Table of Contents
சுதந்திர தின விழாவில் அறிவிப்பு
நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்தியா முழுவதும் 77-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார்.சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலைமை செயலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சுதந்திர தினத்தில் 3 வது முறையாக கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் சுதந்திர தின உரை
சுதந்திர தின உரை நிகழ்த்தினார் மு.க. ஸ்டாலின். அவர் பேசியதாவது “இன்னொரு முன்னெடுப்பை இந்த விடுதலை நாளில் அறிவிக்கிறேன். தாய்நாட்டிற்காகத் தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
55000 காலிபணியிடங்கள் நிரப்பப்படும்
அரசின் பல்வேறு துறைகளில் 55,000 பணியிடங்களை நடப்பாண்டில் நிரப்பப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு துறைகளில் பணிபுரிய தயாராகி வருபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நாட்டில் பல வேற்றுமைகள் இருந்தாலும், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக கீழ் ஒற்றுமையாக வாழ்கிறோம். பரந்து விரிந்த இந்தியாவில், வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்கிறோம். அனைவரும் விரும்புவது சமத்துவ, சகோரத்துவ, சம தர்ம இந்தியா.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil