Tamil govt jobs   »   Latest Post   »   பாரதியார்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் – பாரதியார்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் – பாரதியார்

மகாகவி, தேசியக்கவி, விடுதலைக்கவி என்றெல்லாம் போற்றப்பட்டவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவர் ஆவார். இந்த உலகை விட்டு சென்று 100 வருடங்கள் ஆன போதிலும் ஒவ்வொருவரின் மனதிலும் நீங்காத இடம் பெற்ற சுப்பிரமணிய பாரதியார் பற்றிய விவரங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாரதியார் – வாழ்க்கை குறிப்பு

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882-இல்[5] தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவரது 11 வயதில் இவரின் கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். 1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார். தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். சமற்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர்.4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார்.

பாரதியாரின் படைப்புகள்

விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார்.

  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • ஞானரதம்
  • சந்திரிகையின் கதை
  • தராசு
  • நவதந்திர கதைகள்
  • சின்ன சங்கரன் கதை
  • ஆறில் ஒரு பங்கு
  • ஸ்வர்ணகுமாரி கதை
  • சுதந்திரப்பாடல்கள் தேசியப்பாடல்கள்
  • பக்தி பாடல்கள்
  • சமூகப்பாடல்கள்
  • புதிய ஆத்திசூடி
  • பாப்பா பாட்டு

பாரதியின் படைப்புகள் 1949-இல் அந்நாள் தமிழக முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

பாரதியாரின் – சிறப்புப் பெயர்கள்

  • மகாகவி
  • தேசியக்கவி
  • விடுதலைக்கவி
  • பாட்டுக்கொரு தலைவன்
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி

பாரதியாரின் – பத்திரிக்கை பணி

  • சுதேசமித்திரன் – 1904 – துணையாசிரியராகப் பொறுப்பு – தினசரி இதழ்
  • சக்ரவர்த்தினி – 1905 இதழைத்தொடங்கினார் (மாத இதழ்)
  • இந்தியா -1907–வாரப்பத்திரிக்கை
  • பாலபாரதம் – 1908 – ஆங்கில இதழ்
  • விஜயா கர்மயோகி – 1909
  • சூரியோதயம் – 1910

பாரதியார் இறப்பு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 11 அன்று காலமானார்.

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNUSRB SI 2023 Sub-Inspector of Police | Tamil | Online Live Classes by Adda247
TNUSRB SI 2023 Sub-Inspector of Police | Tamil | Online Live Classes by Adda247

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil