Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
கம்பர்:
- கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
- இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
- இது ஆறு காண்டங்களை உடையது.
- கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
- “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்;
- சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்;
- திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்;
- “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்;
சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |