Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Tamil Medium...

TNPSC Book Back Questions Tamil Medium – Ancient Civilisations

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Ancient Civilisations MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

 

பண்டைய நாகரிகங்கள்

  1. சரியான விடையைத் தேர்வு செய்க

Q1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை———————- என்கிறோம்.

(a) அழகெழுத்து

(b) சித்திர எழுத்து

(c) கருத்து எழுத்து

(d) மண்ணடுக்காய்வு

S1.Ans.(b)

Sol.

  • சீன எழுத்துமுறை மிகப் பண்டைய காலத்திலேயே சீனர்கள் ஒரு எழுத்து முறையை உருவாக்கிவிட்டனர்.
  • ஆரம்பத்தில் அது சித்திர எழுத்து முறையாக இருந்தது.
  • பின்னர் அது குறியீட்டு முறையாக மாற்றப்பட்டது.

Q2. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை————-.

(a) சர்கோபகஸ்

(b) ஹைக்சோஸ்

(c) மம்மியாக்கம்

(d) பல கடவுளர்களை வணங்குதல்

S2.Ans.(c)

Sol.

  • எகிப்திய மம்மிகள் பதப்படுத்தப்பட்ட இறந்த உடல் மம்மி எனப்படும். 
  • இறந்தவர்களின் உடல்களை சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றின் கலவையான நாட்ரன் உப்பு என்ற ஒரு வகை உப்பை வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் எகிப்தியரிடையே இருந்தது. 
  • நாற்பது நாட்களுக்குப் பிறகு, உப்பு உடலின் ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிய பிறகு, உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள். 
  • உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள்.

Q3. சுமேரியரின் எழுத்துமுறை————-ஆகும்.

(a) பிக்டோகிராபி 

(b) ஹைரோகிளிபிக்

(c) சோனோகிராம் 

(d) க்யூனிபார்ம்

S3.Ans.(d)

Sol.

  • சுமேரிய எழுத்து முறை கியூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது. 
  • எழுத்துகள் ஆப்பு வடிவில் இருப்பதால், அதற்கு இப்பெயர் இடப்பட்டது.

Q4. ஹரப்பா மக்கள்——————-பற்றி அறிந்திருக்கவில்லை.

(a) தங்கம் மற்றும் யானை

(b) குதிரை மற்றும் இரும்பு

(c) ஆடு மற்றும் வெள்ளி

(d) எருது மற்றும் பிளாட்டினம்

S4.Ans.(b)

Sol.

  • மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகளையும் அவர்கள் வளர்த்தார்கள்.
  •  யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தார்கள். 
  • ஆனால் குதிரைகளைப்  பயன்படுத்தவில்லை. 

Q5. சிந்துவெளி மக்கள் ‘இழந்த மெ ழுகு செயல்முறை’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை——————- ஆகும்.

(a) ஜாடி

(b) மதகுரு அல்லது அரசன்

(c) பறவை

(d) நடனமாடும் பெண்

S5.Ans.(c)

Sol.

  • மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை, அவர்களுக்கு மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் ‘லாஸ்ட் வேக்ஸ்’ தொழில் நுட்பம் இழந்த மெழுகு செயல்முறை (lost – wax process) தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

Q6.

  1. i) மெசபடோமியாவின் மிகப்பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.
  2. ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.

iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

  1. iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்.

(a) (i) சரி 

(b) (i) மற்றும் (ii) சரி

(c) (iii) சரி 

(d) (iv) சரி.

S6.Ans.(d)

Sol.

  • சுமேரியர்கள் – மெசபடோமியாவின் பழமையான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும்.
  • ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்துமுறை என்ற எகிப்திய எழுத்து முறை கி.பி (பொ.ஆ.மு) மூன்றாம் ஆயிரமாண்டின் துவக்கத்தில் உருவானது.
  • இங்கு பாயும் யூப்ரடிஸ், டைக்ரிஸ் என்ற நதிகள் பாரசீக வளைகுடாவில் இணைகின்றன.இந்த இரண்டு ஆறுகளுக்கிடையில் இருப்பதால் மெசபடோமியாஎனப்படுகின்றது.மெசபடோமியாவின் வடபகுதி அஸிரியா என்று அழைக்கப்பட்டது. தென்பகுதி பாபிலோனியா ஆகும்.

Q7. 

  1. i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
  2. ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்.

iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்.

  1. iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென் சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.

(a) (i) சரி 

(b) (ii) சரி

(c) (iii) சரி 

(d) (iii) மற்றும் (iv) சரி.

S7.Ans.(c)

Sol.

