பல்லவர்கள் | The Pallavas |_00.1
Tamil govt jobs   »   Study Materials   »   The Pallavas

பல்லவர்கள் | The Pallavas For TNPSC | RRB NTPC

பல்லவர்கள் என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 275 முதல் கி.பி. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். பல்லவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள். பல்லவ அரசர்கள் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண்பகுதிகளையும் ஆண்டனர். சீன, ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர். The Pallavas பற்றி விரிவாக காணலாம்.

 

TNPSC GROUP 4 FREE TEST BY ADDA247 REGISTER NOW!!

 

The Pallavas: Overview (கண்ணோட்டம்):

பல்லவர்கள் | The Pallavas |_50.1
Pallava Dynasty

பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர். வளம் கொழித்த வணிக மையமான காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர். ஆனாலும் தொண்டை மண்டலமே பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது. இப் பெரிய அரசியல் பிரந்தியம் தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்டிருந்தது.

 

The Pallavas: Pallava Genealogy (Prominent Kings) பல்லவ வம்சாவளி (முக்கிய அரசர்கள்):

 • தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் கீழ் சிற்றசர்களாக இருந்தனர். இரண்டாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு (கி.பி. (பொ.ஆ.மு) 550 வாக்கில்) களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார். சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்ட பல தென்னக அரசர்களை அவர் வெற்றி கொண்டார். அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார். அவருக்குப் பின் அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இரண்டாம் நரசிம்மவர்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர். கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
 • ‘மகேந்திரவர்மன் (கி.பி.600 630) பல்லவஆட்சியின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தார். தொடக்ககாலத்தில் அவர் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவத் துறவி அப்பரால் (திருநாவுக்கரசர்) சைவத்தைத் தழுவினார். கலை மற்றும் கட்டடக்கலைக்கு அவர் பேராதரவு அளித்தார். திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். அது ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது. மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
 • மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் வாதாபியைச்தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போர்களுள் ஒன்றில் இரண்டாம் புலிகேசி மகேந்திர வர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி), கைப்பற்றியதாகத் தெரிகிறது. அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 630 668) இத்தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார். வாதாபி தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியும் கொல்லப்பட்டார்.
 • இரண்டாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 695 722) ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார். அவர் மாபெரும் வீரர் ஆவார். சீன அரசுக்கு தூதுக்குழுக்களை அனுப்பினார். சீனநாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார். ஒப்பீட்டளவில் அவரது காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியது அவரே.

 

READ MORE: Indus Valley Civilisation (Harappa)

 

The Pallavas: Pallava’s Contribution to Architecture (கட்டடக் கலைக்குப் பல்லவர்களின் பங்களிப்பு:

பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்ல புரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கலையின் கட்டடக் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது.

பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்:

 • பாறைக் குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
 • ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும்-மாமல்லன் பாணி
 • கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி

 

The Pallavas: Mahendra Style (மகேந்திரவர்மன் பாணி):

பல்லவர்கள் | The Pallavas |_60.1
magendhira varman style
 • மகேந்திரவர்மன்பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்..

 

The Pallavas: Mamalla Style (மாமல்லன் பாணி):

பல்லவர்கள் | The Pallavas |_70.1
mamalla style
 • மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில்கட்டட பாணியை உணர்த்துகின்றன. ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒற்றைக்கல் ரதங்கள் எனவே என அழைக்கப்படுகின்றன. மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை அவர் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்களாகும்.
 • மாமல்லனின் கட்டடக்கலைப் பாணியில் அமைந்துள்ளவற்றில் மிகவும் முக்கியமானது மகாபலிபுரத்திலுள்ள திறந்தவெளிக் கலையரங்கம் ஆகும். பெரும் பாறையொன்றின் சுவற்றில், பேன் பார்க்கும் குரங்கு, பெரிய வடிவிலான யானைகள், தவமிருக்கும் பூனை ஆகிய நுண்ணிய சிற்பங்கள் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் தலையிலிருந்து அருவியெனக் கொட்டும் கங்கைநதி, அர்ச்சுனன் தபசு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்.

 

The Pallavas: Rajasimha Style (ராஜசிம்மன் பாணி):

பல்லவர்கள் | The Pallavas |_80.1
Rajasimha Style
 • ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார். காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும். கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

 

The Pallavas: Nandivarma Style (நந்திவர்மன் பாணி):

பல்லவர்கள் | The Pallavas |_90.1
Nandivarma Style
 • பல்லவ கோவில் கட்டக்கலையின் இறுதிக் கட்டம் பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால்  படுத்தப்படுகின்றன. காஞ்சிபுரத்திலுள்ள பிரதிநித்துவப் வைகுண்டப்பெருமாள் கோவில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 

The Pallavas: Society and Culture (சமூகமும் பண்பாடும்):

 • பல்லவ அரசர்கள் பௌத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர். அவர்கள் இசை, ஓவியம், இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆழ்வார்களும் நாயன்மார்களும் புதிய வடிவிலான சைவம், வைணவம் ஆகியவற்றைப் போதித்தனர். அவர்களைச் சில பல்லவ அரசர்கள் ஆதரித்தனர். அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும், ஆண்டாளும் வைணவ அடியார்களாகவும் விளங்கினர். பக்தி மார்க்கத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்ட சமஸ்கிருதத்தை விடவும் இவ்வியக்கம் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது. சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தமிழ் பக்தி வழிபாடு பௌத்த, சமண சமயங்களுடன் போட்டிபோட்டது. இதன் விளைவாகப் பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியுற்றன.

 

READ MORE: Anglo-Mysore Wars

 

The Pallavas: Education and Literature (கல்வியும் இலக்கியமும்):

 • காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
 • தென்னிந்திய ஒவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
 • மாபெரும் சமஸ்கிருத அறிஞரானதண்டின் முதலாம் நரமிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
 • மற்றொரு சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார். அவர் கிராதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
 • தமிழ் இலக்கியமும் வளர்ச்சி பெற்றிருந்தது. நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும். இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.

 

The Pallavas:

பல்லவர்கள் | The Pallavas |_100.1
Pallava Art

(பல்லவர்காலக் கலை):

 

 • பல்லவ அரசர்கள் கவின்கலைகளையும் ஆதரித்தனர். குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியைச் சேர்ந்த பல சிற்பங்கள் நடனமாடும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.

 

The Pallavas: Conclusion (முடிவுரை):

தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

 

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Coupon code- WIN75-75% OFFER+DOUBLE VALIDITY ON ALL PRODUCTS

பல்லவர்கள் | The Pallavas |_110.1
TAMIL NADU MEGAPACK

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Change PasswordJoin India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?