Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - கூட்டமைப்பு...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – கூட்டமைப்பு நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

கூட்டமைப்பு நிதி

  • கூட்டாட்சி நிதி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் வளங்களை ஒதுக்கீடு குறித்த தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் 
  • இது மத்திய மாநில அரசுகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியினை திறமையாக செய்ய வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதிகாரங்கள் பிரிவு

  • நமது அரசியலமைப்பில் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன எனவே அதன் வரம்புகளை மீறுவதும் மற்றவர்களின் செயல்பாடுகளை ஆக்கிரமிப்பதை தவிர்த்து அவரவர் சொந்த பொறுப்புகளில் செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. 
  • அரசியலமைப்பின் எழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்கள் உள்ளன 
  • அவை 
  • மத்திய பட்டியல்
  • மாநில பட்டியல், மற்றும் 
  • இணைப்புப் பட்டியல்

மத்திய பட்டியல்: 

முக்கியத்துவம் வாய்ந்த 100 இனங்களைக் கொண்டுள்ளது 

மாநில பட்டியல்: 

மாநில பட்டியலில் பொது நலன் காவல் போன்ற 61 இனங்களைக் கொண்டுள்ளது

இணைப்புப் பட்டியல்:

இணைப்புப் பட்டியலில் 52 இனங்கள் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு பொதுவாக உள்ளது இதில் மின்சாரம் தொழிற்சங்கம் பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்கள் போன்றவை உள்ளடங்கும்.

கூட்டரசு நிதியின் கொள்கைகள்:

கூட்டரசு நிதியில் கீழ்காணும் முக்கிய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன

  • சுதந்திரம்
  • சமத்துவம்
  • ஒரே மாதிரியான தன்மை
  • போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்
  • நிதி வசதி
  • ஒருங்கிணைத்தல் மற்றும் ஒன்றுபடுதல்
  • செயல்திறன்
  • நிர்வாகச் சிக்கனம்
  • பொறுப்பேற்பு

சுதந்திரம்:

  • கூட்டரசு நிதி முறையின் கீழ் ஒவ்வொரு அரசும் தன்னனுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். 
  • அதன் பொருளாவது ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தை கடன் வாங்குவது மற்றும் செலவினை சமாளிப்பது போன்றவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.

சமத்துவம்:

சமத்துவ நீதியின் அடிப்படையில் மாநிலங்கள் நியாயமான வருவாய் பங்கினை பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்

ஒரே மாதிரியான தன்மை:

  • கூட்டரசு முறையில் ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்தலகளை செய்ய வேண்டும்.  
  • ஆனால் வரி செலுத்தும் திறன் ஒவ்வொரு பகுதிக்கும் சமமாக இல்லாததால் இந்த கொள்கையை பின்பற்றப்பட இயலாது. 

போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்:

  • போதுமான வளங்களைப் பெற்றிருத்தல் கொள்கை என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் அவற்றின் பணிகளை திறம்பட மேற் கொள்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் வளங்களைப் பெற்றிருக்க வேண்டும். 
  • போதுமான வளம் என்பது தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவையைக் கொண்டு குறிக்கப்படுகிறது. 
  • இவை அதிகரித்து வரும் தேவையையும் எதிர்பாராத செலவுகளான போர் மற்றும் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க நெகிழ்ச்சியுள்ளதாக இருக்க வேண்டும்.

நிதி வசதி:

  • கூட்டரசு நிதி முறையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கி கொள்ள முடியும். 
  • சுருக்கமாக கூறின் அரசின் பெருகிவரும் பொறுப்புகளுக்கேற்றவாறு வளங்களை வளர்த்து கொள்ள வேண்டும். 

ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுபடுதல்:

  • அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 
  • நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. 
  • அப்பொமுது தான் கூட்டரசு முறை பிழைக்கும். 
  • இவை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு உதவும். 

செயல்திறன்:

  • நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து மற்றும் திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். 
  • ஏய்ப்பு மற்றும் மோசடிக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது. 
  • ஓர் ஆண்டில் ஒரு முறைக்கு மேல் ஒருவரும் வரி விதிப்பிற்குட்படுத்தக் கூடாது. 
  • இரட்டைவரி முறை கூடாது.

நிர்வாகச் சிக்கனம்:

  • எந்த ஒரு கூட்டரசு முறைக்கும் சிக்கனம் என்பது முக்கிய பண்பாக உள்ளது. 
  • வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்கு செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும். 

பொறுப்புணர்வு:

நிதிசார் முடிவுகளுக்கு ஒவ்வொரு அரசும் பொறுப்பேற்க வேண்டும் அதாவது மத்திய அரசு பாராளுமன்றத்திற்கும் மாநில அரசு சட்டசபைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here