Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வங்கியியலின்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வங்கியியலின் பின்புலம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

மைய வங்கிகளின் தோற்ற வரலாறு

  • 1656-ல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியது தான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி. 
  • இம்மைய வங்கி 1897-ஆம் ஆண்டு பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றது. ஆனால், வங்கிக் கலையின் அடிப்படையில் 1864ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும் (Bank of England). 
  • 1920-ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதிய மாநாட்டில் (International Finance Conference) எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 முதல் 1954ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் மையவங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 
  • தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி (1921), 
  • சீன மைய வங்கி (1928), 
  • நியூசிலாந்து ரிசர்வ் வங்கி (1934), 
  • இந்திய ரிசர்வ் வங்கி (1934), 
  • சிலோன் மைய வங்கி (1950) மற்றும் 
  • இஸ்ரேல் மைய வங்கி (1954) போன்றவை அந்தந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மைய வங்கிகளில் சில. 

 

தொழில் நிதியும் இந்திய ரிசர்வ் வங்கியும்:  

  • தொழில் நிதியினை வணிக வங்கிகள் வழங்கினாலும், அதன் கடனளவும், கடனுக்கான காலஅளவும் குறைவாகவே இருந்து வந்தது. 
  • வங்கிகள் பெரும்பாலும் பொதுமக்களிடம் குறுகிய கால வைப்புக்களை பெறுவதால், அவைகள் பெரும்பாலும் குறுகியகாலக் கடன்களை அளிக்க மட்டுமே முன்வந்துகொண்டிருந்தன. 
  • முன்னதாக, தொழிற் துறையின் மொத்தக் கடனில் வணிக வங்கிகளின் கடன் மிகக் குறைந்த அளவாக இருந்தது. 
  • ஆகவே, தொழிற்துறைக்கான நீண்டகால கடன்களைப் பெறுவதற்கான ஆதாரங்கள் தேவைப்பட்டன.  

தொழில் நிதிக்கான அமைப்புகள்: 

அனைத்து இந்திய அளவில்: 

  • இந்திய தொழில் நிதிக் கழகம்
  • இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம்
  • இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி

மாநில அளவில்:

    • மாநில நிதிக்கழகங்கள்
  • மாநில தொழில் மேம்பாட்டு கழகம்

இந்திய அளவில் உள்ள நிறுவனங்கள் (All India Level Institutions): 

