்.
  • உள்ளாட்டு பொதுக்கடன் என்பது செல்வத்தை மாற்றிக் கொள்வது பற்றியதாகும். 
  • உள்நாட்டு பொதுக்கடனின் முக்கிய ஆதாரங்களாவன:
  • அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தனிநபர்கள் வாங்குதல்.
  • அரசிடமிருந்து பத்திரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெறுதல். 
  • அரசு பத்திரங்களை நிதிசாரா நிறுவனங்களாகிய UTI, LIC, GIC போன்றவைகள் பெறுதல். 
  • பண அளிப்பு வாயிலாக அரசிற்கு மைய வங்கி கடன் வழங்குகிறது. அரசின் செலவுகளை சந்திப்பதற்காக மைய வங்கி பணமாகவும் வழங்குகிறது. 

வெளிநாட்டு பொதுக்கடன்

  • பன்னாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கடன் அயல்நாட்டு கடன் என அழைக்கப்படுகிறது. 
  • IMF, உலக வங்கி, IDA, ADB போன்ற அமைப்புகளிடமும், வெளிநாட்டு அரசுகளிடம் கடன் பெறுவது அயல்நாட்டுக் கடன்களுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. 

பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள்:

  • போர் மற்றும் போர்க்கால ஆயத்தம்
  • சமுதாயத் தேவைகள்
  • பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி பற்றாக்குறை
  • வேலைவாய்ப்பு
  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்
  • மந்தத்தை தடுத்தல்

பொதுக்கடனை திரும்ப செலுத்தும் முறைகள்: 

  • பொதுக்கடன் தீர்வு என்பது பொதுக் கடனை திரும்பச் செலுத்தும் வழிமுறையைக் குறிப்பதாகும்.
  • அரசு விற்பனை செய்துள்ள பத்திரங்களை பொதுமக்கள் அதன் முதிர்வு காலத்தில் பத்திரங்களை ஒப்படைத்து அதற்கான தொகையை வட்டியுடன் பெறுவர்.
  • பொதுக்கடன் பின்வரும் வழிகளில் கடன் தீர்க்கப்படுகிறது: 
  • மூழ்கும் நிதி
  • கடனுக்கென அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை ‘மூழ்கும் நீதி என்பர்.
  • அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையை செலுத்துகிறது. கடன் முதிர்ச்சியடையும் போது வட்டியோடு அசலையும் சேர்த்து வழங்கும் வகையில் இந்நிதி பெருகிவிடும்.
  • இந்த முறை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வால்போல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கடனை மாற்றுதல்
  • இம்முறையின் கீழ் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பொதுக்கடனாக மாற்றப்படுகிறது. 
  • டால்டன் கடன் மாற்றுதல் கடன் பளுவை குறைக்கிறது என்கிறார். 
  • வரவு செலவு திட்ட உபரி
  • உபரி வரவு செலவு திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது அந்த உபரியை கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளும்.
  • பொது வருவாய், பொதுச்செலவை விட அதிகரிக்கும் போது உபரி ஏற்படுகிறது.  
  • பகுதியாகச் செலுத்தல்

இந்த முறையின் கீழ் அரசு பொதுக்கடனை சம வருடாந்திர தவணைகளாக செலுத்துகிறது இது பொதுக் கடனைச் செலுத்தும் மிக சுலபமான முறையாகும்

  • கடன் மறுப்பு
  • இதில் அரசானது ஏற்கனவே செலுத்துவதாக உறுதியளித்த கடமையை மறுக்கும்.
  • இது கடனை திரும்ப செலுத்துவதாகாது அதனை அழிப்பதாகும். சாதாரண சூழ்நிலைகளில் கடனை மறுக்க இயலாது ஏனெனில் அது அரசின் நாணயத்தன்மையை பாதித்துவிடும். 
  • வட்டி வீதத்தை குறைத்தல்

நிதிச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக வட்டியை குறைத்து கடனை செலுத்துவதும் ஒரு வகையான கடன் தீர்வு முறையாகும்

  • மூலதனத் தீர்வை
  • ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அல்லது வளர்ச்சி போக்கில் உள்ள மூலதன சொத்துக்கள் பெற்றிருப்பின் அதன் மீது அரசு வரி விதித்து, அதனை போர்க்கால கடனை செலுத்துவதற்கு பயன்படுத்துவதாகும்.
  • ஆனால் இது சர்ச்சைக்குரிய கடன் தீர்வை முறையாகும்.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - நிதிப் பொருளியல்_4.1