Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – Advent of the Europeans

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Advent of the Europeans MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

(a) வாஸ்கோடகாமா

(b) பார்த்தலோமியோ டயஸ்

(c) அல்போன்சோடிஅல்புகர்க்

(d) அல்மெய்டா

S1.Ans.(c)

Sol.

அல்போன்சோ-டி-அல்புகர்க் (1509 – 1515)

  • இந்தியாவில் அதிகாரத்தை உண்மையில் போர்ச்சுக்கீசிய நிறுவியவர் அல்போன்சோ-டி-அல்புகர்க் ஆவார்.
  • அவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து நவம்பர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார்.

Q2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

(a) நெதர்லாந்து (டச்சு

(b) போர்ச்சுகல்

(c) பிரான்ஸ் 

(d) பிரிட்டன்

S2.Ans.(b)

Sol.

போர்ச்சுக்கல்

  • ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. 

Q3. 1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

(a) பிரான்ஸ் 

(b) துருக்கி

(c) நெதர்லாந்து (டச்சு

(d) பிரிட்டன்

S3.Ans.(b)

Sol.

  • கி.பி.(பொ.ஆ) 1453இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான பகுதி நிலவழி மூடப்பட்டது.

Q4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ்——————- நாட்டைச் சேர்ந்தவர்

(a) போர்ச்சுக்கல் 

(b) ஸ்பெயின்

(c) இங்கிலாந்து 

(d) பிரான்ஸ்

S4.Ans.(c)

Sol. இங்கிலாந்து

 

Q5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

(a) வில்லியம் கோட்டை

(b) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

(c) ஆக்ரா கோட்டை

(d) டேவிட் கோட்டை

S5.Ans.(b)

Sol.

  • அங்கு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ‘புனித ஜார்ஜ் கோட்டை’ என அழைக்கப்படும் தனது புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.
  • இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும், கிழக்குப் பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் விளங்கியது.

 

Q6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு

வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

(a) ஆங்கிலேயர்கள்

(b) பிரெஞ்சுக்காரர்கள்

(c) டேனியர்கள்

(d) போர்ச்சுக்கீசியர்கள்

S6.Ans.(b)

Sol.

  • வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரேப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.
  • இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன் என்பவர் சூரத் நகரில் நிறுவினார்.

 

Q7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி——————- வர்த்தக மையமாக இருந்தது

(a) போர்ச்சுக்கீசியர்கள்

(b) ஆங்கிலேயர்கள்

(c) பிரெஞ்சுக்காரர்கள்

(d) டேனியர்கள்

S7.Ans.(d)

Sol.

  • 1616 டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் மார்ச் 17இல் ஒரு பட்டயத்தை வெளியிட்டு டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினார்.
  • அவர்கள் 1620இல் தரங்கம்பாடி (தமிழ்நாடு), 1676இல் செராம்பூர் (வங்காளம்) ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர். 
  • செராம்பூர், டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது. 

II கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) ——————- ல் அமைந்துள்ளது. (புதுடெல்லியில்)
  2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ்——————- என்பவரால் ஆதரிக்கப்பட்டார். (மன்னர் இரண்டாம் ஜான்)
  3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் ——————-அரசால் கோவாவில் நிறுவப்பட்டது. (போர்ச்சுக்கீசியர்கள்)
  4. முகலாயப் பேரரசர்——————- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார். (ஜஹாங்கீர்)
  5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்——————- என்பவரால் நிறுவப்பட்டது. (கால்பர்ட்)
  6. ——————- என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார். (நான்காம் கிரிஸ்டியன்)

III 

Q8.பொருத்துக:

  1. டச்சுக்காரர்கள்1.1664
  2. ஆங்கிலேயர்கள்2. 1602
  3. டேனியர்கள்3.1600
  4. பிரெஞ்சுக்காரர்கள்4.1616

(a) 4 2 1 3

(b) 4 3 2 1

(c) 2 3 4 1

(d) 1 3 4 2

S8.Ans.(c)

Sol. 2 3 4 1

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

  1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும். சரி
  2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும். சரி
  3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தவறு
  4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது. சரி

V 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (tick) செய்க

Q9.

  1. கவர்னர் நினோடிகுன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
  2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
  3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
  4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

(a) 1 மற்றும் 2 சரி 

(b) 2 மற்றும் 4 சரி

(c) 3 மட்டும் சரி 

(d) 1, 2 மற்றும் 4 சரி

S9.Ans.(d)

Sol.

  • கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
  • மகிழ்ச்சியடைந்த பேரரசர் ஜஹாங்கீர்,1613இல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.
  • இது ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது.

Q10. தவறான இணையைக் கண்டறிக

(a) பிரான்சிஸ் டேடென்மார்க்

(b) பெட்ரோ காப்ரல்போர்ச்சுகல்

(c) கேப்டன் ஹாக்கின்ஸ்இங்கிலாந்து

(d) கால்பர்ட்பிரான்ஸ்

S10.Ans.(a)

Sol.

  • 1639இல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார். 

 

 

 

**************************************************************************

TNPSC Book Back Questions Revision Tamil Medium - Advent of the Europeans_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Book Back Questions Revision Tamil Medium - Advent of the Europeans_4.1