  • மஞ்சள் ஆறு எனப்படும் ஹோவாங்- ஹோ ஆறும் யாங்ட்சி ஆறும் சீனாவின் இரு பெரும் ஆறுகளாகும். அடிக்கடி தன் போக்கை மாற்றிக் கொள்வதாலும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவதாலும், மஞ்சள் ஆறு சீனாவின் துயரம் எனப்படுகிறது.
  • ஷி ஹுவாங் டி பல அரசுகளின் கோட்டைகளையும் தகர்த்தார், வெளியில் இருந்து ஊடுருவும் நாடோடிகளைத் தடுக்க சீனப் பெருஞ்சுவரைக் கட்டினார். 

சீன நாகரிகத்தின் பங்களிப்பு

  • எழுத்து முறையை மேம்படுத்தியது
  • காகிதம் கண்டுபிடித்தது
  • பட்டுப் பாதையைத் திறந்தது
  • வெடிமருந்தைக் கண்டுபிடித்தது

Q8. பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

(a) சுமேரியர்கள்–அஸிரியர்கள்–அக்காடியர்கள்– பாபிலோனியர்கள்

(b) பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் –அஸிரியர்கள் – அக்காடியர்கள்

(c) சுமேரியர்கள் – அக்காடியர்கள் –பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

(d) பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் –அக்காடியர்கள் – சுமேரியர்கள்

S8.Ans.(c)

Sol.சுமேரியர்கள் – அக்காடியர்கள் –பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

 

Q9. கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின்அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின்சமகாலத்தவர் ஆவர்.

காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம்ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

(a) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

(b) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

(c) கூற்று சரி; காரணம் தவறு.

(d) கூற்றும் காரணமும் தவறானவை.

S9.Ans.(a)

Sol.

  • மெசபடோமியாவின் பழமையான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும். சுமேரியர்கள் சிந்துவெளி மற்றும் எகிப்திய நாகரிகங்களின் சமகாலத்தவர்கள்.
  • சார்கானின் கியூனிபார்ம் ஆணங்கள் (கி.மு. (பொ.ஆ.மு.) 2334 – 2279) மெலுஹா,மாகன், தில்முன் ஆகிய இடங்களிலிருந்து வந்த கப்பல்கள் அக்காடிய துறைமுகங்களில் நின்றதாகக் கூறுகின்றன. மெலுஹா சிந்துவெளி என அடையாளப் படுத்தப்படுகின்றது.
  1. கோடிட்ட இடங்களை நிரப்புக
  2. —————என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும். (ஸ்பிங்க்ஸின்)
  3. எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை————— ஆகும். (ஹைரோகிளிபிக்)
  4. —————என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் ப ண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். (ஹமுராபியின் சட்டத் தொகுப்பு)
  5. சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர்—————ஆவார். (லாவோ ட்சு (கி.மு. (பொ.ஆ.மு) 604 – 521))
  6. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள—————உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன. (சுடுமண்ணாலான சிறுசிலைகள்)

III. 

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Q10.சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் 

(a) ஹ ரப்பாவில் உள்ள பெ ருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.

(b) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.

(c) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

(d) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.

S10.Ans.(b)

Sol.

  • மொஹஞ்சதாரோவில் உள்ள மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும். இக்குளத்தின் அருகே நன்கு தளமிடப்பட்ட பல அறைகளும் உள்ளன. தோண்டியெடுக்கப்பட்ட களஞ்சியங்கள் சில கட்டுமானங்கள் போல் காணப்படுகின்றன.
  • இவற்றில் ஒன்றான கில்காமெஷ் இன்றளவும் புகழ்பெற்று விளங்குவதை கியூனிபார்ம் எழுத்து வடிவங்கள் மூலம் அறியலாம்.
  • எகிப்தியர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார்கள்

 

Q11. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

(a) அமோன் ஓர் எகிப்திய கடவுள்.

(b) அரண்களால் சூழ்ந்த ஹ ரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.

(c) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.

(d) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும்.

S11.Ans.(a)

Sol.

  • எகிப்தியர்கள் பல தெய்வக் கொள்கையைக் கடைபிடித்தனர்.
  • அமோன், ரே, சேத், தோத், ஹோரஸ், அனுபிஸ் ஆகிய பல கடவுள்கள் எகிப்தில் இருந்தன.
  • அவற்றில் சூரியக் கடவுளான ரே முதன்மையான கடவுளாக இருந்தது. பின்னர் இக்கடவுள் அமோன் என்று அழைக்கப்பட்டது.

Q12.பொருத்துக

  1. பாரோ – 1.ஒருவகைப் புல்
  2. பாப்பிரஸ் – 2.பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்
  3. பெரும் சட்ட வல்லுனர் – 3.மொகஞ்சதாரோ
  4. கில்காமெஷ் – 4.ஹமுராபி
  5. பெருங்குளம் – 5.எகிப்திய அரசர்

(a) 5 3 1 2 4

(b) 4 3 1 2 5

(c) 4 3 2 1 5

(d) 5 1 4 2 3

S12. Ans. (d)

Sol. 5 1 4 2 3

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here