TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகள் – தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு
TNPSC CESE NOTIFICATION 2021
தமிழ்நாடு தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளுக்கு (Combined Engineering Subordinate Services) நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு, கடந்த 06.06.2021 அன்று நடத்தப்படவிருந்தது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளுக்கான தேர்வு, மறு அறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாகவும், புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் அறிவித்திருந்தது. தேர்வு குறித்த அரசின் அறிவிப்புகளை அறிந்து கொள்ள tnpsc.gov.in என்ற ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
TNPSC CESE EXAM DATES RESCHEDULED DETAILED VIEW

இந்நிலையில், தற்போது தமிழக அரசின் தளர்வுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு, மேற்கூறிய பதவிக்கான தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்வானது வருகின்ற 2021, செப்டம்பர் மாதம், 18 ஆம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[sso_enhancement_lead_form_manual title=” வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 1st Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/09113631/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-1st-week-2021.pdf”]
CONCLUSION
இந்நிலையில், பிற தேர்வுகளுக்கான அறிவிப்பும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் இதை கருத்தில் கொண்டு, தங்களை தேர்வுக்காக தயார் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான தேர்வாணையத்தின் அறிவிப்பை பார்க்க, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/39_2021_PRESS%20RELEASE.pdf
மேலும் விவரங்களுக்கு, தேர்வாணையத்தின் இணையதளத்தை tnpsc.gov.in பார்க்கவும்.
இது குறித்தான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Adda247App உடன் இணைந்திருங்கள்.
***************************************************************
Use Coupon code- IND75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group