வணக்கம் தேர்வர்களே
கடந்த சில தினங்களாக நாம் TNPSC தேர்விற்கு பயன்படும் திருக்குறள் குறித்து பார்த்து வந்தோம். இது வரை 6 பகுதிகளை பார்த்துள்ளோம். இன்று அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் குறித்து பார்ப்போம்.
1. எப்படி பட்டோர் கல்வி கற்றும் பயன் இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?
(a) தீதும் நன்றும் பிரித்து அறிய தெரியாதோர்
(b) நல்ல நட்பை சரியாக பயன்படுத்த தெரியாதோர்
(c) பணத்தை அதிகப்படியாக கணக்கு வழக்கின்றி செலவு செய்தோர்
(d) இறைவனின் திருவடியை வணங்காதோர்
2. பிறவி என்னும் கடலை கடக்க என்ன செய்ய வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்?
(a) தன் வாழ்வில் நற்செயல் செய்ய வேண்டும்
(b) அற வாழ்வு வாழ வேண்டும்
(c) இறைவனை வணங்கி தொழ வேண்டும்
(d) பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்
3. பின்வரும் யாருடைய சிரம் கரங்கள் இருந்தும் பயனற்றவை?
(a) பிறருக்கு உதவத்தோர்
(b) இறைவனை வணங்காதோர்
(c) கல்வி கல்லாதவர்
(d) தீய செயல்களை புரிவோர்
4.எதனை வள்ளுவர் அமிழ்தம் என குறிப்பிடுகிறார்?
(a) மழை
(b) இனிய சொற்கள்
(c) கற்புடைய பெண்டீர் அளிக்கும் உணவு
(d) ரிஷிகள் வழங்கும் போதனைகள்
5.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
___________எல்லாம் மழை.
(a) உடுப்பதூஉம்
(b) எடுப்பதூஉம்
(c) கடுப்பதூஉம்
(d) மடுப்பதூஉம்
6. மழை பெய்யாது பொய்த்து விட்டால் எதை காண்பது அரிது என வள்ளுவர் கூறுகிறார்?
(a) மண்வளம்
(b) பசும் புல்
(c) விளைச்சல்
(d) நுண்ணுயிர்களின் பெருக்கம்
7. உலக வாழ்க்கை நடத்த எது தேவை என வள்ளுவர் கூறுகிறார்?
(a) இறைவன்
(b) நீர்
(c) விவசாயம்
(d) நல்லொழுக்கம்
8. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் _______.
(a) பசி
(b) நட்பு
(c) தாகம்
(d) பஞ்சம்
9.ஒழுக்கத்து நீத்தார் _______ விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
(a) பெருமை
(b) கடமை
(c) பொறுமை
(d) சிறுமை
10.செயற்கரிய செய்வார் _______ , ________
செயற்கரிய செய்கலா தார்.
(a) மூத்தவர், இளையவர்
(b) பெரியர் , சிறியர்
(c) நல்லோர் , தீயோர்
(d) உயர்ந்தோர், தாழ்ந்தோர்
Download the app now, Click here
Solutions
S1.
Sol. d
இறைவனின் திருவடியை வங்காதோர் (குறள் 2)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
S2.
Sol. c
இறைவனை வணங்கி தொழ வேண்டும் (குறள் 10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
S3.
Sol. b
இறைவனை வணங்காதோர் (குறள் 9)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
S4.
Sol. a
மழை (குறள் 11)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
S5.
Sol. b (குறள் 15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
S6.
Sol. b (குறள் 16)
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
S7.
Sol. b
(குறள் 20)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
S8.
Sol. a (குறள் 13)
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
S9.
Sol. a (குறள் 21)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
S10.
Sol. b (குறள் 26)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
Use Coupon code: ME77(77% OFFER) +DOUBLE VALIDITY OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group