Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Economy Free Notes - Finance...

TNPSC Economy Free Notes – Finance Commission

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

நிதி ஆயோக்:

  • திட்டமிடல் அணுகுமுறையில் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு பெறும் மாற்றத்தை கொண்டு வந்தது. 
  • திட்ட ஆணையத்திற்கு பதிலாக நிதிஆயோக் (மாறும் இந்தியவிற்கான தேசிய நிறுவனம்) எனும் புதிய ஆணையத்தினை அறிமுகப்படுத்தியது.
  • 2015, ஜனவரி 1 அன்று மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றதன் மூலம் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு நிதிஆயோக் உருவாக்கப்பட்டது.
  • நிதி ஆயோக் அரசாங்கத்தின் சிந்தனைக்குழு செயல்படுகிறது
  • ஒட்டுமொத்த திட்டமிடல் செயல்முறைகளையும் மேலும் அதிகார பரவலாக்கம் செய்யும் நோக்குடன் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.
  • இந்த முறையின் மூலம் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பான முறையில் பங்கேற்க முடியும்.
  • மாநிலங்கள் விரிவான அளவில் பங்களிக்கும் வகையில் கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • அது, தேவை அடிப்படையிலான திட்டங்களை கவனம் செலுத்துவதுடன் ஒட்டுமொத்த செயல்களிலும் மக்கள் தொகையில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கி வளர்ச்சி செயல்முறையில் ஒரு பகுதியாக பங்கேற்க செய்கிறது. 
  • அரசின் சிந்தனை பிரிவாக மட்டுமே நிதிஆயோக் செயல்படுகிறது. அது, அரசுக் கொள்கை உருவாக்கத்தில் பொருத்தமான தொழில்நுட்ப அறிவுரைகளை மட்டுமே மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.
  • தேசிய மற்றும் சர்வ தேசிய முக்கியத்துவம் கொண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அது அறிவுரை வழங்கி தமது நாட்டுக்கும் உலகில் பிற நாடுகளுக்கும் எவை சிறந்த நடை முறைகளாக இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து கூறுகிறது.

திட்ட ஆணையத்திருக்கு பதிலாக நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டதன் காரணங்கள்:

  1. ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கி அதன் பொருளாதார இலக்குகளை எட்டும் வகையில் ஆதாரங்களை திட்ட ஒதுக்கீடு செய்ததற்கு மாறாக, மாறும் இந்தியாவுக்கான தேசிய நிறுவனம் என்ற புதிய அமைப்பு ஒரு சிந்தனைக் குழுவாகச் செயல்படும்.
  2. நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் ஏழு ஒன்றிய பகுதிகளில் தலைவர்களை உள்ளடக்கியது. அதன் முழு நேர நிர்வாகிகளான துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிபுணர்கள் நிதி ஆயோக் தலைவர் பிரதமருக்கு நேரடியாக பதில் சொல்வர். இது திட்ட ஆணைய நடை முறைக்கு மாறுபாடனதாகும். திட்ட ஆணையத்தில் தேசியவளர்ச்சிக் குழுவிடம் அதன் அறிக்கை அளிக்கப்படும்.
  3. திட்டமிடல் தொடர்பான முக்கிய வேறுபாடு என்னவென்றால் நிதி ஆயோக் திட்டமிடலில் பெரும் ஆர்வம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும். மாறாக, திட்டஆணையத்தின் அணுகுமுறையோ அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவினைக் கொண்டதாக இருக்கும்.
  4. திட்ட ஆணைய பங்களிப்பு என்பது விரிந்த திட்டங்களை உருவாக்குவது என்றாலும் அதன் தகுதி ஆலோசனை வழங்குதல் என்ற அளவிலேயே இருந்தது. நிதி ஆயோக் மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களைக் கொண்டு இருக்கிறது.
  5. திட்டமிடல் கொள்கை வகிப்பதில் மாநில அரசுகளுக்கு அறிய வாய்ப்புகள் அளிப்பதில்லை. இதுவே திட்ட ஆணையத்தின் அணுகுமுறையாக இருந்தது. மாநிலங்கள் நேரடியாக இல்லாமல் தங்கள் தேசிய வளர்ச்சி குழுவின் மூலம் மட்டுமே தங்கள் கருத்துக்களை கூற முடியும். நிதி ஆயோக்கில் இது தொடராது.

 

 

**************************************************************************

TNPSC Economy Free Notes - Finance Commission_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here