  1. இந்திய தொழில் நிதிக் கழகம்: 
  • தொழில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவன சங்கிலித்தொடரில் முதன்மையாக ஆரம்பிக்கப்பட்டது நிறுவனம் இந்திய தொழில் நிதிக் கழகம் ஆகும். 
  • பாராளுமன்ற சட்டப்படி, இது 1948-ஆம் ஆண்டு ஜூலை 1-ல் அமைக்கப்பட்டது. 
  • இக்கழகம் பின்வரும் வழிகளில் தொழில் நிதியினை வழங்குகிறது. 
  • இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணத்தில் நீண்ட காலக் கடன்களை வழங்குகிறது. 
  • வெளியிடப்பட்ட சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. 
  • சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்குகிறது. 
  • இறக்குமதி செய்யப்படும் மற்றும் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் தொழிற்துறை இயந்திரங்களுக்கான பணத்திற்கு உத்திரவாதம் அளிக்கின்றது. 
  • வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அந்நாட்டின் பணத்தில் வாங்கப்படும் கடன்களுக்கான உத்திரவாதத்தையும் அளிக்கிறது. 
  • பொதுத்துறை, தனியார் துறை, இணை நிறுவனங்கள், மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தொழிற்துறையில் ஈடுபடவோ அல்லது விரிவுபடுத்தவோ இந்திய தொழில் நிதிக் கழகம் (IFCI) நிதியுதவி அளிக்கின்றது.
  • இத்தகைய நிதி உதவிகள் புதிய தொழில் திட்டங்களை ஏற்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ, பரவலாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள இயந்திரங்களைப் புனரமைப்பு செய்யவோ நவீனப்படுத்தவோ அளிக்கப்படுகின்றது. 
  • மைய அரசால் தொழிற்துறையில் பின்தங்கிய மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்க நிதியினை குறைந்த வட்டி விகிதங்களில் வழங்குகின்றது. 
  • இந்திய தொழில் நிதிக் கழகம் தனக்கான நிதியை பின்வரும் வழிகளில் பெறுகிறது: 
  • கடன்பத்திரங்களை சந்தையில் வெளியிடுகிறது. 
  • இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி மற்றும் மைய அரசிடம் கடனாக பெறகிறது, மற்றும் 
  • பாதுகாப்பான வெளிநாட்டு கடனை வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்தும் பெறுகிறது. 
  1. இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (Industrial Credit, and Investment Corporation of India (ICICI): 
  • இந்திய அரசு, உலக வங்கி மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் 1955-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் நாள் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. 
  • உலக வங்கியிலிருந்து பெறப்படும் இந்திய தொழிற்கடன்களை முறைப்படுத்தி அளிப்பதும், மூலதனச் சந்தையை கட்டமைப்பதும் இக்கழகத்தின் நோக்கமாகும். 
  • ஆரம்பத்தில் இக்கழகத்தின் மூலதனம், தனியார் நிறுவனங்கள், அமைப்புக்கள் அனைத்தும் பொதுமக்களிடம் இருந்தது. ஆனால், தற்பொழுது குறிப்பாக இது தேசியமயமாக்கப்பட்ட பின், இதன் பெரும்பாலான மூலதனம் பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம், பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் இதன் துணை அமைப்புகள் ஆகியோரிடம் உள்ளது. 
  • இக்கழகத்தின் முக்கிய இயல்புகளில் ஒன்று, வெளிநாட்டு கடன் பணத்தை பெற்று தொழில் வளர்ச்சிக்கு உதவுவது ஆகும். 
  • இதன் துவக்கத்திலிருந்து வழங்கப்பட்ட கடன்களில் 50 சதவிகிதம் வெளிநாட்டுப் பணமாகவே வழங்கப்பட்டுள்ளது. இக்கழகம் வெளிநாடுகளிலிருந்தே நிதிவசதியை பெறுவதால் இது சாத்தியமாகிறது. 
  • முக்கியமாக உலக வங்கி இக்கழகத்திற்கு கடன் வழங்குவதில் தனிப்பெரும் நிறுவனமாக உள்ளது. 
  • 1973 முதல் இது தனக்கான நிதியை பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்தே பெறுகிறது. 
  • பெரும்பாலான இந்திய ரூபாய்களில் திரட்டப்படும் நிதி, கடன் பத்திரங்கள் மூலம் மூலதனச்சந்தையிலிருந்தே திரட்டப்படுகிறது. மேலும், இக்கழகம் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்தும், மைய வங்கியிடமிருந்தும் கடன் பெறுகிறது. அதேசமயம் இதன் பெரும்பாலான நிதி தனியார் துறைக்கே செல்கிறது. 

ICICI வங்கியின் பணிகள்: 

  • தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல் 
  • அந்நியச் செலாவணி கடன்கள் வழங்குதல் 
  • வர்த்தக வங்கிப் பணிகள் 
  • கடன் பெற சான்று வழங்கல் 
  • திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்தல் 
  • வீட்டு வசதிக் கடன்கள் வழங்குதல் 
  • குத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் 

இந்திய தொழில் மேம்பாட்டு (Industrial Development Bank of India (IDBI) : 

  • வங்கிகள் உள்ளிட்ட தொழிற்கடன்கள் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒருக்கிணைக்கும் ஒரு தலைமை நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தின் அடிப்படையில் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி துவங்கப்பட்டது. 
  • இந்த வங்கி பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது. 
  • பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது. 

 

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகள்:

  • இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 
  • மற்ற தொழில் நிதிநிறுவனங்களுக்கு நிதியளிப்பது 
  • தொழிற் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியானது, மைய அரசின் தொழில் நிதிக் கழகம், மாநில தொழில் நிதிக் கழகங்கள் மற்றும் அரசால் குறிப்பிடப்படும் நிதிநிறுவனங்கள், பட்டியல் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு மறு நிதியினை அளிக்கிறது. தொழிற் நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் கடன்களை வழங்குகிறது. 
  • இவ்வங்கியின் சிறப்புச் செயல்பாடாக வளர்ச்சி உதவி நிதி (Development Assistant Fund) என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கியுள்ளது. 
  • இந்நிதி அதிக முதலீட்டையும் குறைந்த எதிர்பார்க்கப்படும் வருவாயையும் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். 
  • அவ்வகையான தொழில் நிறுவனங்கள் இயல்பான வழியில் போதுமான நிதியை திரட்ட இயலாது. மார்ச் 1982ல் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM Bank) துவங்கப்படும் வரை ஏற்றுமதிக்கான நிதி உதவியையும் இவ்வங்கி வழங்கி வந்தது குறிப்பிடத் தகுந்ததாகும். 

 

**************************************************************************

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வங்கியியலின் பின்புலம்_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here