Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Tamil- Evolution...

TNPSC Book Back Questions Revision Tamil- Evolution of Humans and Society – Prehistoric Period

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Evolution of Humans and Society MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

  1. சரியான விடையைத் தேர்வு செய்க

Q1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

(a) கொரில்லா 

(b) சிம்பன்ஸி

(c) உராங் உட்டான் 

(d) பெருங்குரங்கு

S1.Ans.(b)

Sol.

  • சிம்பன்சி மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது.
  • சிம்பன்சி இனத்தின் மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன்பண்புகள் மனிதஇனத்துடன் 98% ஒத்து உள்ளதாம்!

Q2. வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

(a) பழைய கற்காலம் 

(b) இடைக்கற்காலம்

(c) புதிய கற்காலம் 

(d) பெருங்கற்காலம்

S2.Ans.(c)

Sol.

புதிய கற்காலப் பண்பாடும் வேளாண்மையின் தொடக்கமும்

  • வேளாண்மை விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

Q3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ஆவர்.

(a) ஹோமோ ஹேபிலிஸ்

(b) ஹோமோ எரக்டஸ்

(c) ஹோமோ சேபியன்ஸ்

(d) நியாண்டர்தால் மனிதன்

S3. Ans. (c)

Sol.

  • உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். 
  • இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது.

Q4. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி எனப்படுகிறது.

(a) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

(b) பிறைநிலப் பகுதி

(c) ஸோலோ ஆறு

(d) நியாண்டர் பள்ளத்தாக்கு

S4. Ans. (b)

Sol.

பிறை நிலப்பகுதி

  • எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறை நிலவின் வடிவத்தில் உள்ளது. இது ‘பிறை நிலப்பகுதி’ (Fertile Crescent Region) எனப்படுகிறது.

 

Q5. சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

(a) நுண்கற்காலம்

(b) பழங்கற்காலம்

(c) இடைக் கற்காலம்

(d) புதிய கற்காலம்

S5. Ans. (b)

Sol.

  • பொ.ஆ. 1863இல் சர். இராபர்ட் புரூஸ்  ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார். 
  • இந்தியாவில் இப்படிப்பட்ட கருவிகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான். 
  • எனவே, இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித் தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. 
  • அவர் கண்டெடுத்த கருவிகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

Q6. 

  1. i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம்வரலாற்றுக்கு முந்தையதாகும்.
  2. ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.

iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.

  1. iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.

(a) (i) சரி 

(b) (i) மற்றும் (ii) சரி

(c) (i) மற்றும் (iv) சரி 

(d) (ii) மற்றும் (iii) சரி

S6. Ans. (c)

Sol.

தொல்பழங்காலப் பண்பாடுகள்

  • மனித மூதாதையரின் எலும்புகள் புதைபடிவ ஹோமோ எபிலிஸ், ஹோமோ கற்கருவிகளின் எரக்டஸ், நியாண்டர்தாலென்சிஸ் என்று பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படும் அதே சமயத்தில், பண்பாடுகள் அடிப்படையில் தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை, ஓல்டோவான் தொழில்நுட்பம், கீழ் (Lower), இடை (Middle), மேல் (Upper) பழங்கற்கால (Palaeolithic) பண்பாடுகள் என்றும் இடைக்கற்காலப்(Mesolithic) பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

Q7. i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.

  1. ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.

iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.

  1. iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம்

இடைக்கற்காலம் எனப்படுகிறது.

(a) (i) சரி 

(b) (ii) சரி

(c) (ii) மற்றும் (iii) சரி 

(d) (iv) சரி

S7. Ans. (a)

Sol.

புதிய கற்காலப் பண்பாடு – தமிழ் நாடு

  • விலங்குகளைப் பழக்கப்படுத்தி, வேளாண்மை செய்த பண்பாடு புதியகற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. 
  • புதிய கற்கால பண்பாட்டின் மக்கள் செல்ட் (Celt) என்று அழைக்கப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் பயன்படுத்தினர். 
  • கால்நடை மேய்த்தல் அவர்களது முக்கியமான தொழிலாக இருந்தது. 
  • புதியகற்கால ஊர்களுக்கான சான்று வேலூர் மாவட்டத்தின் பையம்பள்ளியிலும் தர்மபுரி பகுதியில் உள்ள சில இடங்களிலும் கிடைத்துள்ளன.

இரும்புக் காலம் – பெருங்கற்காலம்:

  • புதியகற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலம் இரும்புக் காலம் என்று அழைக்கப்படுகிறது. 

Q8. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது

(a) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

(b) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

(c) கூற்று சரி; காரணம் தவறு.

(d) கூற்றும் காரணமும் தவறானவை.

S8. Ans. (d)

Sol.

 

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக
  2. கை கோடரிகளும் வெட்டுக் கருவிகளும்—————- பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும். (கீழ்ப் பழங்கற்காலத்திம்)
  3. கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும்—————-தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றன. (கற்கருவி (Lithic))
  4. பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம்—————-எனப்படும். (இடைக்கற்காலப் பண்பாடு)

III. 

சரியான கூற்றைத் தேர்வு செய்க

Q9. சரியான கூற்றைத் தேர்வு செய்க

(a) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ’தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

(b) ‘உயிர்களின் தோற்றம் குறித்து’ என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.

(c) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.

(d) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்.

S9. Ans. (c)

Sol.

  • தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் இனம் பிழைத்து நீண்டு வாழ்வதைக் குறிக்கிறது.
  • சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், “மனிதனின் தோற்றம்” (The Descent of Man) என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.
  • மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள ஹெர்பர்ட் ஸ்பென்சரின் (பொ.ஆ.1820–1903) உயிரியல் பரிணாமக் கொள்கையும், சார்லஸ் டார்வினின் (பொ.ஆ.1809 – 1882) இயற்கைத் தேர்வு மற்றும் தகவமைப்பு (தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்) என்ற கருத்துகளும் பங்காற்றுகின்றன. சார்லஸ் டார்வின்

Q10. சரியான கூற்றைத் தேர்வு செய்க

(a) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும். 

(b) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

(c) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.

(d) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.

S10.Ans.(b)

Sol.

  • சிம்பன்சி மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது.
  • சிம்பன்சி இனத்தின் மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன்பண்புகள் மனிதஇனத்துடன் 98% ஒத்து உள்ளதாம்!
  • மனிதர்களின் மூதாதையர்கள் ஹோமினின் இவர்கள் என்றழைக்கப்படுகின்றனர், முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியவர்கள் ஆவர்.

Q11.பொருத்துக:

  1. பழங்கால மானுடவியல்- 1.தேரி
  2. கோடரிக்கருவிகள் – 2.வீனஸ்
  3. கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள்- 3.அச்சூலியன்
  4. செம்மணல் மேடுகள் – 4.நுண்கற்காலம்
  5. சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள்- 5.மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு

(a) 5 3 1 2 4

(b) 4 3 1 2 5

(c) 4 3 2 1 5

(d) 5 3 2 1 4

S11. Ans. (d)

Sol.

5 3 2 1 4

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here